Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Friday 25 December 2015


செய்தி : ஆர்.தசரதன் 
 
டிச         : 27.12.2015
 
பட்டர்வொர்த் 
 
சூப்பர் பைக் விபத்து ஆடவர் உயிரிழந்தார் 
 
 
பெர்லிஸ் மாநிலத்துக்கு ஒரு தொடரணியில் பங்கு பெற்ற ஆடவர் ஒருவர் நேற்று தமது இரு சக்கர சூப்பர் பைக் வாகனம்  கட்டுப்பாட்டை இழந்ததால் பரிதாபமாக உயிரிழந்தார் .இந்த சம்பவம் நேற்று முன்தினம் மதியம் 12.15 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலை 132.6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெர்மாதாங் பாவ் அருகில் நடந்தது.இந்த சம்பவத்தில் சிலாங்கூர் மாநிலத்தை சேர்ந்த ஷைரி என்பவர் கொள்ளபட்டதாக போக்குவரத்து போலீஸ்  பேச்சளார் சொன்னார்.இந்த சம்பவத்தை நேரில் கண்ட அடைவர் ஒருவர் ஷைரி பயணித்த சூப்பர் பைக் இருசக்கர மோட்டார் வாகனம்  கட்டுபாட்டை இழந்ததால் அந்த விபத்து ஏற்பட்டது என்றும் அந்த பேச்சாளர் மேலும் சொன்னார்.
 
சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்த  போக்குவரத்து போலீசார் ஆடவரின் சடலத்தை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக செபராங் ஜெயா பொது மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்தில் மற்ற ஏனைய தொடரணியில் பங்கு பெற்றவர்கள் இந்த விபத்தில் சிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
 
 
பட விளக்க 
 
விபதுக்குள்ளான ஆடவரின் சடலம் 

 
 





பட்டர்வொர்த் : பெர்லிஸ் ஒரு தொடரணி உள்ள ஒரு superbiker இன்று வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பெர்மாத்தாங் Pauh அருகே சவாரி போது அவரது இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து பின்னர் இறந்தார்.

அவர் , KM132.6 ஒரு உலோக வகுப்பி ஒரு northbound மோதிய பிறகு 12.15pm சம்பவத்தில், முகமட் Shairie Izwan Shuhairi உடனடியாக கொல்லப்பட்டார்.

போலீஸ் வட்டாரங்கள் ஷா அலாம், சிலாங்கூர், இருந்து Shairie , ஒரு விடுமுறை பயணம் பெர்லிஸ் ஒரு சூப்பர்பைக்கான தொடரணி ஒரு பகுதியாக இருந்தது என்று.

நேரில் கண்டவர்கள் Shairie அவரது இயந்திரம் வெளியேற்றப்பட்டார் என்று.

அவரது இயந்திரம் தொடரணியில் away.Other ரைடர்ஸ் தீங்கும் வரவில்லை 200 மீட்டர் இருந்தது .

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக Seberang 

Monday 21 December 2015

செய்தி : ஆர்.தசரதன் 
டிச. 22
பத்து கவான்,
 
 
 
பத்து கவான் மக்கள்  ஆலயம் மற்றும்  இடுகாட்டினை   பாதுகாப்பதில்  உறுதிவரை போராட உறுதி.
 
  
 
பினாங்கு மாநிலத்தை ஆளும் பக்காத்தான் அரசின் பதிவேட்டில் 100 ஆண்டுக்கு பழமை வாய்ந்த கட்டடங்கள், ஆலயங்கள் புரதான சின்னங்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று மாநில முதல்வர் லிம் குவான் எங்,  2008 ஆம்  ஆண்டு ஆட்சியமைத்த போது  அறிவித்திருந்தார்.
  
அதுபோலவே பத்து கவானிலுள்ள பகுதியில்  மலாய் கிராமம், சீனக் கோயில்கள், சீனக் கிராமங்கள் அனைத்தும் இதுவரையிலும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன நிலையில்,பலம் பெரும் இந்தியர்களுக்கு  சொந்தமான தோட்டம் மட்டும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றது.இந்த தோட்டத்து ஆலயம் மற்றும் இடுகாடு தனை  
மக்கள் பாதுகாக்க போராடி வருகின்றனர்.
     
2008 ஆம் ஆண்டு ஆட்சியேற்ற அடுத்த ஆண்டே மாநில அரசு இடுகாடு, ஆலயம் இரண்டையும் கையகப்படுத்த எடுத்த நடவடிக்கையை 2010 ஆண்டு எங்கள் ஆலய நிர்வாகமும் இங்குள்ள பொதுமக்களும் முறியடித்தோம் என்று ஆலயத் தலைவர் கோ.மணோகரனும், ஆலய அறங்காவலர் மு.வி.மதியழகனும் தெரிவித்தனர்.
   
அதோடு இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைகப்பட்டு விட்டது  என்று நினைத்திருந்த வேளையில், மீண்டும் இவ்வாண்டு ஜூன் மாதத்தில் இந்து அறப்பணி வாரியம் இப்பிரச்சனையை கையிலெடுத்ததன் காரணமாக தீமிதி திருவிழாவையும்  முதல் முறையாக  தடுத்து நிறுத்தினர். அடுத்து  இரண்டாவது  முறையாக  ஏற்பாடு செய்யப்பட்ட  தீமிதி திருவிழா நடத்த விடாமல் பல தொல்லைகள் தந்து நீதிமன்ற தடையுத்தரவு மூலம் தடுத்தனர்.வழக்கு தொடுத்து நடப்பு நிர்வாகமான எங்கள் நிர்வாகம் அதிகாரபூர்வமற்ற நிர்வாகம் என்று வாதிட்டனர். 17.12.15 இல் பினாங்கு உயர் நீதிமன்ற விசாரணையில் இது ஒரு அடிப்படையற்ற புகார் என கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. அத்தீர்பில் இரு தரப்பும் இனி எந்தவொரு அறிக்கையும் விட்டு யாரும் யாரையும் தாக்கி பேசக்கூடாது என்றும் வரும் 21.12.15 அன்று ஆலய அனைத்து ஆபரணங்களையும் நடப்பு நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.
   
அரசியல் கட்சிகளின் குருகிடலின் பேரில்  ஆர்.ஓ.எஸ் கடிதம் கொடுத்துள்கதாக பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.  ஆலய பதிவு ரத்தானதுக்கு காரணம் வரவு செலவு கணக்குகள் அல்ல,மாறாக  முகவரி மாற்றத்தால் ஏற்பட்ட புகாரின் அடிப்படை காரணம்  என்று ஆலயத் தலைவர் கோ.மணோகன் தெளிவுப்படுத்தி்னார்.
  
  இந்த தொட்டது மக்கள் தங்களின்  ஆலயம் இவ்வளவு பிரச்சனைகளை எதிர்நொக்குவது என்பது வேறு எங்கும் கிடையாது என்று  தேறிவித்த  நிலையில் பாரிசான் அரசாங்கத்திடம் சுமார் 40 ஆண்டுகளாக போராடி சிறுக சிறுகப் பெற்ற பாதுகாத்து இரண்டு கோயில்கள், இரண்டு இடுகாடுகள் போன்ற அடையாள சின்னங்கள், வருங்கால  சந்ததிகளுக்கு இம்மண்ணை  சேந்த மைந்தர்களால் வழிபாடு செய்ய பதுகாக்கபட்ட  வந்த புரதான சின்னங்களாக விளங்க வேண்டும் என்ற நல் நோக்கத்திற்காகவே என பொது மக்கள் விருப்பம் தெரிவித்தனர்.
    
இதனையெல்லாம் கட்டிக்காக்க துடிக்கும் எங்களின் நோக்கத்தை துணை முதல்வரான பேராசிரியர் நன்கு புரிந்துக் கொண்டு பத்து கவான் இந்தியர்களுக்கு இதனையாவது நிலை நிறுத்த முன்வாருங்கள் என்று கோரிக்கையை முன்  வைக்கின்றோம். . ஆக புரதான சின்னங்களை பாதுகாக்கவே எங்களின் போராட்டத்திற்கு அடித்தளம்.அதனைப் பெற எல்லோரும் ஒன்றுக்கூடி  நிற்கின்றோம் என்ற உறுதிப்பாட்டையும் அவர்கள் தெரிவித்தனர்.
    
