அந்நிய நேரடி முதலீட்டில் பினாங்கு 15 பில்லியன் பெற்று முதலிடம்
முதலமைச்சர் சௌ குவான் இயோவ் பெருமிதம்
பினாங்கு
ஏப் 23
ஆர்.ரமணி
முதலமைச்சர் சௌ குவான் இயோவ் பெருமிதம்
பினாங்கு
ஏப் 23
ஆர்.ரமணி
நாட்டில் 2019 ஆம் ஆண்டுக்கான அதிக அந்நிய நேரடி முதலீடு பெற்ற முதல் மாநிலமாக பினாங்கு திகழ்வதாக பினாங்கு முதலமைச்சர் சௌ குவான் இயோவ் பெருமிதத்துடன் கூறினார்.பினாங்கு மாநிலம் உற்பத்தி தொழில் துறைக்கு 15 பில்லியன் அந்நிய முதலீட்டை பெற்றுள்ளதை மலேசிய அந்நிய முதலீட்டு மேம்பாட்டுக் கழகமான மிடா (MIDA ) நாட்டில் மேற்கொள்ளப்பட்ட 166 தொழில் துறை திட்டங்களுக்கு அங்கிகாரம் கொண்டு செயல்படுத்தப்பட்ட அறிக்கையில் ஒன்றில் வெளியிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே மொத்த உள்நாட்டு முதலீட்டுக்கு மிடா 16.9 பில்லியன் அங்கிகாரம் வழங்கியுள்ளதாகவும்,அதில் பினாங்கு மாநிலம் உற்பத்தி தொழில் துறைக்கு 16.9 பில்லியன் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது மாநிலத்துக்கு கிடைத்த உயரிய முதலீடாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
பினாங்கு மாநில கொண்டுள்ள தரமான சுற்றுசூழலின் காரணமாக அதிகமான அந்நிய நேரடி முதலீடுகளை மாநிலம் பெற்று வருவதாக கூறிய முதலமைச்சர் சௌ குவான் இயோவ்,பினாங்கில் உற்ப்பத்தி மூலப் பொருட்கள் இல்லாவிட்டாலும் ,திறன் கொண்ட மனித தொழில் ஆற்றல் கொண்ட ஊழியர்களின் காரணமாக அந்நிய நேரடி முதலீடுகளை பெற வழிவகுப்பதாக மாநில சிறப்பு பாதுகாப்புக்கு நடடிக்கைக் குழு முகநூல் பேட்டியில் அவர் தெரிவித்தார்.
மொத்த உள்நாட்டு மாநில உற்பத்தியில் தயாரிப்பு சேவை தரம் 49% முதன்மை வருமானத்தை ஈட்டி தருவதாகவும்,அதனை தொடர்ந்து உற்பத்தி திறன் 46% கொண்டிருப்பதாக கூறிய அவர்,உலகில் தனி சிறப்பு கொண்ட உணவுவகைகளை பினாங்கு கொண்டிருப்பதால் அதில் முக்கிய பங்களிப்பை சுற்றுப்பயண துறை கொண்டிருப்பதுடன் அங்காடி கடைகளில் சுற்றுப்பயணிகள் செலவிடுவதால் வருமானத்தை பெற வாய்ப்பாக இருப்பதாக மேலும் அவர் கூறினார்.
இதனுடன் மாநிலம் கொண்டுள்ள கலை,கலாச்சார பண்பாட்டு நிகழ்வுகள்,மருத்துவ சுற்றுலா,தங்கும் விடுதிகள், உலக தரத்திலான மாநாடுகளை நடந்து கொண்டுள்ள வசதி கொண்ட மண்டபங்கள் மற்றும் நகர் புறத்தில் அமைத்துள்ள சுற்றுசூழல்கள் ஆகியவை மாநில பெரும் வருமான வாய்ப்புகளை கொண்டுள்ளதை மறுப்பதற்கில்லை என முதலமைச்சர் சௌ விவரித்தார்.
பொது சேவை துறையில் பினாங்கு மாநிலத்தில் 300,000 தொழிலார்கள் வேலை செய்ய வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர் என்றும் அதில் பாதி தொழிலார்கள் சுற்றுலா துறையில் பணியாளர்களாக இருப்பதை சுட்டிக் காட்டிய முதல்வர் சௌ பினாங்கு நிறுவன சிந்தனைக் குழுவின் அறிக்கையில் 99% சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் பொது சேவை துறையில் அங்கம் கொண்டுள்ளனர்என வெளியிட்டுள் ள அறிக்கையை சுட்டியும் அவர் கருத்துரைத்தார்.