Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Tuesday, 14 February 2017

செய்தி    : ஆர்.தசரதன்

பிப்           : 04.02.2017

செபராங் ஜெயா

பினாங்கு தைப்பூச திருநாளில் குற்ற செயலை தடுக்க

மலேசிய குற்ற தடுப்பு அரவாரியம் தீவிர முயற்சி.டத்தோ புலேந்திரன்



பினாங்கு மாநிலத்தில் எதிர்வரும் தைப்பூச திருநாள் சுபிச்சமாகவும் அமைதியாகவும்,குற்ற செயல் அற்ற மாநிலமாக இருப்பதை உறுதி படுத்த ஆக்கப்பணிகளை செய்திருப்பதக்க மலேசிய குற்ற தடுப்பு அரவாரிய ஆட்சி மன்ற உறுப்பினர் டத்தோ கே.ஆர்.புலேந்திரன் தெரிவித்தார்.கடந்த வியாழக்கிழமை இங்குள்ள செபராங் ஜெயாவில் உள்ள தமிழ் பண்பாட்டு அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் டத்தோ கே.ஆர்.புலவேந்திரன் உரையாற்றினார். 

பினாங்கு மாநில காவல் துறையினர் அதிகமான ஒத்துழைப்பை மலேசிய குற்ற தடுப்பு அரவாரியத்துக்கு  வழங்கி வருவதன் மூலம்,இந்த ஆண்டு தைப்பூச தினத்தில் குற்ற சம்பவங்கள் அற்ற மாநிலமாக பினாங்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்திருப்பதை போல இந்த ஆண்டும் அது உறுதிப்படுத்த மலேசிய குற்ற தடுப்பு அரவாரியம் செயல் திட்ட்ங்கள் கொண்டிருப்பதாக அவர் கூறினார் 

இந்த 2017 ஆம் ஆண்டும் தைப்பூச தினத்தில் பூஜ்யம் குற்ற சம்பவங்கள் பதிவு கொண்டிருக்கும் இலக்கை அடைய,மாநிலத்தில் உள்ள அரசு சார்பற்ற இயக்கங்கள் ஒருங்கிணைத்த முயற்சியிகள் மேற்கொள்ளப்பட்டடுள்ளது என்றும் மேலும் அவர் சொன்னார்.

இதற்கிடையே தைப்பூச விழாவில் கலந்துக்க கொள்ளும் பொது மக்கள் அதிகமான நகைகளை அணிய வேண்டாம் என்றும்,மது அருந்திவிட்டு தைப்பூச திருநாளின்  மாண்பை கெடுக்கும் அளவுக்கு நாமே காரணமாக இருப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

இதனிடையே இந்த ஆண்டு தைப்பூச திருநாளில் பொது மக்களின் பாது காப்பை உறுதிப்படுத்தும் வகையில்,மாநில காவல் படை தலைவர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியதில் பலனாக மாநில  காவல் படையை சேர்ந்த 1000 காவல் படையினர் இவ்வாண்டு தைப்பூச நாளில் பணியில் அமர்த்தப்படுவதற்கும் மாநில காவல் துறை அங்கீகாரம் வழங்கியிருப்பதாக பினாங்கு மாநில குற்ற தடுப்பு அரவாரிய துணை தலைவர் (2) பொறுப்பு வகிக்கும் டத்தோ கே.ஆர்.புலவேந்திரன் செய்தியாளர்களிடம் விவரித்து கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட மேஜர் காளீஸ்வரன் குறிப்பிடுகையில்,உலக நாடுகளிலிருந்து பல பாகங்களிலிருந்த சுற்று பயணிகளும் அதிக அளவில் கலந்து கொள்வது ஒரு புறம்மிருக்க,இந்துக்களின் மிக பிரபலமான தைப்பூசத்தை மாண்பை காப்பது ஒவ்வொரு இந்துக்களின் கடமையாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.இவ்வாண்டு 2 இரதங்கள் ஒன்று தங்க இரதம் மற்றொன்று வெள்ளி இரதம் ஊர்வலமாக செல்வதினால் இது பினாங்கு மாநில இந்து பெருமக்களுக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாக கருதப்படும் அதே வேலையில்,இதனால் பல பிரச்சனைகள் ஏற்பட்டு பொது அமைதி கெடும் என்ற கூற்றை அவர் நிராகரித்தார்.