இதனிடையே, முகநூலில் பேராசிரியர் ராமசாமி ஆலயத்தையும், மற்ற ஆரசியல் கட்சி மற்றும் , ஆர்.ஒ.எஸ்இக்கு எதிரான கருத்துக்களை முக நூலில்   வசைப்பாடி எழுதியுள்ள செயலுக்கு நேற்றைய முன்தினம்  போலிஸ் புகார் ஒன்றை  ஆலய நிர்வாகத்தினர்  மற்றும் பொதுமக்களால் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
பட விளக்கம் 
 
 
போலீஸ் புகர் செய்த ஆலய தலைவர் கோ.மணோகரனுடன் பொது மக்கள் 
 
 
 
 
 
 

செய்தி : ஆர்.தசரதன்
டிச         : 22.12.2015
பட்டர்வொர்த்



பினாங்கு தமிழர் சங்கத்தின்  ஏற்பாட்டில் தொழில் பயிற்சி பட்டரை

இனம் என்ற இடத்தில் தமிழர் என்று குறிப்பிட ஆவனம்


இளைஞர்கள் பொருளாதார துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில்,பினாங்கு மாநில தமிழர் சங்கம் தொழில் சுய பயிற்சி பட்டரை ஒன்றை கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்குள்ள சோனி கொம்லேக்சில் சிறப்புடன் ஏற்பாடு செய்திருந்தது .இந்த தொழில் பயிற்சி பட்டறையில் 150 இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
 
 
இளைஞர்கள் சுய தொழில் ஈடுபட்டு சொந்தமாக தொழில் துறைகளில் சிறப்புடன் தங்களின் எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் இந்த சுய தொழில் பயிற்சி பட்டரை ஏற்பாடு செய்ய பட்டதாக பினாங்கு மாநில தமிழர் சங்கத்திர் தலைவர் திரு.எம்.விசு தமது வரவேர்புரையில் கூறினார்.
 
இந்நிகழ்வில் இவ்வட்டாரத்தில் சிறந்த வர்தகருமான டத்தோ ஸ்ரீ ஆர்.எ.அருணாசலம் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டு நிகழ்வை அதிகாரபூர்வமாக தொடக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.அவர் தமதுரையில் இளைஞர்கள் எதிர்நோக்கும் கல்வி, பிறப்பு பத்திரம்,தமிழர்களின் பொருளாதார பிரசனை ஆகியவற்ற களைய சிறந்த திட்டமிட்டு செயல்பாட்டை உருவாக்க பினாங்கு  மாநில தமிழர் சங்கத்தினருக்கு அவர் தமது ஆலோசனை கூறினார்.
 
இந்த சுய தொழில் பயிற்சி பட்டரையில் சிறந்த மூன்று பேச்சாளர்களாக திரு.கே.எம்.ரவிச்சந்திரன்,திரு.கே.கிருஷ்ணசாமி   மற்றும்   திரு பி. இராஜேந்தி
ரன் ஆகியோர் பொருளாதார சிந்தனை மற்றும் வியாபார வாப்புகளை முறையாக இளைஞர்கள்  பெரும் வழிமுரைதனை சிறப்புடன் விளக்கினார்.
 
இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய மாநில தமிழர் சங்கத்தின்  ஆலோசகர் திரு.பி.இராஜேந்திரன்,பிறப்பு பத்திரத்தில் குறிப்பிட பட்டுள்ள இனம் என்ற பகுதியில் இந்திய என்பதை தவிர்த்து தமிழர் என்று குறிப்பிட அரசாங்கம் அவன செய்ய வேண்டும் என்று சொன்னார்.நாட்டில் மற்ற இனத்தவர் தங்களின் இனத்தை சரியாக குறிப்பிட தகுதி பெற்றிப்பதை அரசாங்க ஆவணத்தில் போல் "தமிழர்" என்று குறிப்பிட ஏன் ? முடியாது என்ற கேள்வியையும் அவர் முன் வைத்தார்.மற்றவர்கள் தமிழர்களை சிறுமை படுத்தும் போக்கினை விட்டு விட்டு,நாட்டில் உள்ள  இந்திய மக்களில் தொகையில் உள்ள 70% மக்கள் தமிழர்கள் என்பதை திரு .பி.இராஜேந்திரன் நினைவுறுத்தினார்.
 
இந்நிகழ்வில் சிறப்பு பிரமுகர்களாக தொழில் அதிபர் திரு.சொந்தராஜன்,பெலித்தா இந்திய முஸ்லிம் இயக்க தலைவர் திரு.நசீர்,தேசிய தமிழ் சங்க பொருப்பாளர்கள் திரு.ரவி.திரு.இராஜேந்திரகுமார்,மாநில தமிழர் சங்கத்தின்  ஆலோசகர் ஆசிரியர் திரு.இராசமாணிக்கம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
 
பட விளக்கம் 
 
1. டத்தோ ஸ்ரீ ஆர்.எ.அருணாசலம் அவர்களுக்கு  மாநில தமிழர்  சங்க தலைவர் திரு.எம்.விசு நினைவு சின்னம் வழங்கியபோது 
 
2.நிகழ்வு ஏற்பாட்டுக்குழுவினரின் குழுப்படம்  
 
3.சுய தொழில் பயிற்சி பட்டரையில் கலந்து கொண்ட பயிற்சியாளர்கள் 
 
 
 


 

Thursday 3 December 2015

செய்தி : ஆர்.தசரதன்

ஆக்        : 08.10.2015

பினாங்கு


பினாங்கு மாநில தபேலா இயக்க விருந்தில் மாணவர்கள் கௌரவிப்பு



பினாங்கு மாநில தபேலா இயக்க ஏற்பாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம்   இந்த இயக்க மாணவர்கள் நீண்ட நீரம் தபேலா இசைத்து மலேசியா சாதனை புத்தகத்தில்  இடம் பெற்றதை கொண்டாடும் விதத்தில் விருந்து நிகழ்வு  ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்புடன்  ஏற்பாடு செய்யபட்டது.இந்த விருந்து நிகழ்வு இங்குள்ள பினாங்கு சுங்கை நிபோங்  பேஸ்தா இருப்பிட பகுதியில் உள்ள மண்டபத்தில் நடந்தது.இந்த நிகழ்வு மாநில தபேலா இயக்கத்தின் தலைவர் டாக்டர் எம்.சரவணன் அவர்கள் தலைமையில் நடந்தது.


நிகழ்வில் தொடக்க அங்கமாக ஷேன் ஹோம்  ஆசிரமத்தை சேர்த்த மாணவ மாணவிகள் சிறந்த முறையில் தபேலா இசையை முழங்கி நிகழ்வை தொடக்கி வைத்தனர்.அதனை தொடர்ந்து நிகழ்வின்  தலைமையுரையை  மாநில தபேலா  இயக்கத்தின் தலைவர்  டாக்டர் எம்.சரவணன் உரையாற்றினார் அவர் தமதுரையில் மாநில தபேலா இயக்கத்தின் நீண்ட நாள் கனவான மலேசியா சாதனை புத்தகத்தில்  இடம் பெற ஒரு முயற்சியாக நீண்ட நேரம் தபேலா இசை நிகழ்வை  வெற்றிகரமாக நடைபெற  அயராது உழைத்த தமது மாநில தபேலா இயக்க நிர்வாகத்தினர்,மாநில தபேலா இயக்கத்தின் ஸ்தாபகர் மாஸ்டர் சக்திவேல்,நன்கொடைகளை வழங்கிய என்ரிகோ நிறுவன உரிமையாளர் எஸ்.கே .சுந்தரம்   ,வள்ளல் ரங்கசாமி பிள்ளை குடும்பத்தினர் மாநில முதல்வர் லிம் குவான் எங்,பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமாசாமி,ஸ்ரீ டெலிமா சட்ட மன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.ராயர் மற்றும் மாநில தபேலா இயக்கத்தின் பயிற்சி  மாணவர்கள்   அனைவருக்கும் தமது நன்றியை அவர்  தெரிவித்துக் கொண்டார்.

இதனுடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.ராயர் அவர்கள் தமதுரையில் மலாய்சியா சாதனை புத்தகத்தில் சதிட்ட மாநில தபேலா இயக்கத்தை வெகுவாக பாராட்டிதுடன்,தற்போது நாட்டில் சில பொறுப்பற்ற நபர்களால் இனங்களிக்கிடையே பதத்தமான விமர்சனக்களை செய்த போதும் பல இன மக்களை இந்த நிகழ்வில் தமது இசையின் மூலம் ஒன்று படுத்திய மாஸ்டர் சக்திவேல் அவர்களை அவர் வெகுவாக பாராட்டினார்.

இரவு விருந்துடன் கூடிய இந்த நிகழ்வில் சாதனை புரிந்த மாணவர்கள் அனைவருக்கும் மலேசியா சாதனை புத்தக நினைவு சான்றிதழ் வழங்க பட்டது,இந்த சான்றிதழ்களை மாநில தபேலா இயக்கத்தின் ஸ்தாபகர் மாஸ்டர் சக்திவேல் எடுத்து வழங்கினார்.இந்த வ்வரலற்று சிறப்பு நிகழ்வில் சிறப்பு பிரமுகர்களாக ஸ்ரீ டெலிமா சட்ட மன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.ராயர், என்ரிகோ நிறுவன உரிமையாளர் எஸ்.கே சுந்தரம்,டத்தோ கோரிஸ்,என்.ஆர்.ரத்னம் பிள்ளை,மாஸ்டர் குமரன்  உட்பட தபேலா  பயிற்சி மாணவர்களின் குடும்பத்தினரும்  திரளாக கலந்தி சிறப்பித்தனர்.


