மலேசியா வாசுதேவனுக்கு இரங்கல் பா
மலேசியா வாசுதேவன் மலேசியா மண்ணின் பெருமைமிகு கலைஞன்.அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி இடிபோல தாக்கியது.உலக அரங்கில் மலேசியாவில் பெயரை இலவசமாக விளம்பரம் செய்த ஒரு அற்புத கலைஞன்.
தமிழ் நாட்டில் ஒரு வெளிநாட்டு கலைஞன் பெயர் போடமுடியும் என்ற நிருபித்த உன்னத மனிதர் அவர்.அவர் நம்மை விட்டு பிரிந்தாலும் அவர் ஆற்றிய கலை சேவைகள் நிலைபெறும்,மறந்து விட்டார் மலேசியா வாசுதேவன் என்ற நிலைமாறி அவரின் பாடல்கள் இந்தனுடம் அதிக நிலையில் கேட்கும் மக்களின் நிலை அதிகரிக்கும் என்பது திண்ணம்.
ஒரு ரசிகன் என்ற முறையில் அவரின் இறப்பு ஈடு இணை அற்றது.வாழ்க மலேசியா வாசுதேவன் புகழ் வையம் உள்ள வரை.
வாசு உன் குரலின் மாயம் என்னவோ ...
தமிழின் மறு உருவம் நீ .....
சரஸ்வதியின் சுரத்தை நீ இரவலாக பெற்றாயோ ....
நாங்கள் விரும்பும் அந்த மாயக் குரலை என்று கேட்போம்
உலக கலை குடும்ம்பதின் வாரிசு என்று மலேசியா உன் புகழ்பாடும்...
வாழ்க உன் புகழ் வையம் எல்லாம்.