Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Thursday, 3 December 2015

செய்தி : ஆர்.தசரதன்

ஆக்        : 08.10.2015

பினாங்கு


பினாங்கு மாநில தபேலா இயக்க விருந்தில் மாணவர்கள் கௌரவிப்பு



பினாங்கு மாநில தபேலா இயக்க ஏற்பாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம்   இந்த இயக்க மாணவர்கள் நீண்ட நீரம் தபேலா இசைத்து மலேசியா சாதனை புத்தகத்தில்  இடம் பெற்றதை கொண்டாடும் விதத்தில் விருந்து நிகழ்வு  ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்புடன்  ஏற்பாடு செய்யபட்டது.இந்த விருந்து நிகழ்வு இங்குள்ள பினாங்கு சுங்கை நிபோங்  பேஸ்தா இருப்பிட பகுதியில் உள்ள மண்டபத்தில் நடந்தது.இந்த நிகழ்வு மாநில தபேலா இயக்கத்தின் தலைவர் டாக்டர் எம்.சரவணன் அவர்கள் தலைமையில் நடந்தது.


நிகழ்வில் தொடக்க அங்கமாக ஷேன் ஹோம்  ஆசிரமத்தை சேர்த்த மாணவ மாணவிகள் சிறந்த முறையில் தபேலா இசையை முழங்கி நிகழ்வை தொடக்கி வைத்தனர்.அதனை தொடர்ந்து நிகழ்வின்  தலைமையுரையை  மாநில தபேலா  இயக்கத்தின் தலைவர்  டாக்டர் எம்.சரவணன் உரையாற்றினார் அவர் தமதுரையில் மாநில தபேலா இயக்கத்தின் நீண்ட நாள் கனவான மலேசியா சாதனை புத்தகத்தில்  இடம் பெற ஒரு முயற்சியாக நீண்ட நேரம் தபேலா இசை நிகழ்வை  வெற்றிகரமாக நடைபெற  அயராது உழைத்த தமது மாநில தபேலா இயக்க நிர்வாகத்தினர்,மாநில தபேலா இயக்கத்தின் ஸ்தாபகர் மாஸ்டர் சக்திவேல்,நன்கொடைகளை வழங்கிய என்ரிகோ நிறுவன உரிமையாளர் எஸ்.கே .சுந்தரம்   ,வள்ளல் ரங்கசாமி பிள்ளை குடும்பத்தினர் மாநில முதல்வர் லிம் குவான் எங்,பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமாசாமி,ஸ்ரீ டெலிமா சட்ட மன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.ராயர் மற்றும் மாநில தபேலா இயக்கத்தின் பயிற்சி  மாணவர்கள்   அனைவருக்கும் தமது நன்றியை அவர்  தெரிவித்துக் கொண்டார்.

இதனுடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.ராயர் அவர்கள் தமதுரையில் மலாய்சியா சாதனை புத்தகத்தில் சதிட்ட மாநில தபேலா இயக்கத்தை வெகுவாக பாராட்டிதுடன்,தற்போது நாட்டில் சில பொறுப்பற்ற நபர்களால் இனங்களிக்கிடையே பதத்தமான விமர்சனக்களை செய்த போதும் பல இன மக்களை இந்த நிகழ்வில் தமது இசையின் மூலம் ஒன்று படுத்திய மாஸ்டர் சக்திவேல் அவர்களை அவர் வெகுவாக பாராட்டினார்.

இரவு விருந்துடன் கூடிய இந்த நிகழ்வில் சாதனை புரிந்த மாணவர்கள் அனைவருக்கும் மலேசியா சாதனை புத்தக நினைவு சான்றிதழ் வழங்க பட்டது,இந்த சான்றிதழ்களை மாநில தபேலா இயக்கத்தின் ஸ்தாபகர் மாஸ்டர் சக்திவேல் எடுத்து வழங்கினார்.இந்த வ்வரலற்று சிறப்பு நிகழ்வில் சிறப்பு பிரமுகர்களாக ஸ்ரீ டெலிமா சட்ட மன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.ராயர், என்ரிகோ நிறுவன உரிமையாளர் எஸ்.கே சுந்தரம்,டத்தோ கோரிஸ்,என்.ஆர்.ரத்னம் பிள்ளை,மாஸ்டர் குமரன்  உட்பட தபேலா  பயிற்சி மாணவர்களின் குடும்பத்தினரும்  திரளாக கலந்தி சிறப்பித்தனர்.


