ரமணி ராஜகோபால்
ஏற்பாட்டுக் குழு செயலாளர்
மலேசியா தச்சணா ஒளி ஓலி தியான குருகுலத்தின் ஏற்பாட்டில் நடக்கும் திறப்புவிழா நினைவு மலர் வழி சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.குருகுல திறப்பு விழா நிகழ்ச்சிக்கு என்னை ஏற்பாட்டுக் குழு செயலாளராக நியமனம் செய்த ஏற்பாட்டுக் குழு தலைவர் ராமு கிருஷ்ணன் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்து மக்களுக்கு தியானம் மற்றும் ஆன்மீக வழியில் சிறப்பாக வாழ அறிய தகவல்களை அளித்து வரும் இந்த குருகுலத்தின் மூலன் பலர் நன்மை அடைத்து வருகின்றனர்.இந்த ஆன்மீக பயணம் கால சக்கரத்தின் முடிவில் இறைவனை அடையும் வழி முறைகளை தெள்ள தெளிவாக விளக்கி வருகிறது, இதை நமது மக்கள் இந்த தியான குருகுலத்தில் வகுப்புகளில் கலந்து பயன் பெற அன்புடன் அழைக்கிறோம்.
இந்த திறப்பு விழா நாடு முழுவதும் உள்ள இந்து மக்களுக்கு அடிப்படை தியானம் செய்யும் முறையும் செம்மையாக வாழம் முறையும் சிறந்த குருமார்களின் துணையுடன் கற்றுகொடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றது.இதனிடையே இந்த திறப்பு விழா சிறப்புடன் நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி அவர்களுக்கும்,ஏற்பட்டுக் குழுவினர்களுக்கும்,நாடு தழுவிய நிலையில் உள்ள குருகுல பொறுப்பாளர்களுக்கும்,விளம்பரங்கள் வழங்கிய நிறுவனம்,தனி நபர்களுக்கும் மற்றும் எல்லா வகையிலும் திறப்பு விழா சிறப்புடன் நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் ஏற்பட்டுக் குழு சார்பில் எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.நமஸ்காரம்
அன்புடன் .
------------------------
ரமணி ராஜகோபால்
ஏற்பாட்டுக் குழு செயலாளர்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home