செபராங் ஜெயா வட்டார இந்து சங்க ஏற்பாட்டில் இரத்தான முகாம்
செபராங் ஜெயா
ஜன 30.1.2019
ஆர்.ரமணி
பினாங்கு மாநிலத்தில் துடிப்புடன் செயலாற்றிவரும் மலேசிய இந்து சங்கம் செபராங் ஜெயா வட்டாரப் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த ஞாற்றுக்கிழமை இரத்ததானம் ,உடல் உறுப்பு தானம் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம் இங்குள்ள செபராங் ஜெயா இயோன் மோல் பேரங்காடியில் சிறப்புடன் நடைபெற்றது.
இந்நிகழ்வு செபராங் ஜெயா வட்டார இந்து சங்க பேரவையின் தலைவர் த.மாரிமுத்து அவர்களின் தலைமையில் நடைப்ற்ற்ட்டுறதுடன்தலைவராகதினனே பொறுப்பு வகித்தார்.
70 க்கு மேற்பட்ட பொது மக்கள் இந்த இரத்ததான முகாமில் இரத்ததானம் செய்ததுடன்,பலர் சுகாதார பரிசோதனை மற்றும் உடல் உறுப்பு தானம் செய்ய தங்களை பதிந்துக்கொண்டதாக,செபராங் ஜெயா வட்டார இந்து சங்க பேரவையின் தலைவர் மாரிமுத்து கூறினார்.
சுவாமி விவேகானந்தரின் 156 வது பிறந்த நாளை முன்னிட்டு நாடு தழுவிய நிலையில் இரத்ததான நிகழ்வுகளை வட்டார இந்து சங்கங்கள் நடத்தி வருவதுடன்,அதனை முன்னிட்டு செபராங் ஜெயா இந்து சங்க வட்டார பேரவையின் வருடாந்திர நிகழ்வாக இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது என்று மேலும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சிறப்பு பிரமுகர்களாக பினாங்கு மாநில இந்து சங்கத்தின் துணை தலைவர் தொண்டர்மணி ஜி.முனீஸ்வரன்,மாநில மகளிர் பிரிவு தலைவி தொண்டர்மணி சரோஜா,