செய்தி : ஆர்.தசரதன்
அக : 28.10.2015
கூலிம்
கெடா மாநில இந்திய இயக்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் விருந்து
மக்கள் முரசு கூவி.தியாகராஜன் டாக்டர் முரளிக்கு பாராட்டு
கெடா மாநில இந்திய இயக்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டிலும்,கூலிம் பண்டார் பாரு மாவட்ட இந்திய இயக்கங்களின் ஒருங்கிணைப்பு பேரவை ஆதரவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்குள்ள தாமான் செலாசேவில் அமைந்துள்ள இயஸ் ஹாய் லேன் உணவகத்தில் பாராட்டு விருந்து நிகழ்வு சிறப்புடன் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் ஏற்பாட்டுக்குழு தலைவராக கூலிம் மாவட்ட தலைமை காவல் நிலையத்தின் கோப்ரல் எஸ்.சக்திவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், அவருக்கு உதவியாக திரு அரவ் லோகநாதன் நிகழ்வை செம்மையாக நடத்தினர்.
இந்நிகழ்வில் சிறப்பு வருகையாளராக கெடா மாநில இந்திய இயக்கங்களின் ஒருங்கிணைப்பு பேரவையின் ஆலோசகர் டத்தோ அஸிசான் பின் மாட் கூலிம் மாவட காவல் படையின் தலைவரின் பிரதிநிதியாக எஸ்பி அமீர் ஆ தோங், மலேசிய MCQ தேசிய தலைவர் திரு ஜீவிதன், பினாங்கு மாநில இந்தியர் மேம்பாட்டுக் கழக தலைவர் திரு.பாலன், பினாங்கு மாநில இந்தியர் மேம்பாட்டுக் கழக ஆலோசகர் திருமதி சரஸ்வதி , கூலிம் நகரசபை உறுப்பினர் திரு.மாரிமுத்து,திரு.மணிவாசகம்,கூலிம் தெலுங்கு சங்க தலைவர் திரு.சீனிவாசகராவ்,ஜுரு எம்ஜிஆர் மன்ற தலைவர் திரு.மா.ராஜகோபால் மற்றும் உடன் அழைக்கபட்ட பிரமுகர்களும் கலந்து
கொண்டனர்.
இந்த நிகழ்வில் சிறப்புரையாற்றிய கெடா மாநில இந்திய இயக்கங்களின் ஒருங்கிணைப்பு பேரவையின் ஆலோசகர் டத்தோ அஸிசான் பின் மாட் இந்த பிரிதியோக விருந்து நிகழ்வு அண்மையில் ஷா அலாம் கிளாப்பில் நடைபெற்ற மலேசியா இந்திய இயக்கங்களின் ஒருங்கிணைப்பு பேரவையின் பேராளர் மாநாட்டில் தேசிய உதவி த்தலைவராக தேர்வு செய்யப்பட்ட மக்கள் முரசு கோவி.தியாகராஜன் மற்றும் மத்திய செயலவை உருப்பினராக தேர்வு செய்யப்பட்ட டாக்டர் எம்.முரளி ஆகிய இருவருக்கும் பாராட்டு தெரிவிக்கும் பொருட்டு இந்த பாராட்டு விருந்து நிகழ்வு ஏற்பாடு செய்யபட்டதாக கூரினார்.மேலும் அவரின் உரையில் கெடா மாநிலத்தில் இந்திய அமைப்புகளின் தலைசிறந்த தலைவராக கோவி.தியாகராஜன் இவ்வட்டார மக்களுக்கு செவையற்றியதை நினைவு கூர்ந்து கூறியதுடன் தேசிய உதவி தலைவராக தேர்வு பெற்ற கோவி.தியாகராஜன் மற்றும் டாக்டர் முரளிக்கு தமது வாழ்த்தினை கூறி உரையை நிறைவு செய்தார்.
இந்நிகழ்வில் கூலிம் மாவட்ட போலிஸ் தலைவரின் பிரதிநிதியாக எஸ்பி அமீர் ஆ தோங் கலந்து கொண்டார் அவரின் உரையில் கூலிம் மாவட்ட மாவட்ட காவல் துறையுடன் அணுக்கமான தொடர்பை வைத்திருக்கும் கெடா மாநில இந்திய ஒருங்கிணைப்பு பேரவைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன்,மாவட்டத்தில் இந்திய இளைஞர்களுக்கு தேவைப்படும் நல்வழி ஆலோசனைகளை வழங்க காவல்துறை தயராக இருப்பதாகவும் உறுதியளிதார்.தமது இறுதி உரையில் கோவி.தியாகராஜனுக்கும் டாக்டர் முரளிக்கும் தமது வாழ்த்தை அவர் தெரிவித்துக் கொண்டார்.
நிகழ்வில் நிறைவில் உறையாற்றிய கோவி.தியாகராஜன் தமது நன்றியை வருகை புரிந்த அணைத்து இயக்க தலைவர்களுக்கும் தெரிவித்ததுடன் ,தமது வட்டாரத்தில் உள்ள மக்களுக்கு தொடர்து சேவையற்ற உறுதி கொள்வதாகவும்,மாவட்ட காவல்துறைக்கு அணுக்கமான ஒத்துழைப்பை வழங்க இருப்பதாகவும் சொன்னார்.நிகழ்வில் கலந்து கொண்ட தலைவர்கள் கோவி.தியாகராஜன் மற்றும் டாக்டர் முரளிக்கு பொன்னாடை மன்றும் மலர் மலைகளை அணிவித்து கௌரவபடுத்தினர். கோப்ரல் எஸ்.சக்திவேல் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு முடிவடைந்தது.
பட விளக்கம்
1.நிகழ்வில் கலந்து கொன்ட தலைவர்களின் ஒரு பகுதியினர்
2..சிறப்பு செய்யபட்ட கோவி.தியாகராஜனுடன் டத்தோ அஸிசான பின் மாட் மற்றும் அரவ் லோகநாதன்
3.சிறப்பு செய்யபட்ட டாக்டர் முரளியுடன் கோப்ரல் எஸ்.சக்திவேல் (இடம் )
4.நிகழ்வில் கலந்துகொண்ட சிறப்பு பிரமுகர்கள்
5.வருகையாளர்களின் ஒரு பகுதியினர்.