Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Friday, 28 August 2015

செய்தி : தசரதன்
ஆகா     : 30
புக்கிட் மெர்தாஜம்



ஜூரு வட்டார பகுதியில் டெங்கி காச்சல் பீடிப்பு
சுகாதரத்தை பேன  மக்கள் அறிவுறுத்து



ஜூரு உன்புற பகுதிகளில் ஒருவருக்கு டெங்கி காச்சல் பீடிக்கபட்டு புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருப்பதை  தொடர்ந்து இந்த பகுதில்,மத்திய புக்கிட் மெர்தாஜம் மாவட்ட  சுகாதார இலக்கா  டெங்கி கொசுக்களை ஒழிக்கும்  நடவடிக்கையில் நேற்று இறங்கியது.

இங்குள்ள தாமான் செண்டான பகுதில் நபர் ஒருவருக்கு  டெங்கி காச்சல் பீடித்ததின் பேரில் டெங்கி கொசுக்களை ஒழிக்க முன் ஏற்பாடக புகை அடித்து கொசு ஒழிப்பு   நடவடிக்கை  மேற்கொள்ளபடுவதாக புக்கிட் மெர்தாஜம் மாவட்ட  சுகாதார இலக்கா அதிகா ரி நாசரூடின் கூறினார்.

தாமான் செண்டானா ,ஜுரு,ஜூரு சிறு ரக தொழிற்சாலை பகுதிகளில் கட்டம் கட்டமாக டெங்கி கொசுக்களை ஒழிக்க புகை அடிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளபட உள்ளதாக  அந்த அதிகாரி மேலும் சொன்னார்.இதனிடையே இப்பகுதியில் உள்ள மக்கள் தங்களின்  வசிப்பிட பகுதிகளை   சுத்தமா வைத்திருக்க வேண்டும் என்றும் அந்த அதிகாரி அறிவுறுத்தினார்.


பட விளக்கம்

 பணியில்  ஈடுபட்ட மாவட்ட சுகாதார பணியாளர்களின் ஒரு பகுதியினர் 
  




செய்தி : தசரதன்
ஆக       30
பினாங்கு




மலேசியா  ஸ்ரீ தட்சணா மூர்த்தி ஒளி மற்றும் ஒலி  குருகுல திறப்புவிழா
பேராசிரியர் பி.இராமசாமி சிறப்பு வருகை


எதிர்வரும் 06.09.2015 ஆம் நாள்,இரவு மணி 7.30க்கு,பிறை ஜாலன் பாரு முனிஸ்வரர்  ஆலய மண்டபத்தில்  மலேசியா  ஸ்ரீ தட்சணா மூர்த்தி ஒளி மற்றும் ஒலி குருகுலத்தின் திறப்பு விழா சிறப்பாக ஏற்பாடு செய்யபட்டுள்ளதாக நிகழ்வு  ஏற்பட்டுக் குழுவின் தலைவர் ராமு கிருஷ்ணன் கூறினார்.

இந்த திறப்பு விழாவில்  பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி சிறப்பு பிரமுகராக கலந்து கொள்வார்.இந்த நிகழ்வுக்கு மலேசியா ஸ்ரீ தட்சணா மூர்த்தி ஒளி மற்றும் ஒலி குருகுல ஸ்தாபகர் பரஹாம்சர் ஸ்ரீ மஹா சத்குரு பி.மேகவர்ணன் உடன் கலந்து கொண்வர் என்றும் ராமு கிருஷ்ணன் சொன்னார்.

நாடு தழுவிய நிலையில் உள்ள குருகுலத்தின் தலைமை பொறுப்பு நிர்வாகிகளும் இந்த நிகழ்வில் வருகை புரிவார்கள் என்று குறி ராமு கிருஷ்ணன் இந்த நிகழ்வில் பினாங்கு மாநிலத்தில் உள்ள சில வசதி குறைந்த தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உதவிகளை செய்யவும் இந்த திறப்பு விழா நிகழ்வில் ஏற்பாடுகள்  செய்யபட்டுள்ளதாக  மேலும் அவர் கூறினார்.