பட விளக்கம்

1.சாதனை மாணவர்களுடன் மாஸ்டர் சக்திவேல்

2. நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு பிரமுகர்கள்

3.நிகழ்வில் கலந்து கொண்ட பொது மக்களின் ஒரு பகுதியினர்

5.சிறப்பு தபேலா வாசிட்ட மாணவர்களின் ஒரு பகுதி 
 
 
 
 
 
 
 
 
   

செய்தி : ஆர் . தசரதன்
டிச         : 03.12.2015
ஜார்ஜ்டவுன்


பினாங்கில் ஜனவரி தொடக்க 3 பெர்ரி படகுகள் மட்டுமே சேவையாற்றும்
                                   துறைமுக வாரியம் தகவல்!

     

             பினாங்கில் அடுத்த ஆண்டு ஜனவரி திங்கள் 1ஆம் நாள் முதல் பினாங்குத் தீவிலிருந்து பெரு நிலத்திற்கும் இதே போன்று பெரு நிலத்திலிருந்து பினாங்கு தீவிற்கும் 3 பெர்ரி படகுகள் மட்டுமே சேவையாற்றும் பினாங்கு மாநில துறைமுக வாரியம் அறிவித்துள்ளது.

            இந்த விவகாரம் தொடர்பில் அதன் தலைமை நிர்வாகி ரோஸிஹான் அடி பகர்தீன் வெளியிட்டிருக்கும் ஓர் அறிக்கையின் வழி, இந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இதன் பொருட்டு பயணிகளும் வாகனமோட்டிகளும் தங்களின் பயணங்களை மாற்று வழிகளில் மேற்கொள்ளுமாறும் இதன் வழி அறிவுறுத்தப்பட்டது.

            2016ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் முதல் பெரு நிலத்தின் சுல்தான் அப்துல் ஹலீம் துறைமுகத்திலிருந்து முதல் பெர்ரி படகின் தொடக்கம் காலை 6.00 மணிக்கு இயக்கப்படுமென்றும், இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் அடுத்தடுத்து படகுகள் இயக்கப்பட்டு கடைசிப் படகு நள்ளிரவு 11.00 மணியோடு நிறைவடையுமென்று  ரோஸிஹான் குறிப்பிட்டுள்ளார்.

           இதே போன்று ஜோர்ஜ்டவுன் நகரின் ராஜா துன் ஊடா துறைமுகத்திலிருந்து முதல் பெர்ரி படகு காலை 6.30 மணிக்கு தொடங்கி, இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் அடுத்தடுத்த படகுகள் இயக்கப்பட்டு, கடைசிப் படகு நள்ளிரவு 11.30 மணியுடன் ஓய்வு பெறுமென்று அவர் தனது அறிக்கையின் வாயிலாக விவரித்துள்ளார்.

           பெர்ரி படகுத் துறைக்கான நிர்வாகப் பிரிவின் செயற்குழு கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பில் இறுதிக் கட்ட முடிவு எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இதுவே அடுத்த ஆண்டு முதல் தங்களின் பெர்ரி  படகுச் சேவைக்கான புதிய அட்டவணையாக   இதனை கருத்திற் கொள்ள வேண்டுமென்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

                                     
பட விளக்கம்:

பினாங்கு மாநிலத்தில் இயக்கப்படும் பெர்ரி படகுகளின் தோற்றம்.         

செய்தி : ஆர்.தசரதன்

டிச         : 03.12.2015

ஜார்ஜ்டவுன் 
     
 


பினாங்கில் தென்மேற்கு மாவட்டத்தில் வெள்ளப்  பேரிடர் ஏற்பட          
         குப்பைக் கூளங்களே காரணம்  ஆய்வில் கண்டரிவு ...
   

       பினாங்கு மாநிலத்தின் தென்மேற்கு மாவட்டத்தில் சமீப காலமாக அடிக்கடி நிகழ்ந்து வரும் வெள்ளப் பேரிடருக்கு அங்கிருக்கும் பலப் பகுதிகளில் நிறைந்திருக்கும்  குப்பைக் கூளங்களே மூல காரணமென்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக, வெள்ளப் பேரிடர் மற்றும் நிவாரணப் பணிகளுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் இயாவ் தெரிவித்துள்ளார்.

       இந்த மாவட்டத்தின் ஆங்காங்கே மிகுந்திருக்கும் குப்பைக் கூளங்களால், சுங்கை திராம், ரெலாவ், தெல்லோக் கும்பார், பண்டார் பாயான் பாரு கம்போங் செரோனோக், பத்து மவுங் மற்றும் பாயான் லெப்பாஸ் அனைத்துலக விமான நிலையம் போன்றப் பகுதிகளில் வெள்ளம் சூழ்கின்ற அவல நிலைக்கு  இங்கு தெல்லோக்  கும்பார் பகுதியில் அமைந்திருக்கும் வடிகால் மற்றும் நீர் பாசனத் துறையினரால் இயலாத கதி ஏற்பட்டுள்ளதாக அவர் விவரித்துள்ளார்.

       இப்பகுதிகளில் பாய்கின்ற ஆறுகளில் குப்பைக் கூளங்கள் பெருமளவில் நிறைந்து சீரான  நீரோட்டத்திற்கு வழியின்றி அடைப்புகளை ஏற்படுத்துவதால், மழைக் காலங்களில் வெள்ள நீர் வெளியேறுவதற்கு தடை நிகழும் அவலம் சூழ்ந்து, ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கும் நிலைமையைக் காண முடிவதாக சாவ் சுட்டிக் காட்டியுள்ளார்.

        கடந்த சில தினங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் சுமார் 2 மணி நேரமாக இடை விடாமல் பொழிந்த மழையால் 80 செ.மீ அளவுக்கு மழை பதிவானதாகக் கூறிய அவர், மிகையான இந்த மழை நீர், அருகிலிருக்கும் ஆறுகளின் நீரோட்டத்தின் வாயிலாக சீரான நிலையில் வெளியேற இயலாமல் குப்பைக் கூளங்களின் தடையால் தேங்கி நின்று வெள்ளப் பெருக்கினை ஏற்படுத்தியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

        இது தவிர பத்து மவுங் பகுதியில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும்  கட்டுமானப் பணிகளால்  வெள்ளம் ஏற்படுவதற்கு காரணமாகி விட்டதாக சாவ் செய்தியாளர்களிடம் கூரினார்.இதன் பொருட்டு இங்கிருக்கும் ஆறுகளிலும் கட்டுமானப் பகுதிகளின் சுற்றுப் புறங்களிலும் காணப்படும் குப்பைக் கூளங்கள் மற்றும் அடைப்புகளை சீரமைப்பதற்கான பணிகளில் வடிகால் மற்றும் நீர்பாசனத் துறையினர் ஈடுபடுவதற்கு ஆயுத்தமாகி இருப்பதாகக் கூறியிருக்கும் சாவ்,நீர் பாசனத் துறையின் நீர் உறிஞ்சு இயந்திரமும் இங்கு சீராக செயல்படுவதற்கு உறுதி காணப்பட்டிருப்பதாகவும் அறிவித்துள்ளார்.   

        இப்பகுதிகளில் உள்ள கால்வாய்களையும்  சாக்கடைகளையும்   தூர்வாரி தூய்மைப்படுத்தும் சீரமைப்புப் பணிகளை நகரசபையின் உதவியுடன் மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிக்கப்பட்டிருப்பதால், இப்பிரச்சனைக்கு விரைந்து சுமூகத் தீர்வு காண்பதற்கு வழி பிறந்திருப்பதாக சாவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

                                       

பட விளக்கம்:

குப்பைக் கூளங்கள் நிறைந்திருக்கும் ஆறுகளை விளக்கும் படக் காட்சிகள்.
 
சமிபத்தில் ஏற்பட்ட வெள்ள நிலைமையில் ஒரு பகுதி 

Monday 23 November 2015

செய்தி : ஆர்.தசரதன்

நவ         : 24.11.2015

ஜார்ஜ்டவுன்



சமூக ரீதியில் பிளவு கொள்ளாமல்  இந்தியச் சமுதாயமாக  மேன்மை கொள்வோம் .....
                   