இதனுடன் நடந்த  செய்தியாளர் கூட்டத்தில் மலேசிய குற்ற தடுப்பு அரவாரிய பொறுப்பாளராக  கலந்துக்கொண்ட ராஜா முனுசாமி அவர்கள்,தண்ணீர் பந்தல்களில் பக்தி பாடல்களை ஒளி பரப்ப பினாங்கு ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம் முயல வேண்டும் என்றும்  இதன் மூலம்  பக்தி மார்க்கம் கொண்ட உன்னத திருநாளாக தைப்பூசம் விளங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


பட விளக்கம் 

மலேசிய குற்ற செயல் தடுப்பு அரவாரிய ஆட்சி மற்ற பௌப்பாளர்கள்,உடன் ராஜா முனுசாமி,டத்தோ கே.ஆர்.புலவேந்திரன் மற்றும் மேஜர் காளீஸ்வரன் 





  








செய்தி    : ஆர்.தசரதன்

பிப்            : 05.02.2017

ஜார்ஜ்டவுன்

பினாங்கு காப்பித்தான் பள்ளிவாசலில் சலவாத்து மஜ்லிஸ்


பினாங்கு மாநிலத்தில் உள்ள பிரபல வரலாற்று சிறப்புடைய  காப்பிதான் பள்ளி வாசலில்,அண்மையில் இரு தினங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட திக்ரு மற்றும் சலாவத்து மஜ்லிஸ் நிகழ்வுகள் சிறப்புடன் நடந்தேறியது.இந்த நிகழ்வில் தமிழகத்தை சேர்ந்த மார்க்க அறிஞர் மௌலஷ அபுபக்கர் ரஷாதி அவர்கள் சிறப்புமிக்க சொற்பொழிவை ஆற்றினார்கள்.
கண்ணியத்துக்குறிய நாடறிந்த மார்க்க அறிஞரும், காப்பிதான் பள்ளியின் தலைமை இமாம் மனிதனல் சிறந்த முன் மாதிரி, மாமனிதர் மௌலானா டத்தோ அல்ஹாபிஸ் அப்துல்லா புஹாரி அவர்களின் துவாவுடன் நிகழ்வு தொடங்கியது.காப்பித்தான் பள்ளியின் தலைமை இமாம் மௌலவி அல்ஹாபிஸ் ஜியாவுல் ஹாக் பாக்கவி அவர்கள் ராத்தியத்துல் ஜலாலியா என்னும் திக்ரு என்னும் மஜ்லிஸை சிறப்புடன் வழி நடத்தினார்கள்.இந்நிகழ்வில் பொது மக்களுடன் சுமார் 20 உஸ்தாதுகள் உடன் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் கண்ணியத்துக்குறிய சிங்கப்பூரை சேர்ந்த மௌலான அஹமது ஜபருல்லா ஆலிம் அவர்கள் சலவாத்து மஜ்லிஸை சிறப்புடன் வழி நடத்தினார்கள்.இச்சிறப்புப்பிகு நிகழ்வில் பினாங்கு,கெடா,பேராக்,பெர்லிஸ் ஆகிய மாநிலங்களை சேர்ந்த மதரஸா உஸ்தாதுகள்,மாணவர்கள் உடன் பொது மக்கள் 1400 பேருக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இந்த  சலவாத்து மஜ்லிஸ் சிறப்புடன் நடைபெற உதவிகள் புரிந்த அனைவருக்கும் காப்பித்தான் பள்ளியின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்ளப்பட்டது. 



