எம். இராமைய வாழ்த்துரை
தலைவர்
மலேசியா ஸ்ரீ தட்சணா ஒளி மற்றும் ஒலி தியான குருகுலம்
இந்த திறப்பு விழா சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.தியானம் அதன் பயன்களை சற்று காண்போம்.
தியானம் செய்முறை
தியானத்தின் நோக்கம் தியானிக்கப்படும் பொருளின் தன்மையை அறிந்து கொள்ளுல் ஆகும். அதற்கு மனம் ஒரு கருவியாக பயன்படுகிறது.தியானத்தின் பலன்கள் மனஅமைதி கிடைக்கும்.
படபடப்பு குறையும் நினைவாற்றல் அதிகரிக்கும்.நல்ல ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்தும்.வேலை செய்யும் ஆற்றல் அதிகமாகும்.ரத்த அழுத்தம் குறையும்.ஆஸ்துமா குணமாகும்.அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும் அயுள் அதிகரிக்கும்.
1. நம் மனதில் ஏதாவது ஒரு உருவத்தை குறித்தோ அல்லது ஒரு கருத்தை குறித்தோ தொடர்ந்து சிந்தனை செய்வது. மனதில் இருந்து எல்லாவிதமான எண்ணங்களையும் அகற்றிவிடுதல். முதல் நிலையில் ஏதாவது ஒரு பொருளின் மீது அல்லது குரு புகட்டிய ஒரு மந்திரத்தை உச்சரிக்க தொடங்குகிறோம். அப்போது நமக்கு ஒரு புதுமையான அனுபவம் உண்டாகும். இதுவரை நம் மனதில் புதைந்து உறங்கி கிடந்த நூற்றுக்கணக்கான நினைவுகள் நம் கண்முன்னே தோன்றும். நமக்கு இது சிக்கலாக கூட இருக்கும். அதற்கும் வழி இருக்கிறது. நாம் உச்சரிக்கும் மந்திரத்தை அதன் பொருள் உணர்ந்து அப்பொருளின் பாவத்துடன் நம்மை அதில் பிணைத்து கொண்டால், நாம் தியான நிலையை அடையமுடியும். மற்ற நினைவுகள் மறந்து போகும்.
இரண்டாம் நிலையில், எவ்வித இடர்பாடுகளும் இல்லாமல், அமைதியாக உட்கார்ந்து கொள்ள வேண்டும். கண்களை மூடிக்கொள்ளவேண்டும். கால் முதல் தலை வரை எல்லா உறுப்புகளும் ஓய்வில் இருக்க வேண்டும். காதுகள் திறந்திருந்தால், வெளிச்சத்தங்கள் இடையூறு செய்யும். மனதிலிருந்தும் பல எண்ணங்கள் எழும். நாம் அதை பொருட்படுத்த தேவையில்லை. வேடிக்கை பார்ப்பவரை போல நாம் ஒதுங்கி நிற்க வேண்டும். அப்போது நம் காதுகள் திறந்திருந்தாலும் எவ்வித இடர்பாடுகளும் இருக்காது. தியானம் செய்தவன் மூலம் நம்மை நாம் உணர முடியும்.
இந்த நிகழ்வு வெற்றி அடைய ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எனது நன்றி உரியதாகட்டும்.நமஸ்காரம்
அன்புடன் ,
எம்.இராமையா
-----------------------------
தலைவர்
மலேசியா ஸ்ரீ தட்சணா ஒளி மற்றும் ஒலி
தியான குருகுலம்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home