டத்தோஸ்ரீ ரமேஷ் ராவ்  கோரிக்கை 

             
            நாட்டிலுள்ள உள்ள இந்தியர்களி ன்  பெரும்பகுதியினர்  தனித் தனி சமூகமாக தங்களை அடையாளம் காட்டிக் கொள்வதில் ஆர்வம் கொண்டிருப்தை தவிர்த்து ,  இந்தியச் சமுதாயம் என்ற உணர்வோடு நாட்டிலுள்ள இந்தியர்களாகிய நாம் ஒருமித்த கருத்துடன்  மேன்மை கொள்ள வேண்டுமென்று மலேசிய சிந்தனை மற்றும் சமூக அக்கறை இயக்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ ரமேஷ் ராவ்  கோரிக்கை  விடுத்தார்

தனி சமூக பிரிவை   கருதாமல்    இந்தியர்களாகிய நாம்  ஒருமித்த சமுதாய உணர்வு எல்லோரிடமும் மேலோங்க  வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.இன் நாட்டில் வாழ்கின்ற  மற்ற இன சமுதாய  மக்களை  கண்ணுற்றால் அவர்கள் யாவரும் சமுதாய ரீதியாக  ஒன்றிணைந்து செயல்பட்டு  வெற்றியடைந்ததை அவர்  சுட்டிக் காட்டினார், அதைப் போன்று இந்தியர்கள் யாவரும் சமூக அடிப்படையில் பிரித்தாளும்சமூக ரீதியான பிளவுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சமுதாய அக்கறையோடு ஒன்றுபட்டு நிற்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்.

            நேற்று முன்தினம் இங்கிருக்கும் பினாங்கு சாலையில் அமைந்துள்ள பிரபல நட்சத்திர விடுதியில் நடைபெற்ற பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவையின் 26ஆம்ஆண்டுப்  பொதுக் கூட்டத்திற்கு சிறப்புப் பிரமுகராக வருகையளித்து உரையாற்றுகையில், டத்தோஸ்ரீ ரமேஷ் ராவ் கிருஷ்ணா வருங்கால இந்திய சமுதாயம் இந்த சிந்தனை சமூக மறுமலர்ச்சிக்கு  அடித்தளம் காண வேண்டுமென்று வலியுறுத்தினார்.
 
             பள்ளிக்கூடங்களில் இந்திய மாணவர்கள் மத்தியில் சமய சிந்தனையை விதைக்கும் வகையில், வெள்ளிக்கிழமைகளில் பாரம்பரிய உடைகள் அணிவதற்கு பிரதமரிடம் அனுமதி கோரும் முயற்சியில் தாம் களமிறங்கியிருப்பதாகக் கூறிய அவர், இதற்காக இந்தும் இளைஞர் இயக்கங்கள் வாயிலாக கையெழுத்து பெறும் நடவடிக்கைக்கு தாம் உற்சாக மூட்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.

             முன்னதாகப் பேசிய பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவைத் தலைவர் என்.மகேந்திரன்,மாநிலத்திலுள்ள மொத்தம் 25 கிளைகளின் ஆதரவுடன் இயக்கம் துடிப்புடன் செயல்பட்டு வருவதாக பெருமிதம் கூறினார்.புதியவர்களின் வரவாலும் புதிய சிந்தனைகளின் மலர்ச்சியாலும் இயக்கத்தின் சார்பில் இந்திய சமுதாயதிற்காக பல்வேறு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டிருப்பதை அவர் பட்டியலிட்டுப் பேசினார்.எதிர்வரும் காலங்களில் சமுதாய நலங்காணும் பயனுள்ள பணிகளை மேற்கொள்வதற்கு இயக்கத்தின் சார்பில் விவேகத் திறனான செயல்பாடுகள் திட்டமிடப்படுமென்றும் மகேந்திரன் கூறினார்.

              இந்நிகழ்வுக்கு தேசிய இந்து இளைஞர் பேரவையின் செயலாளர் திரு.எஸ்.அனந்தன் ,பினாங்கு இளைஞர் மன்ற செயலாளர் ஹபிஸ் அலி ,மாநில பேரவையின் மாநிலத்தின் முன்னாள் பேரவைத் தலைவர் ஆர்.ரமணி,மாநில பேரவை ஆலோசகர் எம்.பார்த்திபன்,பினாங்கு மாநில மக்கள் முற்போக்கு கட்சியின் இளைஞர் பகுதி செயலாளர் திரு.மோகன், உள்பட மாநில இந்து இளைஞர் பேரவையின் செயலவை உறுப்பினர்கள் யாவரும் வருகையளித்திருந்தனர். இந்நிகழ்வில் சிறப்புப் பிரமுகர்களாகப் பங்கேற்றனர்.

                                                     

 



Wednesday 28 October 2015


செய்தி : ஆர்.தசரதன்

அக        : 28.10.2015

கூலிம்


கெடா மாநில இந்திய இயக்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின்  விருந்து
               மக்கள் முரசு கூவி.தியாகராஜன் டாக்டர் முரளிக்கு  பாராட்டு

கெடா மாநில இந்திய இயக்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டிலும்,கூலிம் பண்டார் பாரு மாவட்ட இந்திய இயக்கங்களின் ஒருங்கிணைப்பு பேரவை ஆதரவில்  கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்குள்ள தாமான் செலாசேவில் அமைந்துள்ள இயஸ் ஹாய் லேன் உணவகத்தில் பாராட்டு விருந்து நிகழ்வு சிறப்புடன் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் ஏற்பாட்டுக்குழு தலைவராக கூலிம் மாவட்ட தலைமை காவல் நிலையத்தின் கோப்ரல்  எஸ்.சக்திவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், அவருக்கு உதவியாக திரு அரவ் லோகநாதன்   நிகழ்வை  செம்மையாக நடத்தினர்.
இந்நிகழ்வில் சிறப்பு வருகையாளராக கெடா மாநில இந்திய இயக்கங்களின் ஒருங்கிணைப்பு பேரவையின் ஆலோசகர் டத்தோ அஸிசான் பின் மாட்  கூலிம் மாவட காவல் படையின் தலைவரின் பிரதிநிதியாக எஸ்பி அமீர் ஆ தோங்,   மலேசிய MCQ தேசிய  தலைவர் திரு ஜீவிதன், பினாங்கு மாநில இந்தியர்  மேம்பாட்டுக் கழக தலைவர் திரு.பாலன்,  பினாங்கு மாநில இந்தியர்  மேம்பாட்டுக் கழக ஆலோசகர் திருமதி  சரஸ்வதி  , கூலிம்  நகரசபை  உறுப்பினர் திரு.மாரிமுத்து,திரு.மணிவாசகம்,கூலிம் தெலுங்கு சங்க தலைவர் திரு.சீனிவாசகராவ்,ஜுரு எம்ஜிஆர் மன்ற தலைவர் திரு.மா.ராஜகோபால் மற்றும் உடன் அழைக்கபட்ட பிரமுகர்களும் கலந்து 
கொண்டனர்.

இந்த  நிகழ்வில் சிறப்புரையாற்றிய கெடா மாநில இந்திய இயக்கங்களின் ஒருங்கிணைப்பு பேரவையின் ஆலோசகர் டத்தோ அஸிசான் பின் மாட் இந்த பிரிதியோக விருந்து நிகழ்வு அண்மையில் ஷா அலாம் கிளாப்பில் நடைபெற்ற மலேசியா இந்திய இயக்கங்களின் ஒருங்கிணைப்பு பேரவையின் பேராளர் மாநாட்டில் தேசிய உதவி த்தலைவராக தேர்வு  செய்யப்பட்ட மக்கள் முரசு கோவி.தியாகராஜன் மற்றும் மத்திய செயலவை உருப்பினராக தேர்வு செய்யப்பட்ட டாக்டர் எம்.முரளி ஆகிய இருவருக்கும் பாராட்டு தெரிவிக்கும் பொருட்டு இந்த பாராட்டு விருந்து நிகழ்வு ஏற்பாடு செய்யபட்டதாக கூரினார்.மேலும் அவரின் உரையில் கெடா மாநிலத்தில் இந்திய அமைப்புகளின் தலைசிறந்த தலைவராக கோவி.தியாகராஜன் இவ்வட்டார மக்களுக்கு செவையற்றியதை   நினைவு கூர்ந்து கூறியதுடன் தேசிய உதவி தலைவராக தேர்வு பெற்ற  கோவி.தியாகராஜன் மற்றும் டாக்டர் முரளிக்கு தமது  வாழ்த்தினை கூறி  உரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்வில்  கூலிம் மாவட்ட போலிஸ் தலைவரின் பிரதிநிதியாக எஸ்பி அமீர் ஆ தோங்  கலந்து கொண்டார் அவரின் உரையில் கூலிம் மாவட்ட மாவட்ட காவல் துறையுடன் அணுக்கமான தொடர்பை வைத்திருக்கும் கெடா மாநில இந்திய ஒருங்கிணைப்பு பேரவைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன்,மாவட்டத்தில் இந்திய இளைஞர்களுக்கு தேவைப்படும் நல்வழி ஆலோசனைகளை வழங்க காவல்துறை தயராக இருப்பதாகவும் உறுதியளிதார்.தமது இறுதி  உரையில் கோவி.தியாகராஜனுக்கும்  டாக்டர்  முரளிக்கும் தமது வாழ்த்தை அவர் தெரிவித்துக் கொண்டார்.

