Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Monday, 13 December 2010

நன்றி மலர்கள்

அன்பான சகோதர்களே வணக்கம்.நீண்ட இடைவெளிக்கு பிறகு எழுத தொடங்கியுள்ளேன்.அனைவரும் நலமா.முருகன் திருவருளால் அனைவரும் நலமாக அமைய வேண்டுகிறேன்.

கடந்த மூன்று வருடங்களாக மாநில இந்து இளைஞர் பேரவை,மலேசிய இந்து இளைஞர் பேரவை ஆகிய பொறுப்புகளில் இருந்து ஓய்வு  பெற்றேன்.கடந்த காலங்களின் மாநில தலைவராகவும் ,தேசிய உதவி தலைவராகவும் பொறுப்பு வகித்தேன்.

இதன் அங்கீகாரமாக மாமன்னர் அவர்களின் பிறந்த தின விழாவின் பொது PPN எனும் விருது வழங்கி கௌரவித்தது வாழ்வில் மறக்க முடியாத சம்பவமாகும்.அந்த விருதளிப்பு விழாவில் அரசாங்க உயரிய சேவையாற்றிய நபர்களுக்கு விருது வழங்கபட்டது அது போல, இந்து இளைஞர் பேரவைக்கு சேவை ஆற்றியதன் பேரில் இந்த கெளர விருது  எனக்கும் வழங்க பட்டது.

இந்த விருதை எனக்கு வழங்கி  சிபார்சு செய்த முன்னால்  தேசிய மலேசிய இந்து இளைஞர் பேரவை தலைவர் கா.ராசசெல்வன் அவர்களுக்கு நன்றி.

அன்புடன்
ஆர்.ரமணி