Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Thursday, 10 August 2017

பினாங்கு தாமரை மன்ற ஏற்பாட்டில் இந்திய புது மண தம்பதிகளுக்கு பயிற்சி முகாம் 

குடும்ப உறவுகளின் பலம்  சமூகத்தின் மேன்மை ..சார்ஜன் முருகையா 



ஜார்ஜ்டவுன் 

ஆக.   12.08.2017

ஆர்.தசரதன் 




பினாங்கு மாநிலத்தில்  நற்சேவைகளை  ஆற்றிவரும் தாமரை மன்றத்தின் ஏற்பாட்டில் இந்திய தம்பதிகளுக்கு குடும்ப நல பயிற்சி முகாம் நிகழ்வு அண்மையில் சிறப்புடன் நடைபெற்றது.

இந்நிகழ்வு மன்ற தலைவர் திருமதி பாக்கியலெட்சுமி  அவர்கள் தலைமையற்றார்.பினாங்கு மாநில குடும்ப,சமூக  நல்வாழ்வு அமைச்சின்   இணை ஆதரவில் நடத்தப்பட்ட இந்நிகழ்வு இங்குள்ள சென்ட்ரல் தங்கும் விடுதியில் சிறப்புடன் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மத்திய  செபராங் பிறை காவல் துறையை சேந்த  சார்ஜன் முருகையா சிறப்பு பிரமுகரான கலந்துக்  கொண்டு சிறப்பித்தார்.

அவரின் தலைமையுரையில் குடும்ப உறவுகளிடையே அணுக்கமான உறவு இருப்பது அவசியம் என்றும்,இதனால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள குண்டர் கும்பல் கலாச்சாரம் விட்டொழிக்க முடியும் என்றும்,குடும்ப செழிப்புக்கு கல்வி மற்றும் தன்னிலையை உயர்திக் கொள்ள மேலும் பயிற்சிகளில் கலந்துக்க கொள்வது அவசியம் என்றும் அவர் கூறினார்.மேலும் அவரின் உரையில் குடும்ப உறவுகளின் பலம்  சமூகத்தின் மேன்மை பெறுவது திண்ணம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


இந்நிகழ்வில் 30 இந்திய புது மண தம்பதிகள் கலந்துக் கொண்டனர்.புதியதாக திருமணமான இந்திய  தம்பதிகளுக்கு வாழ்வில் எதிர் நோக்கும் சவால்கள் அதனை கடக்கும் வழிமுறைகள் மற்றும் சீராக  குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து வாழவும் வழி  முறைகள் ஆகியவை பயிற்சியாக அனுபவம் நிறைந்த பயிச்சியாளர்களின் மூலமாக நடத்தப்பட்டதாக இந்நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவின் தலைவருமான திருமதி பாக்கியலெட்சுமி குறிப்பிட்டார்.

இரண்டாம் ஆண்டாக  இது போன்ற நிகழ்வு நடத்தபட்டதாக கூறிய அவர்,இந்திய  தம்பதிகளிடமிருந்து நல்ல  ஆதரவு கிடைத்ததினால்   இந்நிகழ்வு நடத்தப்பட்டது என்றும் அவர் சொன்னார்.

குடும்பங்கள் சமூகத்தின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது என்றும் அவை சமுதாய முன்னேற்றத்துக்கு குடும்ப உறுப்பினர்களின் பங்கு அவசியமானது என்பதால்,குடும்பங்களில் ஒன்றிணைந்த  ஒற்றுமை பேனப்படுவதால்  சமூக ஒற்றுமை மேலோங்கி அவை சமூக மாறுதலுக்கு வழி  வகுக்கும் என்ற நோக்கத்துக்காக இந்த  நிகழ்வு நடத்தப்பட்டதாகற்கான  திருமதி பாக்கிலெட்சுமி தமது உரையில் கூறினார்.

 பட விளக்கம் 

குடும்ப நல்வாழ்வு பயிற்சி முகாமில் கலந்துக் கொண்ட இந்திய தம்பதிகளின் ஒரு பகுதி 

சார்ஜன் முருகையா அவர்களுக்கு பாக்கிலெட்சுமி நினைவுசின்னம் வழங்கிய போது