நிகழ்வில்  நிறைவில்  உறையாற்றிய கோவி.தியாகராஜன் தமது நன்றியை  வருகை  புரிந்த அணைத்து இயக்க தலைவர்களுக்கும்  தெரிவித்ததுடன் ,தமது வட்டாரத்தில்  உள்ள மக்களுக்கு தொடர்து சேவையற்ற உறுதி கொள்வதாகவும்,மாவட்ட காவல்துறைக்கு அணுக்கமான  ஒத்துழைப்பை  வழங்க இருப்பதாகவும் சொன்னார்.நிகழ்வில் கலந்து கொண்ட தலைவர்கள் கோவி.தியாகராஜன் மற்றும் டாக்டர் முரளிக்கு பொன்னாடை மன்றும் மலர் மலைகளை அணிவித்து கௌரவபடுத்தினர். கோப்ரல்  எஸ்.சக்திவேல் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு முடிவடைந்தது.



பட விளக்கம்

1.நிகழ்வில் கலந்து கொன்ட தலைவர்களின் ஒரு பகுதியினர்

2..சிறப்பு செய்யபட்ட கோவி.தியாகராஜனுடன் டத்தோ அஸிசான பின் மாட் மற்றும் அரவ் லோகநாதன்

3.சிறப்பு செய்யபட்ட டாக்டர் முரளியுடன் கோப்ரல்  எஸ்.சக்திவேல் (இடம் )

4.நிகழ்வில் கலந்துகொண்ட சிறப்பு பிரமுகர்கள்

5.வருகையாளர்களின் ஒரு பகுதியினர்.





Monday 28 September 2015


செய்தி    : ஆர்.தசரதன்

செப்         : 30.09.2015

ஜோர்ஜ்டவுன்




ஆஸ்ட்ரோலயா கடற்படை நீர்முழ்கி கப்பல் பினாங்கு வந்தது



ஆஸ்ட்ரோலியா கடற்படைக்கு சொந்தமான  நீர்முழ்கிகப்பல் ஒன்று  பினாங்கு மாநிலத்துக்கு வந்துள்ளது.நேற்று இந்த கப்பல் இருப்பதை பெரி சேவையை பயன் படுத்திய பொதுமக்களில் சிலர் இக்கப்பல்  கண்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிபடுத்தினார்.
 
ஹாமஸ்  ஷீண்  என்று அழைக்கப்படும் அந்த நீர்முழ்கி கப்பல் நேற்றைய முன்தியம் காலை 11 மணியளவில் பினாங்கு துறைமுகத்திக்கு வந்ததாக ஆஸ்ட்ரோலியா கடற்படை பேச்சாளர் ஒருவரின் உறுதிபடுத்தினார்  .இந்த நீர்முழ்கி கப்பல் எதிர்வரும் அக்டோபர் 2ஆம் நாள் வரையில் பினங்கில் இருக்கும் என்றும் அதனை தொடர்ந்து சபா மாநில சென்று  அங்குள்ள  கடற்படையுடன் 12ஆம்  நாள் மற்றும் 13ஆம் நாள் போர்  பயிற்சியை முடிதுகொண்டு  ஆஸ்ட்ரோலியா நாட்டுக்கு திரும்பும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
 
 
படவிளக்கம்
 
ஆஸ்ட்ரோலயா நாட்டு கடற்படைக்கு  சொந்தமான நீர்முழுகி கப்பல் தோற்றம் 
 
 
 
 
 





 

Wednesday 16 September 2015


செய்தி  : ஆர்.தசரதன்
செப்      : 18.09.2015
புக்கிட் மெர்தாஜம்



மா.ராஜகோபால் அவர்களின் 70ஆம் பிறந்த நாள் விழாவில்
சமூதாய தலைவர்கள் வாழ்த்து



புக்கிட் மெர்தாஜம் ஜூரு வட்டாரத்தில் சமூக சேவையாளரும்,ஜூரு தேவி ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தின் தர்மகர்தாவும்,புக்கிட் மெர்தாஜம் ஐ பி.எப் தொகுதி தலைவருமான திரு மா.ராஜகோபால் தமது 70ஆம் ஆண்டு பிறந்த தின விழாவை தமது ஜூருவில் உள்ள தமது  இல்லத்தில் நேற்றைய முன்தினம் கொண்டாடினார்.

அவரின் பிறந்த தினத்தின் கொண்டாடத்தில் அரசியல்,சமூக,அரசு சார்பற்ற தலைவர்கள் மாலைகளை அணிவித்து திரு மா.ராஜகோபால் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டனர்.இந்த நிகழவில்  சிறப்பு வருகையாளர்களாக பினாங்கு மாநில ஐ பி.எப் பினாங்கு மாநில தலைவர் திரு க.எழுமலை,கெடா மாநில ஐ பி.எப் தலைவர் திரு வேலாயுதம்,பினாங்கு மாநில ஐ பி எப் செயலாளர் திரு தங்கராசு,பினாங்கு மாநில இந்தியர் மேம்பட்டுக் கழக தலைவர் எம்.பாலன், பினாங்கு மாநில மலேசியா இந்து இளஞர் பேரவை தலைவர் ந.மகேந்திரன்,கூலிம் பாண்டார் பாரு இந்தியர் ஒருங்கிணைப்பு குழு தலைவர் கோவி.தியாகராஜன்,நிபோங் திபால் நாணய கூட்டுரவு சங்க தலைவர் ஜெ.தியாகராஜன்,பாடங் செராய் கெரக்கான் கட்சி தலைவர் எம்.மாரிமுத்து ,டாக்டர் எம் .முரளி,ஜூரு பெற்றோர் ஆசிரியர் முன்னால் தலைவர்கள் ம.நாராயணசாமி ,மா.வீரன்,பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் திரு காளிதாஸ்,செபெராங் பிறை தமிழர் முன்னேற்ற கழக செயலாளர் திரு கணேசன்,ஜூரு தேவி ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய தலைவர் சுரேஷ் சோமு,புக்கிட் மெர்தாஜம் ஐ பி எப் தொகுதி பொறுப்பாளர் எஸ்.பன்னிர்செல்வம்  உள்ளிட்ட மா.ராஜகோபால் அவர்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் கலந்து சிறப்பித்தனர்.


பட விளக்கம் 

மா.ராஜகோபால் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூரிய  எம்.பாலன் உடன் திரு வேலாயுதம் மற்றும் திரு எழுமலை 







மகனை தேடும்   தந்தை





புத்தி சுவாதீனம் உடைய தமது மகன் மா.பாண்டியன் வீட்டை விட்டு சென்று  இன்னும் வீடு திரும்பாதது கண்டு தாம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக மா.பாண்டியனின் தந்தை திரு மாணிக்கம் சொன்னார்.29 வயதான தமது மகனை  எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில்  இது குறித்துசிம்பாங் ஆம்பாட் காவல் நிலையத்தில் புகர் ஒன்றையும் தாம் செய்திருப்பதாக  அவர் மேலும்  சொன்னார்.

ஒரு விபத்தின்காரணமாக தமது மகனின் தலையில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து தனிமையிலே என்றும் இருந்த  தமது மகன் வீட்டை விட்டு கடந்த 12.08.2015 ஆம் நாள் சென்று விட்டதாக நண்பனிடம் தெரிவித்தார்.தமது மகனை காணும் பொது மக்கள் 017-4064183என்ற  தமது கை தொலைபேசிக்கு அழைத்து தகவல் கொடுத்து உதவுமாறு  திரு மாணிக்கம் பொது மக்களை கேட்டுக்கொண்டார்.