பட விளக்கம்

1.சாதனை மாணவர்களுடன் மாஸ்டர் சக்திவேல்

2. நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு பிரமுகர்கள்

3.நிகழ்வில் கலந்து கொண்ட பொது மக்களின் ஒரு பகுதியினர்

5.சிறப்பு தபேலா வாசிட்ட மாணவர்களின் ஒரு பகுதி 
 
 
 
 
 
 
 
 
   

செய்தி : ஆர் . தசரதன்
டிச         : 03.12.2015
ஜார்ஜ்டவுன்


பினாங்கில் ஜனவரி தொடக்க 3 பெர்ரி படகுகள் மட்டுமே சேவையாற்றும்
                                   துறைமுக வாரியம் தகவல்!

     

             பினாங்கில் அடுத்த ஆண்டு ஜனவரி திங்கள் 1ஆம் நாள் முதல் பினாங்குத் தீவிலிருந்து பெரு நிலத்திற்கும் இதே போன்று பெரு நிலத்திலிருந்து பினாங்கு தீவிற்கும் 3 பெர்ரி படகுகள் மட்டுமே சேவையாற்றும் பினாங்கு மாநில துறைமுக வாரியம் அறிவித்துள்ளது.

            இந்த விவகாரம் தொடர்பில் அதன் தலைமை நிர்வாகி ரோஸிஹான் அடி பகர்தீன் வெளியிட்டிருக்கும் ஓர் அறிக்கையின் வழி, இந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இதன் பொருட்டு பயணிகளும் வாகனமோட்டிகளும் தங்களின் பயணங்களை மாற்று வழிகளில் மேற்கொள்ளுமாறும் இதன் வழி அறிவுறுத்தப்பட்டது.

            2016ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் முதல் பெரு நிலத்தின் சுல்தான் அப்துல் ஹலீம் துறைமுகத்திலிருந்து முதல் பெர்ரி படகின் தொடக்கம் காலை 6.00 மணிக்கு இயக்கப்படுமென்றும், இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் அடுத்தடுத்து படகுகள் இயக்கப்பட்டு கடைசிப் படகு நள்ளிரவு 11.00 மணியோடு நிறைவடையுமென்று  ரோஸிஹான் குறிப்பிட்டுள்ளார்.

           இதே போன்று ஜோர்ஜ்டவுன் நகரின் ராஜா துன் ஊடா துறைமுகத்திலிருந்து முதல் பெர்ரி படகு காலை 6.30 மணிக்கு தொடங்கி, இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் அடுத்தடுத்த படகுகள் இயக்கப்பட்டு, கடைசிப் படகு நள்ளிரவு 11.30 மணியுடன் ஓய்வு பெறுமென்று அவர் தனது அறிக்கையின் வாயிலாக விவரித்துள்ளார்.

           பெர்ரி படகுத் துறைக்கான நிர்வாகப் பிரிவின் செயற்குழு கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பில் இறுதிக் கட்ட முடிவு எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இதுவே அடுத்த ஆண்டு முதல் தங்களின் பெர்ரி  படகுச் சேவைக்கான புதிய அட்டவணையாக   இதனை கருத்திற் கொள்ள வேண்டுமென்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

                                     
பட விளக்கம்:

பினாங்கு மாநிலத்தில் இயக்கப்படும் பெர்ரி படகுகளின் தோற்றம்.         

செய்தி : ஆர்.தசரதன்

டிச         : 03.12.2015

ஜார்ஜ்டவுன் 
     
 


பினாங்கில் தென்மேற்கு மாவட்டத்தில் வெள்ளப்  பேரிடர் ஏற்பட          
         குப்பைக் கூளங்களே காரணம்  ஆய்வில் கண்டரிவு ...
   

