செய்தி : ஆர்.தசரதன்
டிச. 22
பத்து கவான்,
பத்து கவான் மக்கள் ஆலயம் மற்றும் இடுகாட்டினை பாதுகாப்பதில் உறுதிவரை போராட உறுதி.
பினாங்கு மாநிலத்தை ஆளும் பக்காத்தான் அரசின் பதிவேட்டில் 100 ஆண்டுக்கு பழமை வாய்ந்த கட்டடங்கள், ஆலயங்கள் புரதான சின்னங்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று மாநில முதல்வர் லிம் குவான் எங், 2008 ஆம் ஆண்டு ஆட்சியமைத்த போது அறிவித்திருந்தார்.
அதுபோலவே பத்து கவானிலுள்ள பகுதியில் மலாய் கிராமம், சீனக் கோயில்கள், சீனக் கிராமங்கள் அனைத்தும் இதுவரையிலும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன நிலையில்,பலம் பெரும் இந்தியர்களுக்கு சொந்தமான தோட்டம் மட்டும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றது.இந்த தோட்டத்து ஆலயம் மற்றும் இடுகாடு தனை
மக்கள் பாதுகாக்க போராடி வருகின்றனர்.
மக்கள் பாதுகாக்க போராடி வருகின்றனர்.
2008 ஆம் ஆண்டு ஆட்சியேற்ற அடுத்த ஆண்டே மாநில அரசு இடுகாடு, ஆலயம் இரண்டையும் கையகப்படுத்த எடுத்த நடவடிக்கையை 2010 ஆண்டு எங்கள் ஆலய நிர்வாகமும் இங்குள்ள பொதுமக்களும் முறியடித்தோம் என்று ஆலயத் தலைவர் கோ.மணோகரனும், ஆலய அறங்காவலர் மு.வி.மதியழகனும் தெரிவித்தனர்.
அதோடு இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைகப்பட்டு விட்டது என்று நினைத்திருந்த வேளையில், மீண்டும் இவ்வாண்டு ஜூன் மாதத்தில் இந்து அறப்பணி வாரியம் இப்பிரச்சனையை கையிலெடுத்ததன் காரணமாக தீமிதி திருவிழாவையும் முதல் முறையாக தடுத்து நிறுத்தினர். அடுத்து இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட தீமிதி திருவிழா நடத்த விடாமல் பல தொல்லைகள் தந்து நீதிமன்ற தடையுத்தரவு மூலம் தடுத்தனர்.வழக்கு தொடுத்து நடப்பு நிர்வாகமான எங்கள் நிர்வாகம் அதிகாரபூர்வமற்ற நிர்வாகம் என்று வாதிட்டனர். 17.12.15 இல் பினாங்கு உயர் நீதிமன்ற விசாரணையில் இது ஒரு அடிப்படையற்ற புகார் என கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. அத்தீர்பில் இரு தரப்பும் இனி எந்தவொரு அறிக்கையும் விட்டு யாரும் யாரையும் தாக்கி பேசக்கூடாது என்றும் வரும் 21.12.15 அன்று ஆலய அனைத்து ஆபரணங்களையும் நடப்பு நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.
அரசியல் கட்சிகளின் குருகிடலின் பேரில் ஆர்.ஓ.எஸ் கடிதம் கொடுத்துள்கதாக பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். ஆலய பதிவு ரத்தானதுக்கு காரணம் வரவு செலவு கணக்குகள் அல்ல,மாறாக முகவரி மாற்றத்தால் ஏற்பட்ட புகாரின் அடிப்படை காரணம் என்று ஆலயத் தலைவர் கோ.மணோகன் தெளிவுப்படுத்தி்னார்.
இந்த தொட்டது மக்கள் தங்களின் ஆலயம் இவ்வளவு பிரச்சனைகளை எதிர்நொக்குவது என்பது வேறு எங்கும் கிடையாது என்று தேறிவித்த நிலையில் பாரிசான் அரசாங்கத்திடம் சுமார் 40 ஆண்டுகளாக போராடி சிறுக சிறுகப் பெற்ற பாதுகாத்து இரண்டு கோயில்கள், இரண்டு இடுகாடுகள் போன்ற அடையாள சின்னங்கள், வருங்கால சந்ததிகளுக்கு இம்மண்ணை சேந்த மைந்தர்களால் வழிபாடு செய்ய பதுகாக்கபட்ட வந்த புரதான சின்னங்களாக விளங்க வேண்டும் என்ற நல் நோக்கத்திற்காகவே என பொது மக்கள் விருப்பம் தெரிவித்தனர்.
இதனையெல்லாம் கட்டிக்காக்க துடிக்கும் எங்களின் நோக்கத்தை துணை முதல்வரான பேராசிரியர் நன்கு புரிந்துக் கொண்டு பத்து கவான் இந்தியர்களுக்கு இதனையாவது நிலை நிறுத்த முன்வாருங்கள் என்று கோரிக்கையை முன் வைக்கின்றோம். . ஆக புரதான சின்னங்களை பாதுகாக்கவே எங்களின் போராட்டத்திற்கு அடித்தளம்.அதனைப் பெற எல்லோரும் ஒன்றுக்கூடி நிற்கின்றோம் என்ற உறுதிப்பாட்டையும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, முகநூலில் பேராசிரியர் ராமசாமி ஆலயத்தையும், மற்ற ஆரசியல் கட்சி மற்றும் , ஆர்.ஒ.எஸ்இக்கு எதிரான கருத்துக்களை முக நூலில் வசைப்பாடி எழுதியுள்ள செயலுக்கு நேற்றைய முன்தினம் போலிஸ் புகார் ஒன்றை ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்களால் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பட விளக்கம்
போலீஸ் புகர் செய்த ஆலய தலைவர் கோ.மணோகரனுடன் பொது மக்கள்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home