புட்டர்வொர்த்   இந்து இளைஞர் இயக்க ஏற்பாட்டில் கணபதி ஹோமம்


கடந்த ஞயிற்றுக்கிழமை கலை மணி 8.30 க்கு  இங்குள்ள தாமான் ரியாங்,பட்டர்வொர்த் பகுதியில் அமைந்துள்ள இயக்க அலுவலகத்தில் கணபதி ஹோமம் ஒன்று சிறப்புடன் நடைபெற்றது இந்த ஹோமம் உடல், மனம், ஆன்மிக அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கி வாழ்வில் வெற்றி கிடைக்க  வேண்டியும்  பொருளாதாரம், படிப்பு, ஆரோக்கியம் போன்ற அம்சங்களில் உள்ள தடைகள் நீக்க பொருட்டு இந்த   கணபதி ஹோம் நடத்தபட்டதாக நிகழ்வின் ஏற்பட்டுக்குழுவின் தலைவர் எஸ்.லோகநாதன் சொன்னார்
இந்த கணபதி ஹோம நிகழ்வுக்கு சிறப்பு பிரமுகராக மலேசியா இந்து இளைஞர் பேரவை தலைவர் சிறப்பு வருகை புரிந்ததுடன் அவருடன் மலேசியா இந்து இளைஞர் பேரவையின் துணை செயலாளர் எ,ஜெயராமன்,மலேசியா காற்பந்து முன்னால் பயுற்றுனர் டத்தோ பி.குப்பன்,மாநில இந்து இளைஞர் பேரவை உதவி தலைவி ரேகா சண்முகம்,மற்றொரு உதவி தலைவர்
வி,கே,விக்னேஸ்வரன்,பட்டர்வொர்த் இந்து இளைஞர் இயக்க தலைவர் எஸ்/லோகநாதன்,மாநில பேரவை ஆலோசகர் எம்,பார்த்திபன் மற்றும் இயக்க உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த சிறப்பு ஹோமத்தை பட்டர்வொர்த் சித்தி விநாயகர் ஆலயத்தின் குருக்கள் திரு,சுப்ரமணியமும் அவருக்கு உதவியாக சென்னையை சேர்ந்த திரு  ரவி குருக்கலும்  செய்தனர்.பூரண கும்ப அலங்காரதுடன் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு வருகை புரிந்த இயக்க பொறுப்பாளர்களுக்கு பிரசாதம் வழங்க பட்டது,

Saturday 5 September 2015




நிகழ்ச்சி நிரல் 
  

  1.குரு மந்திரம் : திரு  விஜய் குமார் 

  2.வரவேற்புரை ஆர்.ரமணி  ஏற்பாட்டுக்குழு செயலாளர்

  3. பரதநாட்டியம் குமாரி 

  4. தலைமையுரை எம்.இராமையா தலைவர் மலேசியா ஸ்ரீ தச்சணா 

      ஒளி  ஓலி தியான குருகுலம்

  5. தபேலா இசை கலைக் குழு : சர்மினி தனபாலன் ஹாத்ரிக்      

        மருதன் 

    6. திறப்புரை : பேராசிரியர் பி.இராமசாமி பினாங்கு மாநில          

        துணை முதல்வர்     

    7. சிறப்புரை : மலேசியா ஸ்ரீ தச்சணா  தியான குருகுல                        

          ஸ்தாபகர் பரஹம்சர் ஸ்ரீ மகாகுரு பி.மேகவர்ணான் 

     8. திறப்புவிழா குத்துவிளக்கு  தீபம் ஏற்றுதல்   

     9. பள்ளி மாணவர்களுக்கு பட்டு சீட்டு வழங்குதல் 

    10. நன்றியுரை : திரு ஜீவன் ஜோதி குருகுல தலைமை 

            செயலாளர் 



Tuesday 1 September 2015

செய்தி : தசரதன்
செப்      : 02.09.2015
சிம்பாங் அம்பாட்



சிம்பாங்   அம்பாட்டில்  மகிமை தரும் மகர ஜோதி பூஜை


சிம்பாங் அம்பாட் ஸ்ரீ தட்சணா ஒளி  ஒலி குருகுல கிளையின் ஏற்பாட்டில் மகர ஜோதி பூஜை கடந்த ஞாயிற்றுக்கிழமை,இரவு மணி 7.30க்கு இங்குள்ள சிம்பாங் கிளையின் கட்டிடத்தில் சிறப்புடன் நடைபெற்றது.இந்த சிறப்பு பூஜையை கிளையின் தலைவர் எம்.கண்ணா அவர்களின் தலைமையில் நடந்தது.

இந்த சிறப்பு மகிமை தரும் பூஜையில் மலேசியா ஸ்ரீ தட்சணா குருகுலத்தின் ஸ்தாபகர் பரஹம்சர் ஸ்ரீ மஹா சத்குரு பி.மேகவர்ணன் அவர்கள் சிறப்பு வருகை மேற்கொண்டு பூஜைக்கு தலைமை  ஏற்றார். 

மகர ஜோதி பூஜை அம்பிகையை நோக்கி குடும்பத்தில் சுபிட்சம்,செல்வா செழிப்பு,பூரண ஆரோக்கியம் ஆகியவற்றை பெற    வழிபடும் ஒரு சிறந்த பூஜையாகும் என்று சத்குரு அவர்கள் விளக்கம் அளித்தார்.மேலும் அவரின் உரையில்,புது மனை புகும் விழாவுக்கும் இந்த மகர ஜோதி பூஜை சிறந்த பலனை அழைக்க வல்லது என்றும் சொன்னார்.கிரக பிரவேசம் என்பது சரியான அர்த்தத்தை கொண்ட புது மனை புகு விழா அல்ல என்றும் மகர ஜோதி பூஜை புது மனை புகு விழாவில் செய்வதன் மூலம் சிறந்த பலனை பேரு முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.இந்த நிகழ்வில் காயத்ரி மந்திரங்களை சொல்லியும் அழங்காரம் செய்யப்பட்ட சக்கரத்தில்  பூக்களை தூவியும்   மக்கள் வழிபாடு செய்து நிறைவு செய்தனர்.

இந்த சிறப்பு பூஜையில் 80 மேற்பட்ட மக்கள் கலந்து பயன் பெற்றனரஇந்த பூஜையில் மலேசியா ஸ்ரீ தட்சன்ணா ஒளி ஒலி தியான குருகுலத்தின் தலைவர்  எம்.இராமையா, செபெராங் ஜெயா குருகுலத்தின் பொறுப்பாளர் ராமு கிருஷ்ணன்,ஜுரு குருகுல பொறுப்பாளர் ஆர்.ரமணி  உட்பட நூற்றுக்கு மேற்பட்ட சீடர்களும் பொது மக்களும் கலந்து பயன் பெற்றனர்.

1.பூஜையில் கலந்து கொண்ட சீடர்களின் ஒரு பகுதியினர்.

2.சொற்பொழிவு ஆற்றிய குருகுல ஸ்தாபகர்  சத்குரு மேகவர்ணன்  அவர்கள்

3.சிம்பாங் அம்பாட் குருகுல பொறுப்பாளர்  எம் .கண்ணா  உடன் கிளை பொறுப்பாளர்கள் 

செய்தி : தசரதன்
செப்     : 03.09.2015
கூலிம்


கெடா மாநில காவல் துறை தலைவருடன் ஒரு பொன் மலை பொழுது


கெடா கூலிம் மாவட்ட   தலைமை  காவல் துறையின் ஏற்பாட்டில்,கெடா மாநில காவல் துறை தலைவருடன் ஒரு பொன் மலை பொழுது நிகழ்ச்சி எதிர்வரும் 05.09.2015 ஆம் நாள் காலை மணி 11 முதல் மலை மணி 5 வரை தாமான் குச்சாய் பொது மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு கூலிம் பாண்டார் பாரு மாவட்ட அரசு சார்பற்ற பொது இயக்கங்களின் ஒருங்கிணைப்பு பேரவையின் ஆதரவில் நடைபெறும்.இந்த நிகழ்வில் போட்டி நிகழ்ச்சிகளும் ,சிறப்பு அங்கமாக பாரதம்,கராதே ,சிலம்பம்,தேக்வாண்டோ,சிங்க நடனம்,கார் கண்காட்சி மற்றும் போதை பொருள் ஒழிப்பு பற்றிய விழியப்புணர்வு கண்காட்சியும் இடம்பெறும்.

இந்த நிகழ்ச்சிக்கு சுற்று   வட்டார பொது மக்கள் அழைக்கப்டுகின்றனர் .இந்த நிகழ்ச்சி குறித்து மேல் விபரங்கள் பெற  மக்கள் முரசு கோவி.தியாகராஜன் 0135150167  என்ற என்னில் தொடர்புக் கொள்ளலாம்.

 பட விளக்கம் 

1. கெடா  மாநில காவல் துறை துறை தலைவர் டத்தோ ஜாம்ரி யஹைய 

2.   கூலிம்  மாவட்ட  காவல் துறை  தலைவர் சுப்ரிதேன்டன் ஹாஜி அப்துல் அர்ஷத் 

3. கோவி.தியகாராஜன் 

Monday 31 August 2015


ஜீவன் ஜோதி
தலைமை செயலாளர்
மலேசியா ஸ்ரீ தட்சணா ஒளி ஒலி குருகுலம்



மலேசியா ஸ்ரீ தட்சணா ஒளி ஒலி குருகுலம் ஏற்பாட்டில் நடக்கும் திறப்பு விழா  நினைவு மலருக்கு வாழ்த்து செய்தி வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த திறப்பு விழா நிகழ்வின் மூலமாக தியானம் மற்றும் குருகுல நடவடிக்கைகள் நாட்டின் பல  பகுதிகளின் தொடங்குவதற்கு பெரிதும் உதவியாக  இருக்கும்  என்ற நம்பிக்கை பிறக்கின்றது.

தியானம் மனித வாழ்கைக்கு மிகவும் பயன் உடையதாக அமைகிறது,ஆகவே குருகுலத்தின்  ஏற்பாட்டில் தியான வகுப்புகள் நாட்டின் பல பகுதிகளில் அனுபவம் வாய்ந்த குருமார்களின் உதவியுடன் நடை பெற்று வருகிறது,இதில் அனைவரும் பங்கு பெற அனைவரையும் அழைக்கின்றோம்.

