Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Friday, 25 December 2015


செய்தி : ஆர்.தசரதன் 
 
டிச         : 27.12.2015
 
பட்டர்வொர்த் 
 
சூப்பர் பைக் விபத்து ஆடவர் உயிரிழந்தார் 
 
 
பெர்லிஸ் மாநிலத்துக்கு ஒரு தொடரணியில் பங்கு பெற்ற ஆடவர் ஒருவர் நேற்று தமது இரு சக்கர சூப்பர் பைக் வாகனம்  கட்டுப்பாட்டை இழந்ததால் பரிதாபமாக உயிரிழந்தார் .இந்த சம்பவம் நேற்று முன்தினம் மதியம் 12.15 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலை 132.6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெர்மாதாங் பாவ் அருகில் நடந்தது.இந்த சம்பவத்தில் சிலாங்கூர் மாநிலத்தை சேர்ந்த ஷைரி என்பவர் கொள்ளபட்டதாக போக்குவரத்து போலீஸ்  பேச்சளார் சொன்னார்.இந்த சம்பவத்தை நேரில் கண்ட அடைவர் ஒருவர் ஷைரி பயணித்த சூப்பர் பைக் இருசக்கர மோட்டார் வாகனம்  கட்டுபாட்டை இழந்ததால் அந்த விபத்து ஏற்பட்டது என்றும் அந்த பேச்சாளர் மேலும் சொன்னார்.
 
சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்த  போக்குவரத்து போலீசார் ஆடவரின் சடலத்தை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக செபராங் ஜெயா பொது மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்தில் மற்ற ஏனைய தொடரணியில் பங்கு பெற்றவர்கள் இந்த விபத்தில் சிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
 
 
பட விளக்க 
 
விபதுக்குள்ளான ஆடவரின் சடலம் 

 
 





பட்டர்வொர்த் : பெர்லிஸ் ஒரு தொடரணி உள்ள ஒரு superbiker இன்று வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பெர்மாத்தாங் Pauh அருகே சவாரி போது அவரது இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து பின்னர் இறந்தார்.

அவர் , KM132.6 ஒரு உலோக வகுப்பி ஒரு northbound மோதிய பிறகு 12.15pm சம்பவத்தில், முகமட் Shairie Izwan Shuhairi உடனடியாக கொல்லப்பட்டார்.

போலீஸ் வட்டாரங்கள் ஷா அலாம், சிலாங்கூர், இருந்து Shairie , ஒரு விடுமுறை பயணம் பெர்லிஸ் ஒரு சூப்பர்பைக்கான தொடரணி ஒரு பகுதியாக இருந்தது என்று.

நேரில் கண்டவர்கள் Shairie அவரது இயந்திரம் வெளியேற்றப்பட்டார் என்று.

அவரது இயந்திரம் தொடரணியில் away.Other ரைடர்ஸ் தீங்கும் வரவில்லை 200 மீட்டர் இருந்தது .

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக Seberang 

Monday, 21 December 2015

செய்தி : ஆர்.தசரதன் 
டிச. 22
பத்து கவான்,
 
 
 
பத்து கவான் மக்கள்  ஆலயம் மற்றும்  இடுகாட்டினை   பாதுகாப்பதில்  உறுதிவரை போராட உறுதி.
 
  
 
பினாங்கு மாநிலத்தை ஆளும் பக்காத்தான் அரசின் பதிவேட்டில் 100 ஆண்டுக்கு பழமை வாய்ந்த கட்டடங்கள், ஆலயங்கள் புரதான சின்னங்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று மாநில முதல்வர் லிம் குவான் எங்,  2008 ஆம்  ஆண்டு ஆட்சியமைத்த போது  அறிவித்திருந்தார்.
  
அதுபோலவே பத்து கவானிலுள்ள பகுதியில்  மலாய் கிராமம், சீனக் கோயில்கள், சீனக் கிராமங்கள் அனைத்தும் இதுவரையிலும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன நிலையில்,பலம் பெரும் இந்தியர்களுக்கு  சொந்தமான தோட்டம் மட்டும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றது.இந்த தோட்டத்து ஆலயம் மற்றும் இடுகாடு தனை  
மக்கள் பாதுகாக்க போராடி வருகின்றனர்.
     
2008 ஆம் ஆண்டு ஆட்சியேற்ற அடுத்த ஆண்டே மாநில அரசு இடுகாடு, ஆலயம் இரண்டையும் கையகப்படுத்த எடுத்த நடவடிக்கையை 2010 ஆண்டு எங்கள் ஆலய நிர்வாகமும் இங்குள்ள பொதுமக்களும் முறியடித்தோம் என்று ஆலயத் தலைவர் கோ.மணோகரனும், ஆலய அறங்காவலர் மு.வி.மதியழகனும் தெரிவித்தனர்.
   
