Hyopp
பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவையின் 60ஆம் ஆண்டு விழா
- ஆலமரமாய் செழித்தோங்கி இந்து சமயம்,இளைஞர்களை நல்வழிப்படுத்திய பேரியக்கம்.
- "தன்னலமற்ற சேவை" வழி நற்சேவை புரிந்த இளைஞர் தொண்டூழியம்
- சகோதரத்துவம்,இந்து சமயதுக்கான பாதுகாவலன் தலைமைத்துவம் என்றால் அது இந்து இளைஞர் இயக்கம்.
- நன்முத்துக்களாக கிடைக்கப்பெற்ற தலைவர்கள், தொண்டர் படை
தொகுப்பு ஆர்.ரமணி ராஜகோபால்
பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவையின் 60 ஆம் ஆண்டு நிறைவு விழாவினை கொண்டாடுகின்றது.இக்கொண்டாடத்தினை சிறப்பிக்கும் வகையில் எதிர்வரும் 16.11.2019 ஆம் நாள்,இரவு மணி 7.00 அளவில்,செபராங் ஜெயாவில் அமைந்துள்ள அருள்மிகு கருமாரியம்மன் ஆலய மண்டபத்தில் மாபெரும் கொண்டாட்ட நிகழ்வுதனை நடப்பு மாநிலத்தின் தலைவர் ஜெயராமன் ஆனந்தராஜன் அவர்களின் தலைமையில் சிறப்பு விழா ஏற்பாட்டுக்குழுவினர் அமைக்கப்பட்டடுள்ளது.இந்த விழாவில் மலேசிய இந்து இளைஞர் பேரவை அமைய உறு துணையாக இருந்த அமைப்பாளர்கள்,முன்னாள் தலைவர்கள் உறுப்பினர்கள்,சமூக தலைவர்கள் பெரும் திரளாக ஒன்றுக்கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல இளைஞர்களின் தலைமைத்துவ ஆற்றலை வெளிக்கொணரும் களமாக இந்து இளைஞர் இயக்கங்கள் பினாங்கு மாநிலம் தோறும் பரவி இருக்கும் நிலையில்,பினாங்கு முக்கிய ஐந்து மாவட்டங்களிலும் இந்து இளைஞர் இயக்கங்கள்அமைக்கப்பட்டு மக்களுக்கான சேவைகளை ஆற்ற தயார் நிலையில் இருந்து வருகின்றனர்.
இந்து சமயத்தின் காவலனாக,குரலாக இளைஞர்களின் மேம்பாடு,பொறுப்பு மற்றும் தலைமைத்துவ பண்புகளை 'தன்னலமற்ற சேவை'எனும் இயக்க கொள்கை பிடிப்புடன் ஆற்றல் மிகு இளைய சமுதாயத்தை பண்படுத்தும் விதமாக இந்து இளைஞர் இயக்கங்கள் உத்வேகத்துடன் செயல் ஆற்றி வருகின்றன.
பேரவைக்கென்று கொடியும்,கொள்கை பாடலும் ஒவ்வொரு முறையும் பிரதான நிகழ்வுகளில் குறிப்பாக தேசிய,மாநில,வட்டாரம் மற்றும் கிளையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் ஒலிக்கும் போதெல்லாம் சமூக பற்றும்,சமய தெளிவும் நேர்மையுடம் கொண்ட எழுச்சியும் ஒவ்வொரு இளைஞர் மத்தியில் தோன்றி துண்டுக்கோளாக எதையும் சாதிக்கும் மன வலிமையை உருவாக்கும் என்பது திண்ணம்.
பினாங்கு இந்து இளைஞர் இயக்க வரலாறு.
பினாங்கு இந்து இளைஞர் பேரவை அமைய முக்கிய காரணமாக இருந்தவர்,இந்து இளைஞர் இயக்க தந்தை என போற்றப்படும் கே.கேசவபாணி என்பவர்.அப்போதையா காலத்தில் 1959 ஆம் ஆண்டு திரு எஸ்.விஜயரத்தினம் ( இந்து இளைஞர் இயக்க தந்தை)பட்டர்வொர்த் நகரில் உள்ள தொழிலாாளர் அமைச்சில் வேலை செய்து வந்தார்.அச்சமயத்தில் சில இளைஞர்கள் ஒன்றிணைத்து சமூக நல சேவைகளை மக்களுக்கு செய்து வந்த வேளை அது .அந்த இளைஞர்களில் முக்கிய பங்கு வகித்தவர்களில் எஸ்.இராமச்சந்திரன்,எஸ்.ராமு,அருளாந்தம்,ராஜா,மற்றும் திரு கே.கேசவபாணி ஆகியோர்.
இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு இயக்கத்தை தோற்றுவிக்க வேண்டும் எண்ணத்தில் முதல் இந்து இளைஞர் இயக்கம் அமைக்க முதல் அமைப்புக்குழு கூட்டம் ஒன்றை 29.4.1959 ஆம் ஆண்டு பினாங்கு இராமகிருஷ்ணா சமூக நல இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.அன்றைய தினம் மாலை மணி 5.00 க்கு அக்கூட்டம் நடைப்பெற்றது,அதில் கே.கேசவபாணி அவர்கள் முதல் தலைவராக தேர்வு செய்யப்பட்டதுடன்,செயலாளராக எஸ்.ராமச்சந்திரனும் பொருளாளராக அருளானந்தம் அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
அமைக்கப்பட்ட மாநில இந்து இளைஞர் இயக்கத்தின் மூலமாக நடத்தப்பட்ட பல நிகழ்வுகளின் வழியாக,இந்திய இளைஞர்களை ஒன்றிணைக்கும் முயற்சிகளையும் இயக்கத்தின் மாநில பொறுப்பாளர்கள் மேற்கொண்டு வெற்றியும் அடைந்தனர்.
முதல் முதலாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வசதி குறைந்த மக்களுக்கும்,ஆசிரம இல்லங்களில் உள்ள குழைந்தைகளுக்கான நிகழ்ச்சியாக இடம் பெற்றதுடன்,அதனுடன் பினாங்கு மாநிலத்தில் மலேசிய இந்து இளைஞர் பேரவையின் தேசிய அளவிலான 4 வது இளைஞர் மாநாடு நடத்தப்பட்டு மிக பிரபலம் அடைந்ததை தொடர்ந்து , இதனுடன் மாநில இந்து இளைஞர் இயக்கத்தின் பேரின் ஏற்பாடு செய்யபட்ட பல்வேறு சமய,விளையாட்டு மற்றும் பொது நிகழ்வுகளுக்கு இளைஞர்கள் மத்தியில் மிகுந்த நல்ஆதரவு பெருக தொடங்கியது.
பல்கி பெருகிய இளைஞர்களின் ஆதரவின் மூலமாக மாநிலத்தின் பல பாகங்களில் இந்து இளைஞர் இயக்கத்தின் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட.அதன் பிறகு 1974 ஆம் ஆண்டு மலேசிய இந்து இளைஞர் பேரவையின் தேசிய தலைவராக பொறுப்பு வாய்த்த திரு கே.குமரகுரு அவர்களின் முயற்சியில் நிபோங் திபால் இந்து இளைஞர் இயக்கம்,பட்டர்வொர்த் இந்து இளைஞர் இயக்கம்,அல்மா இந்து இளைஞர் இயக்கங்கள் முறையே 1976 மற்றும் 1977 ஆம் ஆண்டுகளில் தோற்றுவிக்கப்பட்டன.
1977 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பினாங்கு மாநில இந்து இளைஞர் ஒருங்கிணைப்பு குழு ஒன்றினைந்து அமைக்கப்பட்டு அணைத்து இந்து இளைஞர் இயக்கங்களின் கிளைகளை ஒன்றிணைக்க அரும் பங்காற்றினார் எஸ்.குமரகுரு அவர்கள்.முதலில் பினாங்கு இந்து பிரோவின்ஸ் வேலெஸ்லி எனும் பெயரில் இயங்கிய மாநில இந்து இளைஞர் இயக்கம் பின்பு 12.5.1984 ஆம் ஆண்டு தேசிய இயக்கங்கள் பதிவு இலாக்காவில் பதிவு பெற்று PPP/PG558/58-5 எனும் பதிவு எண் வழங்கப்பட்டு துடிப்புடன் மேலும் இயங்கியது.
