பினாங்கு மாநில முத்தமிழ் சங்கம் சேவையாளர்களுக்கு கௌரவிப்பு
செபராங் ஜெயா
செப் 21.09.2017
ஆர்.தசரதன்
பினாங்கு மாநில முத்தமிழ் சங்க ஏற்பாட்டில் அண்மையில் இங்குள்ள செபராங் ஜெயாவின் உள்ள ஜெயா கேட்டரிங் உணவகத்தில் நடந்த விருந்தோம்பல் நிகழ்வில்,பினாங்கு ஆளுநர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பட்டம் பெற்ற சங்கத்தின் சேவையாளர்களுக்கு சிறப்பு செய்யும் நிகழ்வு சிறப்புடன் நடைப்பெற்றது.
இந்நிகழ்வுக்கு மாநில முத்தமிழ் சங்கதின் தலைவர் முத்தமிழ் மணி க.உ.இளங்கோவன் அவர்களின் தலைமையில் நடந்தது.இந்நிகழ்வில் உரையாற்றிய க.உ.இளங்கோவன் அவர்கள் சேவையாளர்களின் சேவையை என்றும் அங்கிகரித்த அவர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதன் வழி அவர்களின் சேவைகளை சமுதாயதுக்கு மேலும் வழங்க ஊக்கம் அளிக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்நிகவுக்கு சமூக சேவையாளர் டத்தோ மேஜர் நவநீதம் அவர்கள் ஆதரவு வழங்கி உரை யாற்றினார்.அவரின் உரையில் சேவையாளர்களை பாராட்டுவது அவர்கள் சமூக சேவையில் பல காலமாக செய்த சேவைகளுக்கு பாராட்டு ஒரு அங்கிகாரமாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சிறப்பு பிரமுகர்களாக தஞ்சோங் தமிழ் முஸ்லீம் சங்க தலைவர் நசீர் முகைதீன்,பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டுக் கழக தலைவர் எம்.பாலன்,புக்கிட் மெர்தாஜாம் தமிழ் இளைஞர் மணிமன்ற காப்பாளர் சேகர் ராமையா,சுங்கை புயூ மகா மாரியம்மன் ஆலய தலைவர் பெரியவர் முத்தையா மற்றும் அழைக்கப்பட்ட பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பைத்தனர்.
இதனிடையே சபினாங்கு மாநில முத்தமிழ் சங்கத்தின் சார்பில் எஸ்.இராமச்சந்திரன்,எம்.பழனியாண்டி,நா.வேணுகோபால் எம்.பூங்கொடியாள் இளங்கோவன்,இந்திய மேம்பாட்டு கழகத்தின் திருமதி தேவி,மற்றும் மலேசிய நண்பன் பத்திரிக்கை நிருபர் ஆர்.தசரதன் மற்றும் தமிழ் மலர் செய்தியாளர் டி.ஆர்.ராஜா ஆகியோர் சிறப்பு செய்யப்பட்ட சேவையாளர்கள் என்பது குறிப்பிடதக்கது.
பட விளக்கம்
சிறப்பு செய்யப்பட்ட சேவையாளர்களுடன் ஏற்பாட்டுக் குழுவினர் உடன் க.உ.இளங்கோவன் மற்றும் டத்தோ நவநீதம்