அதோடு இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைகப்பட்டு விட்டது  என்று நினைத்திருந்த வேளையில், மீண்டும் இவ்வாண்டு ஜூன் மாதத்தில் இந்து அறப்பணி வாரியம் இப்பிரச்சனையை கையிலெடுத்ததன் காரணமாக தீமிதி திருவிழாவையும்  முதல் முறையாக  தடுத்து நிறுத்தினர். அடுத்து  இரண்டாவது  முறையாக  ஏற்பாடு செய்யப்பட்ட  தீமிதி திருவிழா நடத்த விடாமல் பல தொல்லைகள் தந்து நீதிமன்ற தடையுத்தரவு மூலம் தடுத்தனர்.வழக்கு தொடுத்து நடப்பு நிர்வாகமான எங்கள் நிர்வாகம் அதிகாரபூர்வமற்ற நிர்வாகம் என்று வாதிட்டனர். 17.12.15 இல் பினாங்கு உயர் நீதிமன்ற விசாரணையில் இது ஒரு அடிப்படையற்ற புகார் என கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. அத்தீர்பில் இரு தரப்பும் இனி எந்தவொரு அறிக்கையும் விட்டு யாரும் யாரையும் தாக்கி பேசக்கூடாது என்றும் வரும் 21.12.15 அன்று ஆலய அனைத்து ஆபரணங்களையும் நடப்பு நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.
   
அரசியல் கட்சிகளின் குருகிடலின் பேரில்  ஆர்.ஓ.எஸ் கடிதம் கொடுத்துள்கதாக பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.  ஆலய பதிவு ரத்தானதுக்கு காரணம் வரவு செலவு கணக்குகள் அல்ல,மாறாக  முகவரி மாற்றத்தால் ஏற்பட்ட புகாரின் அடிப்படை காரணம்  என்று ஆலயத் தலைவர் கோ.மணோகன் தெளிவுப்படுத்தி்னார்.
  
  இந்த தொட்டது மக்கள் தங்களின்  ஆலயம் இவ்வளவு பிரச்சனைகளை எதிர்நொக்குவது என்பது வேறு எங்கும் கிடையாது என்று  தேறிவித்த  நிலையில் பாரிசான் அரசாங்கத்திடம் சுமார் 40 ஆண்டுகளாக போராடி சிறுக சிறுகப் பெற்ற பாதுகாத்து இரண்டு கோயில்கள், இரண்டு இடுகாடுகள் போன்ற அடையாள சின்னங்கள், வருங்கால  சந்ததிகளுக்கு இம்மண்ணை  சேந்த மைந்தர்களால் வழிபாடு செய்ய பதுகாக்கபட்ட  வந்த புரதான சின்னங்களாக விளங்க வேண்டும் என்ற நல் நோக்கத்திற்காகவே என பொது மக்கள் விருப்பம் தெரிவித்தனர்.
    
இதனையெல்லாம் கட்டிக்காக்க துடிக்கும் எங்களின் நோக்கத்தை துணை முதல்வரான பேராசிரியர் நன்கு புரிந்துக் கொண்டு பத்து கவான் இந்தியர்களுக்கு இதனையாவது நிலை நிறுத்த முன்வாருங்கள் என்று கோரிக்கையை முன்  வைக்கின்றோம். . ஆக புரதான சின்னங்களை பாதுகாக்கவே எங்களின் போராட்டத்திற்கு அடித்தளம்.அதனைப் பெற எல்லோரும் ஒன்றுக்கூடி  நிற்கின்றோம் என்ற உறுதிப்பாட்டையும் அவர்கள் தெரிவித்தனர்.
    
இதனிடையே, முகநூலில் பேராசிரியர் ராமசாமி ஆலயத்தையும், மற்ற ஆரசியல் கட்சி மற்றும் , ஆர்.ஒ.எஸ்இக்கு எதிரான கருத்துக்களை முக நூலில்   வசைப்பாடி எழுதியுள்ள செயலுக்கு நேற்றைய முன்தினம்  போலிஸ் புகார் ஒன்றை  ஆலய நிர்வாகத்தினர்  மற்றும் பொதுமக்களால் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
பட விளக்கம் 
 
 
போலீஸ் புகர் செய்த ஆலய தலைவர் கோ.மணோகரனுடன் பொது மக்கள் 
 
 
 
 
 
 