2007 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இளைஞர் விளையாட்டு அமைச்சின் கீழ் பதிவு கொண்ட இளைஞர் இயக்கங்கள் மற்றும் இளைஞர் மேம்பாடு சட்ட விதியின் அடிப்படையில்,26.11.2008 ஆம் ஆண்டு பினாங்கு இந்து இளைஞர் பேரவையின் சிறப்பு ஆண்டுக்கூட்டம் இரவு 8.00 மணிக்கு பட்டர்வொர்த் டேவான் ஸ்ரீ மாரியம்மன் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் அப்போதைய தேசிய தலைவராக இருந்த கே.இராசச்செல்வம்,துணை தலைவர் ஆர்.எல் .கிருஷ்ணன் மற்றும் செயலாளராக இருந்த வீ.விஜயன் அவர்களின் தலைமையில் கூட்டாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் மலேசிய இந்து இளைஞர் இயக்கத்தின் தேசிய துணை செயலாளரும்,ஜூரு இந்து இளைஞர் இயக்கத்தின் தலைவருமான ரமணி ராஜகோபால் அவர்கள் பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவையின் மாநில தலைவராக புதிய இளைஞர் விளையாட்டு அமைச்சு இயக்கங்கள் பதிவு சட்டத்துக்கு உட்பட்டு தலைவராக தேர்வு பெற்றார்.
இதனுடன் புதிய இளைஞர் விளையாட்டு அமைச்சு கீழ் பதிவு கொண்ட இளைஞர் இயக்கங்கள் எனும் பதிவில் மாநில இந்து இளைஞர் பேரவைக்கு PPBM 0015-3091/09 எனும் பதிவு எண் வழங்கப்பட்டது.
"தன்னலமற்ற சேவை" எனும் கொள்கைக்கு இலக்கணமாக பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவை இந்து சமயம்,இளைஞர்கள் முன்னேற்றம்,பொருளாதாரம்,சமூக நலம் எனும் அணைத்து துறைகளிலும் அதி வேகமான நிகழ்வுகளை நடத்தி இளைஞர்களின் நல்ல குடிமக்களாக விட்டுக்கும் நாட்டுக்கும் சேவையாற்றிட உருவாக்கம் செய்தது என்றால் அது மிகையாகாது.
பினாங்கு மாநில இளைஞர் மன்றம்,தேசிய இந்து இளைஞர் பேரவை,மாவட்ட இளைஞர் மன்றம் மற்றும் தேசிய இளைஞர் மன்றங்களில் பினாங்கு மாநில ஆட்சிக்குழு பலரும் முக்கிய பொறுப்புகளை வகித்து வருவதுடன் 22 இந்து இளைஞர் இயக்க கிளைகளும் 5 மாவட்டங்களில் இந்து இளைஞர் இயக்க மாவட்டங்களில் இயங்கும் வண்னம் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
2.ரத்னா ஸ்ரீ கே.குமரகுரு 1977-1981
3.இளைஞர் திலகம் மு.பூபாலன் 1981-1986
4.ரத்னா ஸ்ரீ, டத்தோ வீ.சிதம்பரம் 1986-1995
5.இளைஞர் திலகம் பி.இராஜேந்திரன் 1995-2008
6.இளைஞர் திலகம் ஆர்.ரமணி 2008-2010
7.திரு .சூரிய குமார் 2010-2012
8.ரத்னா ஸ்ரீ ந.மகேந்திரன் 2012-2016
9.திரு.ஆ.ஜெயராமன் நடப்பு தலைவர்.
பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவை பெற்ற விருதுகள்.
1.சிறந்த மாநிலம் விருது 2008 தேசிய இந்து இளைஞர் பேரவை 60 ஆம் ஆண்டு நிறை விழா
2.சிறந்த மாநில விருது 2009 தேசிய இந்து இளைஞர் பேரவை ஆண்டுக்கூட்டம்
3.சிறந்த இந்து இளைஞர் மாநில பேரவை விருது 2010 தேசிய இந்து இளைஞர் பேரவை ஆண்டுக்கூட்டம்
மலேசிய இந்து இளைஞர் பேரவையில் பதவி வகித்த பினாங்கு பொருப்பாளர்கள்.
2.டத்தோ வீ.சிதம்பரம் தேசிய தலைவர்
3.திரு.ந.மகேந்திரன் தேசிய தலைவர்
4.திரு பி.இராஜேந்திரன் தேசிய பொருளாளர்
5.திரு ஆ.சூரியகுமார் தேசிய துணை தலைவர்.
