செய்தி : தசரதன்
செப் : 02.09.2015
சிம்பாங் அம்பாட்
சிம்பாங் அம்பாட்டில் மகிமை தரும் மகர ஜோதி பூஜை
செப் : 02.09.2015
சிம்பாங் அம்பாட்
சிம்பாங் அம்பாட்டில் மகிமை தரும் மகர ஜோதி பூஜை
சிம்பாங் அம்பாட் ஸ்ரீ தட்சணா ஒளி ஒலி குருகுல கிளையின் ஏற்பாட்டில் மகர ஜோதி பூஜை கடந்த ஞாயிற்றுக்கிழமை,இரவு மணி 7.30க்கு இங்குள்ள சிம்பாங் கிளையின் கட்டிடத்தில் சிறப்புடன் நடைபெற்றது.இந்த சிறப்பு பூஜையை கிளையின் தலைவர் எம்.கண்ணா அவர்களின் தலைமையில் நடந்தது.
இந்த சிறப்பு மகிமை தரும் பூஜையில் மலேசியா ஸ்ரீ தட்சணா குருகுலத்தின் ஸ்தாபகர் பரஹம்சர் ஸ்ரீ மஹா சத்குரு பி.மேகவர்ணன் அவர்கள் சிறப்பு வருகை மேற்கொண்டு பூஜைக்கு தலைமை ஏற்றார்.
மகர ஜோதி பூஜை அம்பிகையை நோக்கி குடும்பத்தில் சுபிட்சம்,செல்வா செழிப்பு,பூரண ஆரோக்கியம் ஆகியவற்றை பெற வழிபடும் ஒரு சிறந்த பூஜையாகும் என்று சத்குரு அவர்கள் விளக்கம் அளித்தார்.மேலும் அவரின் உரையில்,புது மனை புகும் விழாவுக்கும் இந்த மகர ஜோதி பூஜை சிறந்த பலனை அழைக்க வல்லது என்றும் சொன்னார்.கிரக பிரவேசம் என்பது சரியான அர்த்தத்தை கொண்ட புது மனை புகு விழா அல்ல என்றும் மகர ஜோதி பூஜை புது மனை புகு விழாவில் செய்வதன் மூலம் சிறந்த பலனை பேரு முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.இந்த நிகழ்வில் காயத்ரி மந்திரங்களை சொல்லியும் அழங்காரம் செய்யப்பட்ட சக்கரத்தில் பூக்களை தூவியும் மக்கள் வழிபாடு செய்து நிறைவு செய்தனர்.
இந்த சிறப்பு பூஜையில் 80 மேற்பட்ட மக்கள் கலந்து பயன் பெற்றனரஇந்த பூஜையில் மலேசியா ஸ்ரீ தட்சன்ணா ஒளி ஒலி தியான குருகுலத்தின் தலைவர் எம்.இராமையா, செபெராங் ஜெயா குருகுலத்தின் பொறுப்பாளர் ராமு கிருஷ்ணன்,ஜுரு குருகுல பொறுப்பாளர் ஆர்.ரமணி உட்பட நூற்றுக்கு மேற்பட்ட சீடர்களும் பொது மக்களும் கலந்து பயன் பெற்றனர்.

1.பூஜையில் கலந்து கொண்ட சீடர்களின் ஒரு பகுதியினர்.
2.சொற்பொழிவு ஆற்றிய குருகுல ஸ்தாபகர் சத்குரு மேகவர்ணன் அவர்கள்
3.சிம்பாங் அம்பாட் குருகுல பொறுப்பாளர் எம் .கண்ணா உடன் கிளை பொறுப்பாளர்கள்
3.சிம்பாங் அம்பாட் குருகுல பொறுப்பாளர் எம் .கண்ணா உடன் கிளை பொறுப்பாளர்கள்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home