செய்தி   : ஆர்.தசரதன்


பிப்        : 03.02.2017


ஜார்ஜ்டவுன்




பினாங்கு தைப்பூச தினத்தை முன்னிட்டு தங்க இரதம் வெள்ளோட்டம்
ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்


பினாங்கு மாநில தைப்பூச தங்க இரதம் நேற்று வெள்ளோட்டம் கண்டது.காலை மணி 11.20 மணிக்கு ஸ்ரீ தண்டாயுதபாணி மலை கோயிலிலிருந்து கீழ் அடிவாரத்தில் உள்ள கணேசர்  ஆலயதிலிருந்து விதி உலா புறப்பட தயாரானது.இந்த வெள்ளோட்ட தின சிறப்பு விழாவில் பினாங்கு இந்து அறப்பணி வாரிய தலைவர் பி.இராமசாமி,ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலய தலைவர் ஆர்.சுப்பிரமணியம்,ஸ்ரீ டெலிமா சட்ட மன்ற தலைவர் ராயர்,பாகான் டாலாம் சட்ட மன்ற உறுப்பினர்அ.தனசேகரன்,பினாங்கு இந்து அறப்பணி  வாரிய  இயக்குனர் எம்.இராமசசத்திரன்,மலேசிய குற்ற செயல் தடுப்பு அரவாரிய உச்ச மன்ற உறுப்பினர் டத்தோ கே.ஆர்.புலவேந்திரன்,சமூக சேவையாளர் ஏ.சௌந்தரராஜன்,நம் தமிழர் இயக்க தலைவர் ப.த.மகாலிங்கம் மாற்று பொது மக்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தங்க இரத்தத்தினை வடம் பிடித்து இழுத்தனர்.    

பினாங்கு மாநில 2017 ஆண்டுக்கான தைப்பூச திருநாளை முன்னிட்டு வருகின்ற பிப்பரவரி 8ஆம் நாள் அதிகாலை மணி 5.00 மணியளவில் குயின் ஸ்தீரிட்டில் அமைந்துள்ள மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து தங்க இரத்தில் வேலுடன் ஊர்வலம் வரும் என்றும்,பிப்ரவரி 10 ஆம் நாள் ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்திலிருந்து மீண்டும்  குயின் ஸ்தீரிட்டில் அமைந்துள்ள மகா மாரியம்மன் ஆலயத்துக்கு தங்கரத்துடன் வேல் வைக்கப்பட்டது திரும்பும் என்று பேராசிரியர் பி.இராமசாமி கூறினார்.இந்த தங்க இரத்தமானது மக்கள் ரத்தமாக கருதப்படும் என்றும்,திட்டமிட்டபடி இந்த தங்க இரதம் வெள்ளோட்டத்துக்கு ஏற்பாடுகள் மிக கவனமாக செய்யப்பட்டது என்றும் பி.இராமசாமி மேலும் சொன்னார்.
இதனிடையே இந்த தங்க இரத வெள்ளோட்டத்தில் கலந்துக்க கொண்ட ஸ்ரீ பாலா தண்டாயுதபாணி ஆலய தலைவர் ஆர்.சுப்பிரமணியம் குறிப்பிடுகையில்.2017 ஆம் ஆண்டு தைப்பூசம் ஸ்ரீ பாலதண்டாயுத ஆலயத்தின் 231 தைப்பூசம் என்றும்,இந்த அந்நாட்டின் மகத்தான சிறப்பு தங்க ரத்தம் விதி உலா என்றும் மகிழ்ச்சியுடான் கூறினார்.பல சாதனைகளை கண்டுள்ள பினாங்கு ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயம் மேலும் ஒரு மயில் கல் வளர்ச்சியாக தங்க இரத்தத்தினை பெற்றுள்ளது தனி ஒரு சிறப்பாக அமைந்துள்ளது என்றும் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

பட விளக்கம் 











  

செய்தி   : ஆர்.தசரதன்

பிப்         :09.02.2017

ஜார்ஜ்டவுன்



பினாங்கு தைப்பூச திருநாளில் பல்லாயிரக் கணக்கில் பக்தர்கள் திரண்டு காணிக்கை செலுத்தினர்