செய்தி : ஆர்.தசரதன்
டிச         : 22.12.2015
பட்டர்வொர்த்



பினாங்கு தமிழர் சங்கத்தின்  ஏற்பாட்டில் தொழில் பயிற்சி பட்டரை

இனம் என்ற இடத்தில் தமிழர் என்று குறிப்பிட ஆவனம்


இளைஞர்கள் பொருளாதார துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில்,பினாங்கு மாநில தமிழர் சங்கம் தொழில் சுய பயிற்சி பட்டரை ஒன்றை கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்குள்ள சோனி கொம்லேக்சில் சிறப்புடன் ஏற்பாடு செய்திருந்தது .இந்த தொழில் பயிற்சி பட்டறையில் 150 இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
 
 
இளைஞர்கள் சுய தொழில் ஈடுபட்டு சொந்தமாக தொழில் துறைகளில் சிறப்புடன் தங்களின் எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் இந்த சுய தொழில் பயிற்சி பட்டரை ஏற்பாடு செய்ய பட்டதாக பினாங்கு மாநில தமிழர் சங்கத்திர் தலைவர் திரு.எம்.விசு தமது வரவேர்புரையில் கூறினார்.
 
இந்நிகழ்வில் இவ்வட்டாரத்தில் சிறந்த வர்தகருமான டத்தோ ஸ்ரீ ஆர்.எ.அருணாசலம் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டு நிகழ்வை அதிகாரபூர்வமாக தொடக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.அவர் தமதுரையில் இளைஞர்கள் எதிர்நோக்கும் கல்வி, பிறப்பு பத்திரம்,தமிழர்களின் பொருளாதார பிரசனை ஆகியவற்ற களைய சிறந்த திட்டமிட்டு செயல்பாட்டை உருவாக்க பினாங்கு  மாநில தமிழர் சங்கத்தினருக்கு அவர் தமது ஆலோசனை கூறினார்.
 
இந்த சுய தொழில் பயிற்சி பட்டரையில் சிறந்த மூன்று பேச்சாளர்களாக திரு.கே.எம்.ரவிச்சந்திரன்,திரு.கே.கிருஷ்ணசாமி   மற்றும்   திரு பி. இராஜேந்தி
ரன் ஆகியோர் பொருளாதார சிந்தனை மற்றும் வியாபார வாப்புகளை முறையாக இளைஞர்கள்  பெரும் வழிமுரைதனை சிறப்புடன் விளக்கினார்.
 
இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய மாநில தமிழர் சங்கத்தின்  ஆலோசகர் திரு.பி.இராஜேந்திரன்,பிறப்பு பத்திரத்தில் குறிப்பிட பட்டுள்ள இனம் என்ற பகுதியில் இந்திய என்பதை தவிர்த்து தமிழர் என்று குறிப்பிட அரசாங்கம் அவன செய்ய வேண்டும் என்று சொன்னார்.நாட்டில் மற்ற இனத்தவர் தங்களின் இனத்தை சரியாக குறிப்பிட தகுதி பெற்றிப்பதை அரசாங்க ஆவணத்தில் போல் "தமிழர்" என்று குறிப்பிட ஏன் ? முடியாது என்ற கேள்வியையும் அவர் முன் வைத்தார்.மற்றவர்கள் தமிழர்களை சிறுமை படுத்தும் போக்கினை விட்டு விட்டு,நாட்டில் உள்ள  இந்திய மக்களில் தொகையில் உள்ள 70% மக்கள் தமிழர்கள் என்பதை திரு .பி.இராஜேந்திரன் நினைவுறுத்தினார்.
 
இந்நிகழ்வில் சிறப்பு பிரமுகர்களாக தொழில் அதிபர் திரு.சொந்தராஜன்,பெலித்தா இந்திய முஸ்லிம் இயக்க தலைவர் திரு.நசீர்,தேசிய தமிழ் சங்க பொருப்பாளர்கள் திரு.ரவி.திரு.இராஜேந்திரகுமார்,மாநில தமிழர் சங்கத்தின்  ஆலோசகர் ஆசிரியர் திரு.இராசமாணிக்கம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
 
பட விளக்கம் 
 
1. டத்தோ ஸ்ரீ ஆர்.எ.அருணாசலம் அவர்களுக்கு  மாநில தமிழர்  சங்க தலைவர் திரு.எம்.விசு நினைவு சின்னம் வழங்கியபோது 
 
2.நிகழ்வு ஏற்பாட்டுக்குழுவினரின் குழுப்படம்  
 
3.சுய தொழில் பயிற்சி பட்டரையில் கலந்து கொண்ட பயிற்சியாளர்கள்