Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Friday, 26 February 2016

செய்தி : ஆர்.தசரதன்

பிப்         : 24.02.2016

தெலுக் பஹாங் /பினாங்கு



சிங்கமுக காளியம்மன் ஆலயத்தில் தெப்ப திருவிழா

ஒளிவுட்டும் ஆலகில் தெப்பம் பவனி / 70 ஆயிரம் மக்கள் கலந்து கொண்டனர்




பினாங்கு தெலுக் பஹாங்கில் அமைந்துள்ள சிங்க முக காளியம்மன் ஆலயத்தில் மாசி மகம் தெப்ப திருவிழா நேற்றைய முன்தினம் சிறப்புடன் நடைபெற்றது.70 ஆயிரத்துக்கு மேற்பட்ட  உள்ளுள் மற்றும் வெளி மாநிலங்களிருந்து இந்த திருவிழாவில் கலந்து கொண்டு இந்த ஆலயத்தில் விற்றிருக்கும் சிங்க முக காளியம்மனை தரிசம் செய்தனர்.மிதவை ஒன்றில் ஒளிவுட்டும் அழகிளான விளக்குகளில் அலங்கரிக்கபட்டு சிங்க முக காளியம்மனை ஒரு தேரை போல கடலில் மிதக்க விட்டு வளம் வருவது இந்த திருவிழாவின் தனிச் சிறப்பாகும்.சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மலை மணி 7 அளவில் தயாரான தேர் கடலில் பயணம் செய்ய புறப்பட்டது.மங்கள வைத்தியம் முழங்க கடலில் பயனித்த தேரின் அழகை கண்டு பக்தர்கள் பரவசத்தில் ஆழ்ந்தனர்.வான வேடிக்கைகள் விண்ணை ஒளி வெள்ளத்தில் ஆழ்த்தி அலங்கரிக்கும் காட்சி கண் கொள்ள காட்சியாக அமைந்தது.


இந்த திருவிள்ளவின் மற்றொரு சிறப்பானது அம்சம் பல வடிவங்களில் செய்யபட்ட தெப்ப தீப ஒளியூட்டும் விளக்குகலை பொருத்தி,சிங்க முக அம்மனை வேண்டி தாங்கள் நினைக்கும் காரியம் கைகூட வேண்டும் என்று பிராத்தனை செயது கடலில் மிதக்க விடுகின்றனர்.தேரினை இரு படகுகளின் மூலம் இழுத்வாறு கடலின் ஒருபகுதிக்கு செலுத்துகின்றனர்,தேரில் இருந்த படி கட்சி தந்து இரவு மணி 9.30 அளவில் ஆலயம் வந்து அடைந்த அம்மனின் சிலையை ஆலயத்துக்குள் எடுத்து செல்லபட்டு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு தீப ஆரதனையுடம்,பக்தர்களுக்கு பெரசாதம் வழங்கபட்டது.சிறப்பு பூஜைகளில் அதிகமானோர் கலந்து கொண்டு சாமி தரியானம் செய்ததுடன்,இந்த திருவிழாவை ஏற்பாட்டினை செய்த ஆலய நிர்வாகம் பக்தர்களின் வசதிக்கு தேவையான அணைத்து வசதிகளையும் செய்து இந்த வருட திருவிழாவினை தொண்டுபழயர்களின் ஒத்துழைப்பில் திறம்பட நடத்தினர்.


பட விளக்கம்

1.அழங்கரிக்கபட்ட சிங்க முக காளியம்மன்

2.தேருடன் ஆலய நிர்வாகக் குழுவினர்

3.திறம்பட செவையற்றிய ஆலய தொண்டர் படை இளைஞர்கள்

4.தெப்பத்துடன் பக்ததை ஒருவர்

5.ஒளியூட்டும் தேர்












Thursday, 25 February 2016

செய்தி : ஆர்.தசரதன்.

பிப்         : 14.02.2016

ஜார்ஜ்டவுன்



நாசிக் கண்டார் சாயிட் அம்மின் கொலை சம்பவம்
போலீசார் தேடுதால் நடவடிக்கை ஆரம்பம்



நாசிக் கண்டார் லைன் கிலியர் உரிமையாளர் சாயிட் அம்மின் கொலை சம்பவத்தில் கொலையாளியை தேடும் நடவடிக்கையை போலீசார் முடக்கியிருப்பதாக தெரிவிக்கபட்டது.கொலையுண்ட பகுதியில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமெராவில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் 20 வயது மதிக்க தக்க இரு இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடுதால் வேட்டைதனை ஆரம்பித்திருப்பதாக வடகிழக்கு மாவட்ட போலீஸ் துணை ஆணையர் மியோர் பாரிடலத்ராஷ் நேற்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.

இந்த கொலை சம்பத்தில் தகவல் சாதணங்களில் தவரான தகவலை வழங்கிவரும் தரப்பினர் தங்களின் நடவடிக்கையை நிறுத்திக் கோள்வதுடன்,எத்தகைய அனுமனமற்ற தகவல்கள் பரப்பி பொது மக்களை   குழப்ப வேண்டாம்  என்றும் அவர் சொன்னார்.

தகவல் சாதணங்களில் இதற்க்கு முன் வாக்கு வாதத்தில் ஈடு பட்ட சாலை போக்குவரத்து அதிகாரி கொலை சம்பவத்தில் ஈடுபட்டுளார் என்றும்,இன்னும் சிலர் சாயிட் அமின் நடத்திய உணவகத்தில் போட்ட போட்டி இருந்ததும் என்றும் என்னும் சிலர் அரசியல் நோக்கத்துக்காக அவர் கொள்ளப் பட்டர் என்றும் பல விடத்தில் வதந்திகளை பரப்பி வருவதாக மியோர் பாரிடலத்ராஷ்  கூறியதுடன் இவை அனைத்தும் உண்மையில்லை என்றும் அவர் தெளிவுப்படுத்தினார்.

சம்பவம் நடந்த இடத்தில் ரகசிய கண்காணிப்பு கேமராவில் 20 வயது மதிக்க  தக்க உள்ளூர் ஆடவர்கள் இருவரை போலீசார் அடையாளம் கண்டிருப்பதால் அவர்களை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதால் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மேலும் அவர் தெரிவித்தார்.



பட விளக்கம்


போலீஸ் துணை ஆணையர் மியோர் பாரிடலத்ராஷ்