குற்றச்செயல் அற்ற,தமிழர் கலை  பண்பாடு பெருநாள் தைப்பூச கொண்டாட்டம் மக்கள் பெருமிதம்


பினாங்கு மாநிலத்தில் தைப்பூச திருநாள் மிகவும் விமரிசையாகவும்,கோலகலமாக நேற்று முன்தினம் சிறப்புடன் நடைபெற்றது.இந்த 2017 ஆம் ஆண்டு அதிகமான மக்கள் உள்ளூர்  மற்றும் வெளி நாடுகளிலிருந்து   பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி  ஆலயத்தின் 231ஆது  தைப்பூச விழாவில் கலந்துக்கொண்டு தங்களின் நேர்த்திக் கடனை தமிழ் கடவுளான முருக பெருமானுக்கு செலுத்தினர்.இந்த தைப்பூச விழாவில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட பால் குடங்களை செலுத்தப்பட்ட வேளையில் பல்லாயிரக்கணக்கான அழகுற செய்யபட்ட காவடிகள் இந்த ஆண்டு பினாங்கு தைப்பூசத்தினை வண்ணமய மாக்கியது.
வெளிநாடுகளின் சேர்ந்த சுற்று பயணிகள் இந்த ஆண்டு தைப்பூச விழாவில் கலந்துக்கொண்டதுடன்,சிறப்பு அம்சமாக இந்திய கலாச்சார உடைகளான வேட்டி சேலையுடன் காட்சியளித்தது இந்திய பண்பாட்டின் மாண்பை புலப்படுத்தியது.இவ்வாண்டு தைப்பூச விழாவில் 150 மேற்பட்ட தண்ணீர் பந்தல்கள் தனியார்,தொண்டூழிய ஊழியர்கள்,மன்றங்கள் மற்றும் பல அரசு சாரா நிறுவனங்கள் மூலமாக ஏற்படுத்தி மக்களின் தாகத்தையும் பசியை போக்கும் வண்ண அன்னதானங்களை வழங்கி பெரும் பங்கற்றினர்.

பினாங்கு மாநில காவல் துறையை சேர்ந்த 1000 க்கு மேற்பட்ட காவல் வீரர்கள் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்த சிறப்புடன் செயல் ஆற்றினார்.மலேசிய குற்ற தடுப்பு அரவாரியாம்,மலேசில  இந்து சங்கம்,மாநில இந்து இளைஞர் பேரவை,பினாங்கு மாநில தமிழ் இளைஞர் மணிமன்றம்,பினாங்கு இந்து தர்ம மாமன்றம் ஒன்றிணைத்து பினாங்கு மாநில  தைப்பூச தினத்தில் குற்ற செயலை தடுக்கும் முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு  சிறந்த பலனை கொண்டு வந்தது என்றால் அது மிகையில்லை.

மக்களுக்கு தேவையான வசதி கொண்ட குளியல் அரை,கழிப்பிடம்,முடி காணிக்கை செய்ய போதிய வசதி கொண்ட இடம் ஆகியவற்றை  பினாங்கு இந்து அறப்பணி வாரியதின் உதவியுடன் அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலய தலைவர் சுப்பிரமணியம் ஆறுமுகம் தலைமையில் செயல்படும் ஆலய நிர்வாக குழுவினர் நிறைவுடன் செய்திருந்தனர்.

பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங்,பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி,பாகான் டாலம் சட்டமன்ற உறுப்பினர் ஏ .தனசேகரன்,மஇகா தேசிய தலைவர் டத்தோ ஸ்ரீ எஸ்.சுப்பிரமணியம், அருள்மிகு பால தண்டாயுதபாணி ஆலய தலைவர் ஆர்.சுப்பிரமணியம்,டத்தோ ஆர்.ஏ.அருணாசலம்,மலேசிய குற்ற தடுப்பு அரவாரிய ஆட்சிமன்ற உறுப்பினர் டத்தோ/கே.ஆர்.புலவேந்திரன் ஆகியோர் தைப்பூச தினத்தன்று முக்கிய பிரமுகர்களாக ஆலய வழிப்பாட்டில் பங்கேற்றனர்.

