செய்தி : ஆர்.தசரதன்
செப் : 18.09.2015
புக்கிட் மெர்தாஜம்
மா.ராஜகோபால் அவர்களின் 70ஆம் பிறந்த நாள் விழாவில்
சமூதாய தலைவர்கள் வாழ்த்து
புக்கிட் மெர்தாஜம் ஜூரு வட்டாரத்தில் சமூக சேவையாளரும்,ஜூரு தேவி ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தின் தர்மகர்தாவும்,புக்கிட் மெர்தாஜம் ஐ பி.எப் தொகுதி தலைவருமான திரு மா.ராஜகோபால் தமது 70ஆம் ஆண்டு பிறந்த தின விழாவை தமது ஜூருவில் உள்ள தமது இல்லத்தில் நேற்றைய முன்தினம் கொண்டாடினார்.
அவரின் பிறந்த தினத்தின் கொண்டாடத்தில் அரசியல்,சமூக,அரசு சார்பற்ற தலைவர்கள் மாலைகளை அணிவித்து திரு மா.ராஜகோபால் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டனர்.இந்த நிகழவில் சிறப்பு வருகையாளர்களாக பினாங்கு மாநில ஐ பி.எப் பினாங்கு மாநில தலைவர் திரு க.எழுமலை,கெடா மாநில ஐ பி.எப் தலைவர் திரு வேலாயுதம்,பினாங்கு மாநில ஐ பி எப் செயலாளர் திரு தங்கராசு,பினாங்கு மாநில இந்தியர் மேம்பட்டுக் கழக தலைவர் எம்.பாலன், பினாங்கு மாநில மலேசியா இந்து இளஞர் பேரவை தலைவர் ந.மகேந்திரன்,கூலிம் பாண்டார் பாரு இந்தியர் ஒருங்கிணைப்பு குழு தலைவர் கோவி.தியாகராஜன்,நிபோங் திபால் நாணய கூட்டுரவு சங்க தலைவர் ஜெ.தியாகராஜன்,பாடங் செராய் கெரக்கான் கட்சி தலைவர் எம்.மாரிமுத்து ,டாக்டர் எம் .முரளி,ஜூரு பெற்றோர் ஆசிரியர் முன்னால் தலைவர்கள் ம.நாராயணசாமி ,மா.வீரன்,பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் திரு காளிதாஸ்,செபெராங் பிறை தமிழர் முன்னேற்ற கழக செயலாளர் திரு கணேசன்,ஜூரு தேவி ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய தலைவர் சுரேஷ் சோமு,புக்கிட் மெர்தாஜம் ஐ பி எப் தொகுதி பொறுப்பாளர் எஸ்.பன்னிர்செல்வம் உள்ளிட்ட மா.ராஜகோபால் அவர்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
பட விளக்கம்
மா.ராஜகோபால் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூரிய எம்.பாலன் உடன் திரு வேலாயுதம் மற்றும் திரு எழுமலை