6.திரு.ஆ.ஜெயராமன் தேசிய துணை தலைவர்
7.திரு.ஆர்.ரமணி தேசிய உதவி தலைவர்
8.திருமதி எஸ்.சரஸ்வதி தேவி ஆட்சிக்குழு
9.திரு எம்.பார்த்திபன் ஆட்சிக்குழு
உள்ளன்போடு நினைவில் நினைத்து நிற்பவர்கள்
பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவை 60 ஆண்டு நிறைவை எய்தியில்லை இவ்வேளையில்,இந்த இயக்கம் அமைக்க பல இன்னல்களையும்,போராட்டங்களையும் நடத்தி அமைக்கப்பட்டவுடன் பொருளாதார,சமய சமுதாய அக்கறையுடன் பலர் தியாகங்களை புரிந்து தலைவர்கள் மற்றும் தொண்டர்களை இந்நேரத்தில் நினைத்தும் பார்க்கின்றோம். நடப்பு மாநில ஆ.ஜெயராமன் அவர்களின் தலைமையில் 60 ஆம் ஆண்டு நிறைவு விழா எடுப்பது சாலை சிறந்தது அன்னாரின் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கும் நன்றிகள்.இந்த இயக்கம் அமைக்கப்பட்டு பேரவையாக மாற்றம் பெரும் வகையில் பலர் தொண்டற்றியும்,மறைந்தும் உள்ளனர்.
பினாங்கு மாநிலத்தில் போக்கோக் மாச்சாங் இந்து இளைஞர் இயக்கம் தனி மண்டபம் கொண்டு செயலாற்றியதும்,பட்டர்வொர்த் இந்து இளைஞர் இயக்கத்துக்கு பனி மனை கொண்டும்,ஜூரு இந்து இளையர் இயக்கம்,ஹூஜோங் பத்து இந்து இளைஞர் இயக்கம் அமைய பெற்று இயங்கியது காலத்தால் நினைவில் இருக்கக்கூடியவை.
காலங்கள் மாறலாம் காட்சியும் மாறலாம் அனால் இந்து இளைஞர் இயக்கம் என்ற உணர்வுடன் முன்னாள் இந்து இளைஞர் இயக்கம் எனும் சேவை அடிப்படையில், சட்டத்துக்கு உட்பாட்டு மாறாமல் பழைய நினைவுகளும் சேவையும் மங்கிடாமல் பெயர் பெற்று இன்றளவும் இந்து இளைஞர் முன்னாள் இயக்கம் என்று இருப்பது பட்டர்வொர்த் முன்னாள் இந்து இளையர் இயக்கம். தனக்கென இக்கால இளைஞர்களுக்கு நிகராக பல அறிய சேவைகளுக்கும் உயிரூட்டபடடுள்ளது. அந்த இயக்கத்தின் தலைவராக எம்.பார்த்திபன்,பொறுப்பு வகித்த பிறகு அது செயல்படச தொடங்கி அண்மையில் இரண்டாம் ஆண்டு நிகழ்வினை தெ லையிட் தகிக்கும் முத்திரை பதியும்படியான நிறைவு விழாவை கொண்டாடியது.
மேலும் இந்து இளைஞர் இயக்கதின் மூலமாக சேவையாற்றிய டத்தோ கோபாலகிருஷ்ணன்,வி.சிதம்பரம் காலத்தில் செயலாளராக பணியாற்றிய பாலகிருஷ்ணன்,டத்தோ ஸ்ரீ தனேந்திரன்,மறந்த போக்கோ மாச்சாங் இந்து இளைஞர் இயக்க முன்னாள் தலைவர் இராஜேந்திரன்,முன்னாள் ஜூரு இந்து இளைஞர் இயக்க தலைவர் த.குமார்,இராஜேந்திரன் ஏனைய சேவைகள் ஆற்றிய சுதாகரன்,செபராங் பிறை கருமாரியம்மன் தலைவர் வி.அமரேசன்,சோனாலி வீரையா .ஜாலான் பாரு இந்து இளைஞர் இயக்க தலைவர் சியாம் மானியம்,பாயான் பாரு இந்து இளைஞர் இயக்க தலைவி சரஸ்வதிதேவி,செபராங் ஜெயா இந்து இளைஞர் இயக்க தலைவர் இந்துனன்,புக்கிட் தெங்கா இந்து இளைஞர் இயக்க தலைவர் ஹரிகிருஷ்ணன்,மோகன்,குமாரி ரேகா ஆகியோர் இயக்க சேவையில் இணைந்து சேவையாற்றியவர்கள்.