இந்த திறப்பு விழா சீரும் சிறப்பாக ஏற்பாடு செய்ய உதவிய குருகுல ஸ்தாபகர் பரஹாம்சர் மஹா ஸ்ரீ சத்குரு பி.மேகவர்மண் ஐயா அவர்களுக்கு, ஏற்பாட்டுக் குழு தலைவர் ராமு கிருஷ்ணன் அவர்களுக்கும் ,உதவியாக இருந்த குருகுல தலைவர் ஸ்ரீ குரு எம்.இராமையா அவர்களுக்கும்,விளம்பரங்கள் வழங்கிய நிறுவனங்களுக்கும்,தகவல் சாதனங்களுக்கும் குருகுலத்தின் சார்பில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.நமஸ்காரம் 



அன்புடன் ,

--------------------------- 
ஜீவன் ஜோதி 
தலைமை செயலாளர் 
மலேசியா ஸ்ரீ தட்சணா ஒளி ஒலி குருகுலம் 
 



 

 


Sunday 30 August 2015



ரமணி ராஜகோபால்
ஏற்பாட்டுக் குழு செயலாளர்




மலேசியா தச்சணா ஒளி  ஓலி  தியான குருகுலத்தின் ஏற்பாட்டில் நடக்கும் திறப்புவிழா நினைவு மலர் வழி சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.குருகுல திறப்பு விழா நிகழ்ச்சிக்கு என்னை ஏற்பாட்டுக் குழு செயலாளராக நியமனம் செய்த ஏற்பாட்டுக் குழு தலைவர் ராமு கிருஷ்ணன் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்து மக்களுக்கு தியானம் மற்றும் ஆன்மீக வழியில் சிறப்பாக வாழ அறிய தகவல்களை அளித்து வரும் இந்த குருகுலத்தின் மூலன் பலர் நன்மை அடைத்து வருகின்றனர்.இந்த ஆன்மீக பயணம் கால  சக்கரத்தின்  முடிவில் இறைவனை அடையும் வழி  முறைகளை தெள்ள தெளிவாக விளக்கி வருகிறது, இதை நமது  மக்கள் இந்த தியான   குருகுலத்தில்          வகுப்புகளில்  கலந்து பயன் பெற அன்புடன் அழைக்கிறோம்.

இந்த திறப்பு விழா நாடு முழுவதும் உள்ள இந்து மக்களுக்கு அடிப்படை தியானம் செய்யும் முறையும் செம்மையாக வாழம்   முறையும் சிறந்த குருமார்களின் துணையுடன் கற்றுகொடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றது.இதனிடையே இந்த திறப்பு விழா சிறப்புடன் நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி அவர்களுக்கும்,ஏற்பட்டுக் குழுவினர்களுக்கும்,நாடு தழுவிய நிலையில் உள்ள குருகுல பொறுப்பாளர்களுக்கும்,விளம்பரங்கள் வழங்கிய நிறுவனம்,தனி நபர்களுக்கும் மற்றும் எல்லா வகையிலும் திறப்பு விழா சிறப்புடன் நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் ஏற்பட்டுக் குழு சார்பில் எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.நமஸ்காரம் 


அன்புடன் .

------------------------
ரமணி ராஜகோபால் 
ஏற்பாட்டுக் குழு செயலாளர்



Friday 28 August 2015

செய்தி : தசரதன்
ஆகா     : 30
புக்கிட் மெர்தாஜம்



ஜூரு வட்டார பகுதியில் டெங்கி காச்சல் பீடிப்பு
சுகாதரத்தை பேன  மக்கள் அறிவுறுத்து



ஜூரு உன்புற பகுதிகளில் ஒருவருக்கு டெங்கி காச்சல் பீடிக்கபட்டு புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருப்பதை  தொடர்ந்து இந்த பகுதில்,மத்திய புக்கிட் மெர்தாஜம் மாவட்ட  சுகாதார இலக்கா  டெங்கி கொசுக்களை ஒழிக்கும்  நடவடிக்கையில் நேற்று இறங்கியது.

இங்குள்ள தாமான் செண்டான பகுதில் நபர் ஒருவருக்கு  டெங்கி காச்சல் பீடித்ததின் பேரில் டெங்கி கொசுக்களை ஒழிக்க முன் ஏற்பாடக புகை அடித்து கொசு ஒழிப்பு   நடவடிக்கை  மேற்கொள்ளபடுவதாக புக்கிட் மெர்தாஜம் மாவட்ட  சுகாதார இலக்கா அதிகா ரி நாசரூடின் கூறினார்.

தாமான் செண்டானா ,ஜுரு,ஜூரு சிறு ரக தொழிற்சாலை பகுதிகளில் கட்டம் கட்டமாக டெங்கி கொசுக்களை ஒழிக்க புகை அடிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளபட உள்ளதாக  அந்த அதிகாரி மேலும் சொன்னார்.இதனிடையே இப்பகுதியில் உள்ள மக்கள் தங்களின்  வசிப்பிட பகுதிகளை   சுத்தமா வைத்திருக்க வேண்டும் என்றும் அந்த அதிகாரி அறிவுறுத்தினார்.


பட விளக்கம்

 பணியில்  ஈடுபட்ட மாவட்ட சுகாதார பணியாளர்களின் ஒரு பகுதியினர் 
  




செய்தி : தசரதன்
ஆக       30
பினாங்கு




மலேசியா  ஸ்ரீ தட்சணா மூர்த்தி ஒளி மற்றும் ஒலி  குருகுல திறப்புவிழா
பேராசிரியர் பி.இராமசாமி சிறப்பு வருகை


எதிர்வரும் 06.09.2015 ஆம் நாள்,இரவு மணி 7.30க்கு,பிறை ஜாலன் பாரு முனிஸ்வரர்  ஆலய மண்டபத்தில்  மலேசியா  ஸ்ரீ தட்சணா மூர்த்தி ஒளி மற்றும் ஒலி குருகுலத்தின் திறப்பு விழா சிறப்பாக ஏற்பாடு செய்யபட்டுள்ளதாக நிகழ்வு  ஏற்பட்டுக் குழுவின் தலைவர் ராமு கிருஷ்ணன் கூறினார்.

இந்த திறப்பு விழாவில்  பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி சிறப்பு பிரமுகராக கலந்து கொள்வார்.இந்த நிகழ்வுக்கு மலேசியா ஸ்ரீ தட்சணா மூர்த்தி ஒளி மற்றும் ஒலி குருகுல ஸ்தாபகர் பரஹாம்சர் ஸ்ரீ மஹா சத்குரு பி.மேகவர்ணன் உடன் கலந்து கொண்வர் என்றும் ராமு கிருஷ்ணன் சொன்னார்.

நாடு தழுவிய நிலையில் உள்ள குருகுலத்தின் தலைமை பொறுப்பு நிர்வாகிகளும் இந்த நிகழ்வில் வருகை புரிவார்கள் என்று குறி ராமு கிருஷ்ணன் இந்த நிகழ்வில் பினாங்கு மாநிலத்தில் உள்ள சில வசதி குறைந்த தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உதவிகளை செய்யவும் இந்த திறப்பு விழா நிகழ்வில் ஏற்பாடுகள்  செய்யபட்டுள்ளதாக  மேலும் அவர் கூறினார்.

இந்த நிகழ்வுக்கு குருகுலத்தின் பொறுப்பாளர்கள்,சீடர்கள் மற்றும் சுற்று வட்டார பொது மக்கள்  அனைவரும் கலந்து கொள்ள அழைப்பதாக ராமு கிருஷ்ணன் அழைப்பு விடுத்தார்.மேல்விபரங்களுக்கு ராமு கிருஷ்ணன் கை பேசி எண் 012466109 மற்றும்  நிகழ்வு ஏற்பட்டுக்  குழு செயலாளர் ஆர்,ரமணி 0174802149 என்ற எண்ணில்  தொடர்பு கொள்ளலாம்.

பட விளக்கம் 

1.ராமு கிருஷ்ணன் 

1.பேராசிரியர் பி இராமசாமி 





செய்தி : தசரதன்
ஆக  : 29
ஜார்ஜ் டவுன் 


பினாங்கில்  உள்ள பல பகுதிகளில் புகை  மூட்டம் ஆரோக்கியமற்ற நிலையில் இருந்ததுடன்,காற்றின் தரம் மோசமாக இருந்ததாக  கண்டறியப்பட்டது.