சிறப்பு வழிபட்டதில் கலந்து கொள்ள வந்திருந்த பினாங்கு மாநில முதல்வர் லில் குவான் எங் உட்சாக பெருமகிழ்ச்சி அடைத்ததுடன்,பினாங்கு மாநிலத்தில் தைப்பூச திருநாளில் ஆண்டு தோறும் மக்கள் எண்ணிக்கை கூ டுவதன் மூலமாகவும் அதிகமான வெளி நாட்டு சுற்றுப் பயணிகளை ஈர்த்திருப்பது தனி சிறப்பாக கருதப்படுவதால்,ஒருவழி தொடர் போக்குவரத்து சேவையை அமுல்படுத்த பினாங்கு மாநில அரசு மேற்கொள்ளும் என்று தமதுரையில் அவர் கூறினார்.

இதனிடையே பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரிய தலைவர் பேராசிரியர் பி.இராமசாமி குறிப்பிடுகையில்,2017 ஆம் ஆண்டு பினாங்கு தைப்பூசம் ஒரு வரலாற்று தைப்பூசமாக மலை கோவிலில் வீற்றிருக்கும் அருள்பிகு ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்துக்கு இரதம் இல்லையே என்ற குறையை தீர்க்க தங்க இரதம் ஒரு பெறப்பட்டடுள்ளது என்றும்,தென் கிழக்கு ஆசியாவிலேயே மிகவும் பெரிய கோயிலாக விளங்கும் ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலய தனி சிறப்பு வைத்துள்ளது இம்மாநிலத்தில் உள்ள தமிழ் மக்களுக்கும் மாறாக இந்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு பெருமை கொள்ளும் வகையில் அமைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இரவு வேளைகளில் தண்ணி பந்தல்களில் ஒளியூட்டிய வண்ண விளக்குகளும், கண்கவர் காவடிகள் மற்றும் சிறு ரக இரத்தங்களும்காண்போரை கவர்ந்தது.நள்ளிரவு  வரை மலைக்கோவில் அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்திலும் நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலயத்தில் பல்லாயிரக்கணக்கான பக்கதர்கள் நள்ளிரவு தங்களின் இறுதி காணிக்கையை செலுத்தினர்.பினாங்கு மாநிலத்தை பொறுத்தவரை இந்த 2017 ஆம் ஆண்டு தைப்பூசம் சிறப்பான கோலாகலமான,குற்ற செயல் ஆற்ற சிறப்புக்குரிய தைப்பூசமாக திகழ்ந்தது என்றால் அதுமிகையில்லை.நேற்று வெள்ளிக்கிழமை மீண்டும் பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியத்தின் தங்க இரதம் மற்றும் நாட்டுக்கோட்டை செட்டியார்ஆலயத்தின் பிரதான வெள்ளி இரதம் ஆகியவை தத்தம் ஆலயங்களிருந்து புறப்பட்டு மக்களுக்கு எல்லாம் வல்ல முருக பெருமான் காட்சியளித்தார்.
















செய்தி     : ஆர்.தசரதன் 

பிப்           15.02.2017

ஜார்ஜ்டவுன் 





  சாந்தி சமாதமான  நன்மை வாழ்வுக்கு  சகஜயோகா தியானம்!  
           
  பினாங்கு தைப்பூசத்தில் பக்தர்களுக்கு விளக்கம்!

    
                   
மனதினை  நிலையாக்கி தெளிவான சிந்தனையை  கொண்டு சாந்தமுடன் வாழ்வதற்கு,உற்ற வகையில் பங்கற்றிவரும் சகஜயோகா தியானப் பயிற்சியை, எல்லா தரப்பினரும் தெரிந்து  கொள்வதற்கு ஏதுவாக, அந்த உன்னத இறை நயம்  கொண்ட கலையை உள்ள  யுக்திகளை அம்மன்றத்தைச் சேர்ந்த தொண்டர்களின் அறிய முயற்சியில் ஒவ்வொரு தைப்பூசத்திலும் இலவசமாகவே நடத்தி நற்பணியாற்றி  வருகின்றனர்.