இந்த நிகழ்வுக்கு குருகுலத்தின் பொறுப்பாளர்கள்,சீடர்கள் மற்றும் சுற்று வட்டார பொது மக்கள்  அனைவரும் கலந்து கொள்ள அழைப்பதாக ராமு கிருஷ்ணன் அழைப்பு விடுத்தார்.மேல்விபரங்களுக்கு ராமு கிருஷ்ணன் கை பேசி எண் 012466109 மற்றும்  நிகழ்வு ஏற்பட்டுக்  குழு செயலாளர் ஆர்,ரமணி 0174802149 என்ற எண்ணில்  தொடர்பு கொள்ளலாம்.

பட விளக்கம் 

1.ராமு கிருஷ்ணன் 

1.பேராசிரியர் பி இராமசாமி 





செய்தி : தசரதன்
ஆக  : 29
ஜார்ஜ் டவுன் 


பினாங்கில்  உள்ள பல பகுதிகளில் புகை  மூட்டம் ஆரோக்கியமற்ற நிலையில் இருந்ததுடன்,காற்றின் தரம் மோசமாக இருந்ததாக  கண்டறியப்பட்டது.

சுகாதாரம் சமூக நலன்  மற்றும் சுற்றுச்சூழல் தலைவர், பீ  பூன் போ நேற்று கூறினார். நேற்று  காலை 9 மணிக்கு ஜார்ஜ் டவுனில் பகுதியில் காற்றின் தரம்  மாசுஏற்பட்டதுடன் கு  றியீட்டெண்  58 ல் இருந்து 63 உயர்ந்ததாக அவர் சொன்னார்.இதனிடையே செபராங் ஜாய பகுதியில்  (ஏபிஐ) 80 இலிருந்து  (92) ஏபிஐ காற்றின் தரம்  மற்றும்  கண்டதாக  பினாங்கு அறிவியல் பல்கலைகழகம் குறிப்பிட்ட  அறிக்கையை சுட்டிக்காட்டி  அவர் மேலும் சொன்னார்.

வெளிப்புற பொழுதுபோக்கு நடவடிக்கைகளை மக்கள்  குறைக்க வேண்டும் என்று அறிவுருத்திய அவர் இது ஒரு தற்காலிக நிலையாக பருவ நிலை மாற்றமே என்றும் அவர் சொன்னார்.

 திடீரென்று ஏற்படும் இந்த காற்றின் தூய்மைக்கேடு  அதிகரிப்பின்  காரணமாக  தொண்டை புண், இருமல் மூச்சு திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடி சிகிச்சை பெற பொது மக்களை அவர் கேட்டுக்கொண்டார். 

காற்றின் தரம்  50  ஏபிஐ  நல்ல நிலை என்றும் 51-100 மிதமானது என்றும்  101-200 ஆரோக்கியமற்றது , 201-300 மிகவும் ஆரோக்கியமற்றது என்பதுடன்   300 மேற்பட்ட காற்றின் தரம்  ஆபத்தானது என்றும் மதிப்பிட பாடுவதாக அவர் சொன்னார்.

பட விளக்கம்

பீ  பூன் போ


எம். இராமைய  வாழ்த்துரை 
தலைவர் 
மலேசியா ஸ்ரீ தட்சணா ஒளி மற்றும் ஒலி தியான  குருகுலம் 


இந்த திறப்பு விழா சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்  கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.தியானம் அதன் பயன்களை சற்று காண்போம்.

தியானம் செய்முறை
தியானத்தின் நோக்கம் தியானிக்கப்படும் பொருளின் தன்மையை அறிந்து கொள்ளுல் ஆகும். அதற்கு மனம் ஒரு கருவியாக பயன்படுகிறது.தியானத்தின் பலன்கள் மனஅமைதி கிடைக்கும்.  
படபடப்பு குறையும் நினைவாற்றல் அதிகரிக்கும்.நல்ல ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்தும்.வேலை செய்யும் ஆற்றல் அதிகமாகும்.ரத்த அழுத்தம் குறையும்.ஆஸ்துமா குணமாகும்.அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும் அயுள் அதிகரிக்கும்.

தியானத்தில் 2 நிலைகள் உள்ளன.

