பினாங்கு மாநில அரசின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்.
மாநில ஆளுநர் சிறப்பு வருகை
பெருநாள் நாள் கொண்டாட்டத்தில் ஒன்றிணைந்த ஒற்றுமை பேணுவோம்
மாநில ஆளுநர் சிறப்பு வருகை
பெருநாள் நாள் கொண்டாட்டத்தில் ஒன்றிணைந்த ஒற்றுமை பேணுவோம்
லிம் குவான் எங்
பாலிக் பூலாவ்
ஜூலை 09.07.2017
ஜூலை 09.07.2017
ஆர்.தசரதன்
பினாங்கு மாநில அரசின் நோன்பு பெருநாள் கொண்டாட்டத்துடன் பினாங்கு மாநில ஆளுநரின் 79 ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் நேற்று சிறப்புடன் நடைப்பெற்றது.
இக்கொண்டாட்டம்இங்கு பாலிக் பூலவில் உள்ள பினாங்கு நகர சபை மண்டபத்தில் நடந்தது.
இந்நிகழ்வில் பினாங்கு மாநில ஆளுநர் துன் டாக்டர் அப்துல் ரஹ்மான் அப்பாஸ்,பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங்,பினாங்கு துணை முதல்வர் டத்தோ ரஷீத் ஹாஸ்நோன்,சுகாதார துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஹில்மி யஹாய.மாநில அரசின் செயலாளர்டத்தோ ஸ்ரீ பாரிசான் டாருஸ்,பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ.டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில்,பினாங்கு மாநில மாநகர் மன்ற தலைவர் டத்தோ மைமூனா முஹமாட் ஷரிப்பினாங்கு மாநில காவல் துறை தலைவர் டத்தோ வீரா சுவா ஜி லாய் சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்லின மக்கள் இந்த நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து சிறப்பித்தனர்.
பல்வகை உணவுகள் இந்த நோன்பு பெருநாள் உபசரிப்பில் வருகையளித்த மக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் குறிப்பிடுகையில்,கடந்த 9 ஆண்டுக் கால பாக்கத்தான் ராக்யாட் மக்கள் கூட்டணியில் வாயிலாக திறமையான,வெளிப்படையான மற்றும் பொறுப்புடைமைமிக்க மிக்க ஆட்சியை மாநிலத்தில் புரிந்து வருவதை பெருமிதத்துடன் கூறினார்.
இதனிடையே மாநிலதில் உள்ள 1.6 லட்சம் மக்கள் ஊழல் தடுப்பினால் பகுத்தளிக்கபட்ட வெ 412.63 இலட்சம் ஈவுத்தொகை கொடுக்கப்பட்டடுள்ளதை மாநில அரசாங்கதுக்கு பெருமை அளிப்பதையும் அவன் எடுத்துரைத்தார்.
மாநிலத்தில் பெருகியுள்ள வேலை வாய்ப்புகள் மற்றும் நாட்டின் முதல் பசுமை மாநிலமாககடந்த ஜூன் மதம் தொடக்கம் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தியதையும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மாநில அரசின் ஏற்பாட்டில் நடக்கும் நோன்பு பெருநாள் கொண்டாத்தில் கலந்து கொள்ள நேரம் ஒதுக்கிய பினாங்கு மாநில ஆளுநர் துன் டாக்டர் அப்துல் ரஹ்மான் அப்பாஸ் மற்றும் துணைவியார் தோ புவான் மஜிமோர் ஷெரீப் அவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
நோன்பு பெருநாள் கொண்டதின் மூலமாகபல்லின மக்களுடன் ஒன்றிணைத்து ஒற்றுமை பேணுவோம் என்ற முழக்கத்துடன் அவர் தமது உரையை நிறைவு செய்தார்.