       பினாங்கு மாநிலத்தின் தென்மேற்கு மாவட்டத்தில் சமீப காலமாக அடிக்கடி நிகழ்ந்து வரும் வெள்ளப் பேரிடருக்கு அங்கிருக்கும் பலப் பகுதிகளில் நிறைந்திருக்கும்  குப்பைக் கூளங்களே மூல காரணமென்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக, வெள்ளப் பேரிடர் மற்றும் நிவாரணப் பணிகளுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் இயாவ் தெரிவித்துள்ளார்.

       இந்த மாவட்டத்தின் ஆங்காங்கே மிகுந்திருக்கும் குப்பைக் கூளங்களால், சுங்கை திராம், ரெலாவ், தெல்லோக் கும்பார், பண்டார் பாயான் பாரு கம்போங் செரோனோக், பத்து மவுங் மற்றும் பாயான் லெப்பாஸ் அனைத்துலக விமான நிலையம் போன்றப் பகுதிகளில் வெள்ளம் சூழ்கின்ற அவல நிலைக்கு  இங்கு தெல்லோக்  கும்பார் பகுதியில் அமைந்திருக்கும் வடிகால் மற்றும் நீர் பாசனத் துறையினரால் இயலாத கதி ஏற்பட்டுள்ளதாக அவர் விவரித்துள்ளார்.

       இப்பகுதிகளில் பாய்கின்ற ஆறுகளில் குப்பைக் கூளங்கள் பெருமளவில் நிறைந்து சீரான  நீரோட்டத்திற்கு வழியின்றி அடைப்புகளை ஏற்படுத்துவதால், மழைக் காலங்களில் வெள்ள நீர் வெளியேறுவதற்கு தடை நிகழும் அவலம் சூழ்ந்து, ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கும் நிலைமையைக் காண முடிவதாக சாவ் சுட்டிக் காட்டியுள்ளார்.

        கடந்த சில தினங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் சுமார் 2 மணி நேரமாக இடை விடாமல் பொழிந்த மழையால் 80 செ.மீ அளவுக்கு மழை பதிவானதாகக் கூறிய அவர், மிகையான இந்த மழை நீர், அருகிலிருக்கும் ஆறுகளின் நீரோட்டத்தின் வாயிலாக சீரான நிலையில் வெளியேற இயலாமல் குப்பைக் கூளங்களின் தடையால் தேங்கி நின்று வெள்ளப் பெருக்கினை ஏற்படுத்தியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

        இது தவிர பத்து மவுங் பகுதியில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும்  கட்டுமானப் பணிகளால்  வெள்ளம் ஏற்படுவதற்கு காரணமாகி விட்டதாக சாவ் செய்தியாளர்களிடம் கூரினார்.இதன் பொருட்டு இங்கிருக்கும் ஆறுகளிலும் கட்டுமானப் பகுதிகளின் சுற்றுப் புறங்களிலும் காணப்படும் குப்பைக் கூளங்கள் மற்றும் அடைப்புகளை சீரமைப்பதற்கான பணிகளில் வடிகால் மற்றும் நீர்பாசனத் துறையினர் ஈடுபடுவதற்கு ஆயுத்தமாகி இருப்பதாகக் கூறியிருக்கும் சாவ்,நீர் பாசனத் துறையின் நீர் உறிஞ்சு இயந்திரமும் இங்கு சீராக செயல்படுவதற்கு உறுதி காணப்பட்டிருப்பதாகவும் அறிவித்துள்ளார்.   

        இப்பகுதிகளில் உள்ள கால்வாய்களையும்  சாக்கடைகளையும்   தூர்வாரி தூய்மைப்படுத்தும் சீரமைப்புப் பணிகளை நகரசபையின் உதவியுடன் மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிக்கப்பட்டிருப்பதால், இப்பிரச்சனைக்கு விரைந்து சுமூகத் தீர்வு காண்பதற்கு வழி பிறந்திருப்பதாக சாவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

                                       

பட விளக்கம்:

குப்பைக் கூளங்கள் நிறைந்திருக்கும் ஆறுகளை விளக்கும் படக் காட்சிகள்.
 
சமிபத்தில் ஏற்பட்ட வெள்ள நிலைமையில் ஒரு பகுதி