Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Monday, 21 December 2015

செய்தி : ஆர்.தசரதன்
டிச         : 22.12.2015
பட்டர்வொர்த்



பினாங்கு தமிழர் சங்கத்தின்  ஏற்பாட்டில் தொழில் பயிற்சி பட்டரை

இனம் என்ற இடத்தில் தமிழர் என்று குறிப்பிட ஆவனம்


இளைஞர்கள் பொருளாதார துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில்,பினாங்கு மாநில தமிழர் சங்கம் தொழில் சுய பயிற்சி பட்டரை ஒன்றை கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்குள்ள சோனி கொம்லேக்சில் சிறப்புடன் ஏற்பாடு செய்திருந்தது .இந்த தொழில் பயிற்சி பட்டறையில் 150 இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
 
 
இளைஞர்கள் சுய தொழில் ஈடுபட்டு சொந்தமாக தொழில் துறைகளில் சிறப்புடன் தங்களின் எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் இந்த சுய தொழில் பயிற்சி பட்டரை ஏற்பாடு செய்ய பட்டதாக பினாங்கு மாநில தமிழர் சங்கத்திர் தலைவர் திரு.எம்.விசு தமது வரவேர்புரையில் கூறினார்.
 
இந்நிகழ்வில் இவ்வட்டாரத்தில் சிறந்த வர்தகருமான டத்தோ ஸ்ரீ ஆர்.எ.அருணாசலம் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டு நிகழ்வை அதிகாரபூர்வமாக தொடக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.அவர் தமதுரையில் இளைஞர்கள் எதிர்நோக்கும் கல்வி, பிறப்பு பத்திரம்,தமிழர்களின் பொருளாதார பிரசனை ஆகியவற்ற களைய சிறந்த திட்டமிட்டு செயல்பாட்டை உருவாக்க பினாங்கு  மாநில தமிழர் சங்கத்தினருக்கு அவர் தமது ஆலோசனை கூறினார்.
 
இந்த சுய தொழில் பயிற்சி பட்டரையில் சிறந்த மூன்று பேச்சாளர்களாக திரு.கே.எம்.ரவிச்சந்திரன்,திரு.கே.கிருஷ்ணசாமி   மற்றும்   திரு பி. இராஜேந்தி
ரன் ஆகியோர் பொருளாதார சிந்தனை மற்றும் வியாபார வாப்புகளை முறையாக இளைஞர்கள்  பெரும் வழிமுரைதனை சிறப்புடன் விளக்கினார்.
 
இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய மாநில தமிழர் சங்கத்தின்  ஆலோசகர் திரு.பி.இராஜேந்திரன்,பிறப்பு பத்திரத்தில் குறிப்பிட பட்டுள்ள இனம் என்ற பகுதியில் இந்திய என்பதை தவிர்த்து தமிழர் என்று குறிப்பிட அரசாங்கம் அவன செய்ய வேண்டும் என்று சொன்னார்.நாட்டில் மற்ற இனத்தவர் தங்களின் இனத்தை சரியாக குறிப்பிட தகுதி பெற்றிப்பதை அரசாங்க ஆவணத்தில் போல் "தமிழர்" என்று குறிப்பிட ஏன் ? முடியாது என்ற கேள்வியையும் அவர் முன் வைத்தார்.மற்றவர்கள் தமிழர்களை சிறுமை படுத்தும் போக்கினை விட்டு விட்டு,நாட்டில் உள்ள  இந்திய மக்களில் தொகையில் உள்ள 70% மக்கள் தமிழர்கள் என்பதை திரு .பி.இராஜேந்திரன் நினைவுறுத்தினார்.
 
இந்நிகழ்வில் சிறப்பு பிரமுகர்களாக தொழில் அதிபர் திரு.சொந்தராஜன்,பெலித்தா இந்திய முஸ்லிம் இயக்க தலைவர் திரு.நசீர்,தேசிய தமிழ் சங்க பொருப்பாளர்கள் திரு.ரவி.திரு.இராஜேந்திரகுமார்,மாநில தமிழர் சங்கத்தின்  ஆலோசகர் ஆசிரியர் திரு.இராசமாணிக்கம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
 
பட விளக்கம் 
 
1. டத்தோ ஸ்ரீ ஆர்.எ.அருணாசலம் அவர்களுக்கு  மாநில தமிழர்  சங்க தலைவர் திரு.எம்.விசு நினைவு சின்னம் வழங்கியபோது 
 
2.நிகழ்வு ஏற்பாட்டுக்குழுவினரின் குழுப்படம்  
 
3.சுய தொழில் பயிற்சி பட்டரையில் கலந்து கொண்ட பயிற்சியாளர்கள் 
 
 
 


 

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home