1. நம் மனதில் ஏதாவது ஒரு உருவத்தை குறித்தோ அல்லது ஒரு கருத்தை குறித்தோ தொடர்ந்து சிந்தனை செய்வது. மனதில் இருந்து எல்லாவிதமான எண்ணங்களையும் அகற்றிவிடுதல். முதல் நிலையில் ஏதாவது ஒரு பொருளின் மீது அல்லது குரு புகட்டிய ஒரு மந்திரத்தை உச்சரிக்க தொடங்குகிறோம். அப்போது நமக்கு ஒரு புதுமையான அனுபவம் உண்டாகும். இதுவரை நம் மனதில் புதைந்து உறங்கி கிடந்த நூற்றுக்கணக்கான நினைவுகள் நம் கண்முன்னே தோன்றும். நமக்கு இது சிக்கலாக கூட இருக்கும். அதற்கும் வழி இருக்கிறது. நாம் உச்சரிக்கும் மந்திரத்தை அதன் பொருள் உணர்ந்து அப்பொருளின் பாவத்துடன் நம்மை அதில் பிணைத்து கொண்டால், நாம் தியான நிலையை அடையமுடியும். மற்ற நினைவுகள் மறந்து போகும்.

இரண்டாம் நிலையில், எவ்வித இடர்பாடுகளும் இல்லாமல், அமைதியாக உட்கார்ந்து கொள்ள வேண்டும். கண்களை மூடிக்கொள்ளவேண்டும்.  கால் முதல் தலை வரை எல்லா உறுப்புகளும் ஓய்வில் இருக்க வேண்டும். காதுகள் திறந்திருந்தால், வெளிச்சத்தங்கள் இடையூறு செய்யும். மனதிலிருந்தும் பல எண்ணங்கள் எழும். நாம் அதை பொருட்படுத்த தேவையில்லை. வேடிக்கை பார்ப்பவரை போல நாம் ஒதுங்கி நிற்க வேண்டும். அப்போது நம் காதுகள் திறந்திருந்தாலும் எவ்வித இடர்பாடுகளும் இருக்காது. தியானம் செய்தவன் மூலம் நம்மை நாம் உணர முடியும்.

இந்த நிகழ்வு வெற்றி அடைய ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எனது நன்றி உரியதாகட்டும்.நமஸ்காரம் 


அன்புடன் ,

எம்.இராமையா 

-----------------------------
 தலைவர் 
மலேசியா ஸ்ரீ தட்சணா ஒளி மற்றும் ஒலி 
தியான  குருகுலம் 

ராமு கிருஷ்ணன் 
ஏற்பாட்டுக் குழு தலைவர் 



மலேசியா ஸ்ரீ தட்சிணா ஒளி மற்றும் ஒலி தியான குரு குலத்தின் ஏற்பாட்டில் நடக்கும் இந்த திறப்பு விழாவுக்கு ஆதரவு வழங்கிய மாண்புமிகு பேராசிரியர் பி.இராமசாமி அவர்களுக்கும்,எங்களை வழிநடத்தி ஆன்மீக பாதையில் நல்வழி காட்டிய எங்களின்  பரஹாம்சர்   ஸ்ரீ மஹா சத்குரு பி.மேகவர்ணன் அவர்களுக்கும் மற்றும் அணைத்து குருமார்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கோள்கிறேன் .

கடந்த காலங்களின் இந்த குருகுலம்  பல வகையில் சமூகத்திற்கு தியானம் மற்றும் ஆன்மிக விளக்க உரைகளை நாடு தழுவிய நிலையில் நடத்தி வந்துள்ளது.இந்த முயற்சிகள் தொடந்து செய்யப்டுவதுடன்,பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தொடர்ந்து இந்த குருகுலம் ஆதரவாக இருந்து செயல்படும் என்பதை உறுதிக் கொள்கிறோம்.

இறுதியாக இந்த திறப்பு விழா சிரம் சிறப்பாக நடக்க ஒத்துழைப்பு வழங்கிய மலேசியா நாளிதல்கலான மலேசியா நண்பன்,மக்கள் ஓசை,நேசன்,தாய்மொழ தினக்குரல் மற்றும் நினைவு மலருக்கு விளம்பரங்கள் வழங்கிய தனி நபர்கள்,   நிறுவனங்களுக்கும்  ஏற்பாட்டுக்  குழு சார்பில் எனது நன்றியை தெரிவித்துக்  கொள்கிறேன்.இன்றைய நாள் குருகுல  வரலாற்றில் ஒரு மையில் கல்லாக அமையும் எனும் நம்பிக்கையில் விடைப்  பெறுகிறேன்.நமஸ்காரம்



அன்புடன்,


----------------------------------
ராமு கிருஷ்ணன் 
ஏற்பாட்டுக் குழு தலைவர்