Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Thursday 3 December 2015

செய்தி : ஆர் . தசரதன்
டிச         : 03.12.2015
ஜார்ஜ்டவுன்


பினாங்கில் ஜனவரி தொடக்க 3 பெர்ரி படகுகள் மட்டுமே சேவையாற்றும்
                                   துறைமுக வாரியம் தகவல்!

     

             பினாங்கில் அடுத்த ஆண்டு ஜனவரி திங்கள் 1ஆம் நாள் முதல் பினாங்குத் தீவிலிருந்து பெரு நிலத்திற்கும் இதே போன்று பெரு நிலத்திலிருந்து பினாங்கு தீவிற்கும் 3 பெர்ரி படகுகள் மட்டுமே சேவையாற்றும் பினாங்கு மாநில துறைமுக வாரியம் அறிவித்துள்ளது.

            இந்த விவகாரம் தொடர்பில் அதன் தலைமை நிர்வாகி ரோஸிஹான் அடி பகர்தீன் வெளியிட்டிருக்கும் ஓர் அறிக்கையின் வழி, இந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இதன் பொருட்டு பயணிகளும் வாகனமோட்டிகளும் தங்களின் பயணங்களை மாற்று வழிகளில் மேற்கொள்ளுமாறும் இதன் வழி அறிவுறுத்தப்பட்டது.

            2016ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் முதல் பெரு நிலத்தின் சுல்தான் அப்துல் ஹலீம் துறைமுகத்திலிருந்து முதல் பெர்ரி படகின் தொடக்கம் காலை 6.00 மணிக்கு இயக்கப்படுமென்றும், இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் அடுத்தடுத்து படகுகள் இயக்கப்பட்டு கடைசிப் படகு நள்ளிரவு 11.00 மணியோடு நிறைவடையுமென்று  ரோஸிஹான் குறிப்பிட்டுள்ளார்.

           இதே போன்று ஜோர்ஜ்டவுன் நகரின் ராஜா துன் ஊடா துறைமுகத்திலிருந்து முதல் பெர்ரி படகு காலை 6.30 மணிக்கு தொடங்கி, இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் அடுத்தடுத்த படகுகள் இயக்கப்பட்டு, கடைசிப் படகு நள்ளிரவு 11.30 மணியுடன் ஓய்வு பெறுமென்று அவர் தனது அறிக்கையின் வாயிலாக விவரித்துள்ளார்.

           பெர்ரி படகுத் துறைக்கான நிர்வாகப் பிரிவின் செயற்குழு கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பில் இறுதிக் கட்ட முடிவு எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இதுவே அடுத்த ஆண்டு முதல் தங்களின் பெர்ரி  படகுச் சேவைக்கான புதிய அட்டவணையாக   இதனை கருத்திற் கொள்ள வேண்டுமென்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

                                     
பட விளக்கம்:

பினாங்கு மாநிலத்தில் இயக்கப்படும் பெர்ரி படகுகளின் தோற்றம்.         

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home