Ramani Rajagobal Blogspot
TAMIL MALAR
Saturday, 5 September 2015
7. சிறப்புரை : மலேசியா ஸ்ரீ தச்சணா தியான குருகுல
Tuesday, 1 September 2015
செய்தி : தசரதன்
செப் : 02.09.2015
சிம்பாங் அம்பாட்
சிம்பாங் அம்பாட்டில் மகிமை தரும் மகர ஜோதி பூஜை
செப் : 02.09.2015
சிம்பாங் அம்பாட்
சிம்பாங் அம்பாட்டில் மகிமை தரும் மகர ஜோதி பூஜை
சிம்பாங் அம்பாட் ஸ்ரீ தட்சணா ஒளி ஒலி குருகுல கிளையின் ஏற்பாட்டில் மகர ஜோதி பூஜை கடந்த ஞாயிற்றுக்கிழமை,இரவு மணி 7.30க்கு இங்குள்ள சிம்பாங் கிளையின் கட்டிடத்தில் சிறப்புடன் நடைபெற்றது.இந்த சிறப்பு பூஜையை கிளையின் தலைவர் எம்.கண்ணா அவர்களின் தலைமையில் நடந்தது.
இந்த சிறப்பு மகிமை தரும் பூஜையில் மலேசியா ஸ்ரீ தட்சணா குருகுலத்தின் ஸ்தாபகர் பரஹம்சர் ஸ்ரீ மஹா சத்குரு பி.மேகவர்ணன் அவர்கள் சிறப்பு வருகை மேற்கொண்டு பூஜைக்கு தலைமை ஏற்றார்.
மகர ஜோதி பூஜை அம்பிகையை நோக்கி குடும்பத்தில் சுபிட்சம்,செல்வா செழிப்பு,பூரண ஆரோக்கியம் ஆகியவற்றை பெற வழிபடும் ஒரு சிறந்த பூஜையாகும் என்று சத்குரு அவர்கள் விளக்கம் அளித்தார்.மேலும் அவரின் உரையில்,புது மனை புகும் விழாவுக்கும் இந்த மகர ஜோதி பூஜை சிறந்த பலனை அழைக்க வல்லது என்றும் சொன்னார்.கிரக பிரவேசம் என்பது சரியான அர்த்தத்தை கொண்ட புது மனை புகு விழா அல்ல என்றும் மகர ஜோதி பூஜை புது மனை புகு விழாவில் செய்வதன் மூலம் சிறந்த பலனை பேரு முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.இந்த நிகழ்வில் காயத்ரி மந்திரங்களை சொல்லியும் அழங்காரம் செய்யப்பட்ட சக்கரத்தில் பூக்களை தூவியும் மக்கள் வழிபாடு செய்து நிறைவு செய்தனர்.
இந்த சிறப்பு பூஜையில் 80 மேற்பட்ட மக்கள் கலந்து பயன் பெற்றனரஇந்த பூஜையில் மலேசியா ஸ்ரீ தட்சன்ணா ஒளி ஒலி தியான குருகுலத்தின் தலைவர் எம்.இராமையா, செபெராங் ஜெயா குருகுலத்தின் பொறுப்பாளர் ராமு கிருஷ்ணன்,ஜுரு குருகுல பொறுப்பாளர் ஆர்.ரமணி உட்பட நூற்றுக்கு மேற்பட்ட சீடர்களும் பொது மக்களும் கலந்து பயன் பெற்றனர்.
இந்த சிறப்பு பூஜையில் 80 மேற்பட்ட மக்கள் கலந்து பயன் பெற்றனரஇந்த பூஜையில் மலேசியா ஸ்ரீ தட்சன்ணா ஒளி ஒலி தியான குருகுலத்தின் தலைவர் எம்.இராமையா, செபெராங் ஜெயா குருகுலத்தின் பொறுப்பாளர் ராமு கிருஷ்ணன்,ஜுரு குருகுல பொறுப்பாளர் ஆர்.ரமணி உட்பட நூற்றுக்கு மேற்பட்ட சீடர்களும் பொது மக்களும் கலந்து பயன் பெற்றனர்.
1.பூஜையில் கலந்து கொண்ட சீடர்களின் ஒரு பகுதியினர்.
2.சொற்பொழிவு ஆற்றிய குருகுல ஸ்தாபகர் சத்குரு மேகவர்ணன் அவர்கள்
3.சிம்பாங் அம்பாட் குருகுல பொறுப்பாளர் எம் .கண்ணா உடன் கிளை பொறுப்பாளர்கள்
3.சிம்பாங் அம்பாட் குருகுல பொறுப்பாளர் எம் .கண்ணா உடன் கிளை பொறுப்பாளர்கள்
செய்தி : தசரதன்
செப் : 03.09.2015
கூலிம்
கெடா மாநில காவல் துறை தலைவருடன் ஒரு பொன் மலை பொழுது
செப் : 03.09.2015
கூலிம்
கெடா மாநில காவல் துறை தலைவருடன் ஒரு பொன் மலை பொழுது
கெடா கூலிம் மாவட்ட தலைமை காவல் துறையின் ஏற்பாட்டில்,கெடா மாநில காவல் துறை தலைவருடன் ஒரு பொன் மலை பொழுது நிகழ்ச்சி எதிர்வரும் 05.09.2015 ஆம் நாள் காலை மணி 11 முதல் மலை மணி 5 வரை தாமான் குச்சாய் பொது மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு கூலிம் பாண்டார் பாரு மாவட்ட அரசு சார்பற்ற பொது இயக்கங்களின் ஒருங்கிணைப்பு பேரவையின் ஆதரவில் நடைபெறும்.இந்த நிகழ்வில் போட்டி நிகழ்ச்சிகளும் ,சிறப்பு அங்கமாக பாரதம்,கராதே ,சிலம்பம்,தேக்வாண்டோ,சிங்க நடனம்,கார் கண்காட்சி மற்றும் போதை பொருள் ஒழிப்பு பற்றிய விழியப்புணர்வு கண்காட்சியும் இடம்பெறும்.
