Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Friday, 28 August 2015




செய்தி : தசரதன்
ஆக       30
பினாங்கு




மலேசியா  ஸ்ரீ தட்சணா மூர்த்தி ஒளி மற்றும் ஒலி  குருகுல திறப்புவிழா
பேராசிரியர் பி.இராமசாமி சிறப்பு வருகை


எதிர்வரும் 06.09.2015 ஆம் நாள்,இரவு மணி 7.30க்கு,பிறை ஜாலன் பாரு முனிஸ்வரர்  ஆலய மண்டபத்தில்  மலேசியா  ஸ்ரீ தட்சணா மூர்த்தி ஒளி மற்றும் ஒலி குருகுலத்தின் திறப்பு விழா சிறப்பாக ஏற்பாடு செய்யபட்டுள்ளதாக நிகழ்வு  ஏற்பட்டுக் குழுவின் தலைவர் ராமு கிருஷ்ணன் கூறினார்.

இந்த திறப்பு விழாவில்  பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி சிறப்பு பிரமுகராக கலந்து கொள்வார்.இந்த நிகழ்வுக்கு மலேசியா ஸ்ரீ தட்சணா மூர்த்தி ஒளி மற்றும் ஒலி குருகுல ஸ்தாபகர் பரஹாம்சர் ஸ்ரீ மஹா சத்குரு பி.மேகவர்ணன் உடன் கலந்து கொண்வர் என்றும் ராமு கிருஷ்ணன் சொன்னார்.

நாடு தழுவிய நிலையில் உள்ள குருகுலத்தின் தலைமை பொறுப்பு நிர்வாகிகளும் இந்த நிகழ்வில் வருகை புரிவார்கள் என்று குறி ராமு கிருஷ்ணன் இந்த நிகழ்வில் பினாங்கு மாநிலத்தில் உள்ள சில வசதி குறைந்த தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உதவிகளை செய்யவும் இந்த திறப்பு விழா நிகழ்வில் ஏற்பாடுகள்  செய்யபட்டுள்ளதாக  மேலும் அவர் கூறினார்.

இந்த நிகழ்வுக்கு குருகுலத்தின் பொறுப்பாளர்கள்,சீடர்கள் மற்றும் சுற்று வட்டார பொது மக்கள்  அனைவரும் கலந்து கொள்ள அழைப்பதாக ராமு கிருஷ்ணன் அழைப்பு விடுத்தார்.மேல்விபரங்களுக்கு ராமு கிருஷ்ணன் கை பேசி எண் 012466109 மற்றும்  நிகழ்வு ஏற்பட்டுக்  குழு செயலாளர் ஆர்,ரமணி 0174802149 என்ற எண்ணில்  தொடர்பு கொள்ளலாம்.

பட விளக்கம் 

1.ராமு கிருஷ்ணன் 

1.பேராசிரியர் பி இராமசாமி 





0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home