காம் ஜூய்ஜூட்சு தற்காப்பு கலையில் ஈடுபாடுக் கொள்ள இந்தியர்களை அழைக்கிறார் மாஸ்டர் யோகராஜூ
எழுத்து / படங்கள் : ஆர்.ரமணி
ஜப்பான் நாட்டின் உருவான ஜூய்ஜூட்சு தற்காப்பு கலை மிகவும் பழமை வைந்தது.ஜூடோ போன்ற இன்றைய தற்காப்பு கலைகளுக்கு முந்திய கலையாக அக்கலை இருப்பதாக ஜூய்ஜூட்சு மாஸ்டர் யோகராஜூ கூறினார்.பேராசிரியர் காம் ஹாக் ஹோய் எனும் மாஸ்டர் என்பவரிடம் பட்டர்வொர்த் 1975 ஆம் ஆண்டு அக்கலையை கற்றதாக கூறிய மாஸ்டர் யோகராஜூ,அக்கலையின் கை தேர்ந்து பேராசிரியர் காம் ஹாக் ஹோய் விட்டு சென்ற மாணவர்களின் ஒருவர் என்றும் குறிப்பிட்டார்.


ஜூய்ஜூட்சு என்பது ஒரு தற்காப்பு கலை என்றும்,இதன் மூலமாக ஆபத்து நேரும் போது ஒருவர் அதனை தர்க்கத்துக்கு கொள்ளவும்,அதே சமயத்தில் விபத்து அல்லது தவறி விழும் பொது தன்னை பாதுகாப்பாக தற்காத்துக்கொள்ள மிகப்பெரிய பங்கினை ஜூய்ஜூட்சு கொண்டுள்ளது என்று அவர் விவரித்தார்.
பல சந்தர்ப்பங்களில் ஏற்படும் ஆபத்துக்களிலிருந்த முழுமையாக தற்காத்துக்கொள்ள குறிப்பாக எதிரியுடனான மோதலில் தற்காப்பதற்கும் பெரும் உரு துணையாக இக்கலை கொண்டுள்ளது என்பதால் இக்கலை 1935 ஆம் ஆண்டுகளில் ஜப்பான் நாட்டில் தோன்றியதாகவும் மலேசிய நாட்டில் சில மாணவர்கள் உள்ளனர் என்பதுடன்,ஆஸ்திரேலிய போன்ற நாடுகளில் பெரும்பாலான மாஸ்டர் பேராசிரியர் காம் ஹாக் ஹோய் அவர்களின் மாணவர்கள் உள்ளனர் என்றும் மாஸ்டர் யோகராஜா கூறினார்.
அழியாத கலை ஜூய்ஜூட்சு இந்நாட்டில் பாதிக்கப்பட வேண்டிய அற்புத கலை என்பதால் தமது பேருக்கும் முயற்சியில்,அதிகமான இந்திய இளைஞர்களுக்கு இக்கலை போதிக்கப்படு வேண்டும் எனும் முயற்சியில் பட்டர்வொர்த் உள்ள கட்டடிடம் ஒன்றில் இக்கலை போதிக்கப்பட்டது வருவதாக அவர் குறிப்பிட்டார்.



ramani.hyopenang@gmailcom