இந்த நிகழ்ச்சிக்கு சுற்று வட்டார பொது மக்கள் அழைக்கப்டுகின்றனர் .இந்த நிகழ்ச்சி குறித்து மேல் விபரங்கள் பெற மக்கள் முரசு கோவி.தியாகராஜன் 0135150167 என்ற என்னில் தொடர்புக் கொள்ளலாம்.
பட விளக்கம்
1. கெடா மாநில காவல் துறை துறை தலைவர் டத்தோ ஜாம்ரி யஹைய
2. கூலிம் மாவட்ட காவல் துறை தலைவர் சுப்ரிதேன்டன் ஹாஜி அப்துல் அர்ஷத்
3. கோவி.தியகாராஜன்
Monday, 31 August 2015
ஜீவன் ஜோதி
தலைமை செயலாளர்
மலேசியா ஸ்ரீ தட்சணா ஒளி ஒலி குருகுலம்
மலேசியா ஸ்ரீ தட்சணா ஒளி ஒலி குருகுலம் ஏற்பாட்டில் நடக்கும் திறப்பு விழா நினைவு மலருக்கு வாழ்த்து செய்தி வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த திறப்பு விழா நிகழ்வின் மூலமாக தியானம் மற்றும் குருகுல நடவடிக்கைகள் நாட்டின் பல பகுதிகளின் தொடங்குவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கை பிறக்கின்றது.
தியானம் மனித வாழ்கைக்கு மிகவும் பயன் உடையதாக அமைகிறது,ஆகவே குருகுலத்தின் ஏற்பாட்டில் தியான வகுப்புகள் நாட்டின் பல பகுதிகளில் அனுபவம் வாய்ந்த குருமார்களின் உதவியுடன் நடை பெற்று வருகிறது,இதில் அனைவரும் பங்கு பெற அனைவரையும் அழைக்கின்றோம்.
இந்த திறப்பு விழா சீரும் சிறப்பாக ஏற்பாடு செய்ய உதவிய குருகுல ஸ்தாபகர் பரஹாம்சர் மஹா ஸ்ரீ சத்குரு பி.மேகவர்மண் ஐயா அவர்களுக்கு, ஏற்பாட்டுக் குழு தலைவர் ராமு கிருஷ்ணன் அவர்களுக்கும் ,உதவியாக இருந்த குருகுல தலைவர் ஸ்ரீ குரு எம்.இராமையா அவர்களுக்கும்,விளம்பரங்கள் வழங்கிய நிறுவனங்களுக்கும்,தகவல் சாதனங்களுக்கும் குருகுலத்தின் சார்பில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.நமஸ்காரம்
அன்புடன் ,
---------------------------
ஜீவன் ஜோதி
தலைமை செயலாளர்
மலேசியா ஸ்ரீ தட்சணா ஒளி ஒலி குருகுலம்
Sunday, 30 August 2015
ரமணி ராஜகோபால்
ஏற்பாட்டுக் குழு செயலாளர்
மலேசியா தச்சணா ஒளி ஓலி தியான குருகுலத்தின் ஏற்பாட்டில் நடக்கும் திறப்புவிழா நினைவு மலர் வழி சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.குருகுல திறப்பு விழா நிகழ்ச்சிக்கு என்னை ஏற்பாட்டுக் குழு செயலாளராக நியமனம் செய்த ஏற்பாட்டுக் குழு தலைவர் ராமு கிருஷ்ணன் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்து மக்களுக்கு தியானம் மற்றும் ஆன்மீக வழியில் சிறப்பாக வாழ அறிய தகவல்களை அளித்து வரும் இந்த குருகுலத்தின் மூலன் பலர் நன்மை அடைத்து வருகின்றனர்.இந்த ஆன்மீக பயணம் கால சக்கரத்தின் முடிவில் இறைவனை அடையும் வழி முறைகளை தெள்ள தெளிவாக விளக்கி வருகிறது, இதை நமது மக்கள் இந்த தியான குருகுலத்தில் வகுப்புகளில் கலந்து பயன் பெற அன்புடன் அழைக்கிறோம்.
இந்த திறப்பு விழா நாடு முழுவதும் உள்ள இந்து மக்களுக்கு அடிப்படை தியானம் செய்யும் முறையும் செம்மையாக வாழம் முறையும் சிறந்த குருமார்களின் துணையுடன் கற்றுகொடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றது.இதனிடையே இந்த திறப்பு விழா சிறப்புடன் நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி அவர்களுக்கும்,ஏற்பட்டுக் குழுவினர்களுக்கும்,நாடு தழுவிய நிலையில் உள்ள குருகுல பொறுப்பாளர்களுக்கும்,விளம்பரங்கள் வழங்கிய நிறுவனம்,தனி நபர்களுக்கும் மற்றும் எல்லா வகையிலும் திறப்பு விழா சிறப்புடன் நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் ஏற்பட்டுக் குழு சார்பில் எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.நமஸ்காரம்
அன்புடன் .
------------------------
ரமணி ராஜகோபால்
ஏற்பாட்டுக் குழு செயலாளர்