Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Thursday, 3 December 2015

செய்தி : ஆர்.தசரதன்

டிச         : 03.12.2015

ஜார்ஜ்டவுன் 
     
 


பினாங்கில் தென்மேற்கு மாவட்டத்தில் வெள்ளப்  பேரிடர் ஏற்பட          
         குப்பைக் கூளங்களே காரணம்  ஆய்வில் கண்டரிவு ...
   

       பினாங்கு மாநிலத்தின் தென்மேற்கு மாவட்டத்தில் சமீப காலமாக அடிக்கடி நிகழ்ந்து வரும் வெள்ளப் பேரிடருக்கு அங்கிருக்கும் பலப் பகுதிகளில் நிறைந்திருக்கும்  குப்பைக் கூளங்களே மூல காரணமென்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக, வெள்ளப் பேரிடர் மற்றும் நிவாரணப் பணிகளுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் இயாவ் தெரிவித்துள்ளார்.

       இந்த மாவட்டத்தின் ஆங்காங்கே மிகுந்திருக்கும் குப்பைக் கூளங்களால், சுங்கை திராம், ரெலாவ், தெல்லோக் கும்பார், பண்டார் பாயான் பாரு கம்போங் செரோனோக், பத்து மவுங் மற்றும் பாயான் லெப்பாஸ் அனைத்துலக விமான நிலையம் போன்றப் பகுதிகளில் வெள்ளம் சூழ்கின்ற அவல நிலைக்கு  இங்கு தெல்லோக்  கும்பார் பகுதியில் அமைந்திருக்கும் வடிகால் மற்றும் நீர் பாசனத் துறையினரால் இயலாத கதி ஏற்பட்டுள்ளதாக அவர் விவரித்துள்ளார்.

       இப்பகுதிகளில் பாய்கின்ற ஆறுகளில் குப்பைக் கூளங்கள் பெருமளவில் நிறைந்து சீரான  நீரோட்டத்திற்கு வழியின்றி அடைப்புகளை ஏற்படுத்துவதால், மழைக் காலங்களில் வெள்ள நீர் வெளியேறுவதற்கு தடை நிகழும் அவலம் சூழ்ந்து, ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கும் நிலைமையைக் காண முடிவதாக சாவ் சுட்டிக் காட்டியுள்ளார்.

        கடந்த சில தினங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் சுமார் 2 மணி நேரமாக இடை விடாமல் பொழிந்த மழையால் 80 செ.மீ அளவுக்கு மழை பதிவானதாகக் கூறிய அவர், மிகையான இந்த மழை நீர், அருகிலிருக்கும் ஆறுகளின் நீரோட்டத்தின் வாயிலாக சீரான நிலையில் வெளியேற இயலாமல் குப்பைக் கூளங்களின் தடையால் தேங்கி நின்று வெள்ளப் பெருக்கினை ஏற்படுத்தியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

        இது தவிர பத்து மவுங் பகுதியில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும்  கட்டுமானப் பணிகளால்  வெள்ளம் ஏற்படுவதற்கு காரணமாகி விட்டதாக சாவ் செய்தியாளர்களிடம் கூரினார்.இதன் பொருட்டு இங்கிருக்கும் ஆறுகளிலும் கட்டுமானப் பகுதிகளின் சுற்றுப் புறங்களிலும் காணப்படும் குப்பைக் கூளங்கள் மற்றும் அடைப்புகளை சீரமைப்பதற்கான பணிகளில் வடிகால் மற்றும் நீர்பாசனத் துறையினர் ஈடுபடுவதற்கு ஆயுத்தமாகி இருப்பதாகக் கூறியிருக்கும் சாவ்,நீர் பாசனத் துறையின் நீர் உறிஞ்சு இயந்திரமும் இங்கு சீராக செயல்படுவதற்கு உறுதி காணப்பட்டிருப்பதாகவும் அறிவித்துள்ளார்.   

        இப்பகுதிகளில் உள்ள கால்வாய்களையும்  சாக்கடைகளையும்   தூர்வாரி தூய்மைப்படுத்தும் சீரமைப்புப் பணிகளை நகரசபையின் உதவியுடன் மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிக்கப்பட்டிருப்பதால், இப்பிரச்சனைக்கு விரைந்து சுமூகத் தீர்வு காண்பதற்கு வழி பிறந்திருப்பதாக சாவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

                                       

பட விளக்கம்:

குப்பைக் கூளங்கள் நிறைந்திருக்கும் ஆறுகளை விளக்கும் படக் காட்சிகள்.
 
சமிபத்தில் ஏற்பட்ட வெள்ள நிலைமையில் ஒரு பகுதி 

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home