சுகாதாரம் சமூக நலன்  மற்றும் சுற்றுச்சூழல் தலைவர், பீ  பூன் போ நேற்று கூறினார். நேற்று  காலை 9 மணிக்கு ஜார்ஜ் டவுனில் பகுதியில் காற்றின் தரம்  மாசுஏற்பட்டதுடன் கு  றியீட்டெண்  58 ல் இருந்து 63 உயர்ந்ததாக அவர் சொன்னார்.இதனிடையே செபராங் ஜாய பகுதியில்  (ஏபிஐ) 80 இலிருந்து  (92) ஏபிஐ காற்றின் தரம்  மற்றும்  கண்டதாக  பினாங்கு அறிவியல் பல்கலைகழகம் குறிப்பிட்ட  அறிக்கையை சுட்டிக்காட்டி  அவர் மேலும் சொன்னார்.

வெளிப்புற பொழுதுபோக்கு நடவடிக்கைகளை மக்கள்  குறைக்க வேண்டும் என்று அறிவுருத்திய அவர் இது ஒரு தற்காலிக நிலையாக பருவ நிலை மாற்றமே என்றும் அவர் சொன்னார்.

 திடீரென்று ஏற்படும் இந்த காற்றின் தூய்மைக்கேடு  அதிகரிப்பின்  காரணமாக  தொண்டை புண், இருமல் மூச்சு திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடி சிகிச்சை பெற பொது மக்களை அவர் கேட்டுக்கொண்டார். 

காற்றின் தரம்  50  ஏபிஐ  நல்ல நிலை என்றும் 51-100 மிதமானது என்றும்  101-200 ஆரோக்கியமற்றது , 201-300 மிகவும் ஆரோக்கியமற்றது என்பதுடன்   300 மேற்பட்ட காற்றின் தரம்  ஆபத்தானது என்றும் மதிப்பிட பாடுவதாக அவர் சொன்னார்.

பட விளக்கம்

பீ  பூன் போ


எம். இராமைய  வாழ்த்துரை 
தலைவர் 
மலேசியா ஸ்ரீ தட்சணா ஒளி மற்றும் ஒலி தியான  குருகுலம் 


இந்த திறப்பு விழா சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்  கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.தியானம் அதன் பயன்களை சற்று காண்போம்.

தியானம் செய்முறை
தியானத்தின் நோக்கம் தியானிக்கப்படும் பொருளின் தன்மையை அறிந்து கொள்ளுல் ஆகும். அதற்கு மனம் ஒரு கருவியாக பயன்படுகிறது.தியானத்தின் பலன்கள் மனஅமைதி கிடைக்கும்.  
படபடப்பு குறையும் நினைவாற்றல் அதிகரிக்கும்.நல்ல ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்தும்.வேலை செய்யும் ஆற்றல் அதிகமாகும்.ரத்த அழுத்தம் குறையும்.ஆஸ்துமா குணமாகும்.அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும் அயுள் அதிகரிக்கும்.

தியானத்தில் 2 நிலைகள் உள்ளன.

1. நம் மனதில் ஏதாவது ஒரு உருவத்தை குறித்தோ அல்லது ஒரு கருத்தை குறித்தோ தொடர்ந்து சிந்தனை செய்வது. மனதில் இருந்து எல்லாவிதமான எண்ணங்களையும் அகற்றிவிடுதல். முதல் நிலையில் ஏதாவது ஒரு பொருளின் மீது அல்லது குரு புகட்டிய ஒரு மந்திரத்தை உச்சரிக்க தொடங்குகிறோம். அப்போது நமக்கு ஒரு புதுமையான அனுபவம் உண்டாகும். இதுவரை நம் மனதில் புதைந்து உறங்கி கிடந்த நூற்றுக்கணக்கான நினைவுகள் நம் கண்முன்னே தோன்றும். நமக்கு இது சிக்கலாக கூட இருக்கும். அதற்கும் வழி இருக்கிறது. நாம் உச்சரிக்கும் மந்திரத்தை அதன் பொருள் உணர்ந்து அப்பொருளின் பாவத்துடன் நம்மை அதில் பிணைத்து கொண்டால், நாம் தியான நிலையை அடையமுடியும். மற்ற நினைவுகள் மறந்து போகும்.

இரண்டாம் நிலையில், எவ்வித இடர்பாடுகளும் இல்லாமல், அமைதியாக உட்கார்ந்து கொள்ள வேண்டும். கண்களை மூடிக்கொள்ளவேண்டும்.  கால் முதல் தலை வரை எல்லா உறுப்புகளும் ஓய்வில் இருக்க வேண்டும். காதுகள் திறந்திருந்தால், வெளிச்சத்தங்கள் இடையூறு செய்யும். மனதிலிருந்தும் பல எண்ணங்கள் எழும். நாம் அதை பொருட்படுத்த தேவையில்லை. வேடிக்கை பார்ப்பவரை போல நாம் ஒதுங்கி நிற்க வேண்டும். அப்போது நம் காதுகள் திறந்திருந்தாலும் எவ்வித இடர்பாடுகளும் இருக்காது. தியானம் செய்தவன் மூலம் நம்மை நாம் உணர முடியும்.

இந்த நிகழ்வு வெற்றி அடைய ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எனது நன்றி உரியதாகட்டும்.நமஸ்காரம் 


அன்புடன் ,

எம்.இராமையா 

-----------------------------
 தலைவர் 
மலேசியா ஸ்ரீ தட்சணா ஒளி மற்றும் ஒலி 
தியான  குருகுலம் 

ராமு கிருஷ்ணன் 
ஏற்பாட்டுக் குழு தலைவர் 



மலேசியா ஸ்ரீ தட்சிணா ஒளி மற்றும் ஒலி தியான குரு குலத்தின் ஏற்பாட்டில் நடக்கும் இந்த திறப்பு விழாவுக்கு ஆதரவு வழங்கிய மாண்புமிகு பேராசிரியர் பி.இராமசாமி அவர்களுக்கும்,எங்களை வழிநடத்தி ஆன்மீக பாதையில் நல்வழி காட்டிய எங்களின்  பரஹாம்சர்   ஸ்ரீ மஹா சத்குரு பி.மேகவர்ணன் அவர்களுக்கும் மற்றும் அணைத்து குருமார்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கோள்கிறேன் .

கடந்த காலங்களின் இந்த குருகுலம்  பல வகையில் சமூகத்திற்கு தியானம் மற்றும் ஆன்மிக விளக்க உரைகளை நாடு தழுவிய நிலையில் நடத்தி வந்துள்ளது.இந்த முயற்சிகள் தொடந்து செய்யப்டுவதுடன்,பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தொடர்ந்து இந்த குருகுலம் ஆதரவாக இருந்து செயல்படும் என்பதை உறுதிக் கொள்கிறோம்.

இறுதியாக இந்த திறப்பு விழா சிரம் சிறப்பாக நடக்க ஒத்துழைப்பு வழங்கிய மலேசியா நாளிதல்கலான மலேசியா நண்பன்,மக்கள் ஓசை,நேசன்,தாய்மொழ தினக்குரல் மற்றும் நினைவு மலருக்கு விளம்பரங்கள் வழங்கிய தனி நபர்கள்,   நிறுவனங்களுக்கும்  ஏற்பாட்டுக்  குழு சார்பில் எனது நன்றியை தெரிவித்துக்  கொள்கிறேன்.இன்றைய நாள் குருகுல  வரலாற்றில் ஒரு மையில் கல்லாக அமையும் எனும் நம்பிக்கையில் விடைப்  பெறுகிறேன்.நமஸ்காரம்



அன்புடன்,


----------------------------------
ராமு கிருஷ்ணன் 
ஏற்பாட்டுக் குழு தலைவர் 

Friday 14 August 2015

இந்திய சுற்றுலா 2009.














பசுமரத்தாணி போல நெஞ்சில் நிழல் ஆடும் இந்திய சுற்றுலா 2009.

அய்யா விஜயரத்தினம்

மறக்க முடியாத தந்தையாக எங்களுக்கு வழிகாட்டி மறைந்த மலைசிய இந்து இளைஞர் பேரவை ஸ்தாபகர் அய்யா விஜயரத்தினம் அவர்களுடன் எடுத்த குழுபடம்.இடமிருந்து வளம் சகோதரர் சூரியகுமார்மற்று மகேந்திரன் உடன் 

Saturday 4 April 2015

கண்ணதாசனின் அறிய புகை படங்கள்

 
கண்ணதாசனின் அறிய புகை  படங்கள் 










கம்பன் வாழ்த்த களத்தில் நாம்'

கம்பன் வாழ்த்த களத்தில் நாம்'


கம்பன் என்னும் வையம் போற்றும் களத்தில் நாம் இல்லா விட்டலும்,அவனில் இலக்கிய செழுமையை நாம் அனைவரும் படித்து உணருதல் அவசியமாகும்.தமிழின் இனிமையை சிறிதும் குறையாமல் தனது இளையக்கிய நூலன கம்ப இராமாயணத்தில் அவர் இயற்றிய இலக்கியம் உலக புகழ் பெற்றது.வாழ்க கம்பனில் புகழ்".