பினாங்கு தைப்பூசத்தில் இரு  நாட்களுக்கு இம்மன்றத்தின் பெயரில் பந்தல் நிர்மாணித்து, இங்கு வருகை புரியும்  பக்தர்களுக்கு அதனை இலவசமாக போதிப்பதுடன் பயிற்சி பெற்ற   தொண்டூழியர்களின் உதவியுடன் செய்து வருகின்றனர். தன்னலமற்ற சேவையின் பயனாக இங்கு வருகையளிக்கின்ற பக்தர்கள் பலர், இப்பயிற்சியை மேற்கொள்ளும் விதத்தை கற்றுணர்ந்து  பயன் பெறுகின்றனர்.

இல்லர வாழ்வில் எண்ணிலடங்க மன அழுத்தம், மிகையான உளைச்சல், நிம்மதியின்மை, விரக்தி குழப்பம் போன்ற காரணங்களில் பாதிப்புக்கு உள்ளன அனைத்துப் பிரச்சனைகளிலிருந்தும் விடுபட்டு தெளிவு பெறுவதற்கும் தன்னிலையை மேம்படுத்தி கொள்வதற்கும் சகஜயோகா தியானப் பயிற்சி உற்றத் துணை புரிவதால், இந்த அற்புதமான இறைமிகுந்த  கலைதனை முதியவர்கள் மட்டுமின்றி, இளையோர் மத்தியிலும் பிரபலமடைந்து வருகிறது என்தில் ஐயமில்லை.

இந்த உன்னத தியானப் பயிற்சியின் வழி  பொது மக்களிடையே மெய்யுக  மெய்ஞானத்தை  வளர்க்கும் தலையாய நோக்கத்தில், இம் மன்றத்தின் ஆலோசகரும் தலைமை ஒருங்கிணைப்பாளருமான டத்தோ கே.ஆர்..புலவேந்திரனின் ஆதரவில், ஒவ்வெரு தைப்பூசத்தன்று இச்சேவையை வழங்க ஒருமித்த நற்பணியில், அண்மைய சில ஆண்டுகளாக இங்கு தொடர்ந்து நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மக்களின் மன நிம்மதி கெடுவதற்கு மூல காரணமாக அமைவது விரக்தி, சஞ்சலம் தீருவதற்கும் சகஜயோகா தியான வழிபாடு, சிறந்த உன்னதபலனை அளிக்க வல்லது என்றும், திசைமாறித் தீய வழியில் செல்லும் இளைஞர்களின் நல்வாழ்வை வளம் பெற செய்து தூய சிந்தனையுடன் வாழ்வில் சிறந்து விளங்க  இந்த தியான வழிமுறை எண்ணிலடங்கா பலனை பெற உற்றத் துணை புரியுமென்று டத்தோ கே.ஆர்.புலவேந்திரன் கூறினார்.

இந்த தியான வழிபாட்டின் மகத்துவத்தை தைப்பூச பக்தர்களிடையே பரப்பி, அவர்களுக்கு நல்வழி காட்டும் உன்னத நோக்கத்தில், இச்சேவையை தைப்பூச தினத்தில் தாங்கள் மேற்கொண்டதாகவும் விவரித்த அவர், இந்த தியான வழிபாட்டுப் பயிற்சி வகுப்புகள் தங்கள் மன்றத்தின் ஆதரவில், மாநிலத்தின் முக்கியப் பகுதிகளில் பொது மக்கள் நன்மைக்காக இலவசமாகவே நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


இதனிடையே, அன்றைய தினம் சிறப்பு வருகையளித்திருந்த சகஜயோகா தியான மன்றத்தின் தேசிய துணைத் தலைவர் கே.மோகன், இப்பயிற்சியை புரியும் விதம் தொடர்பில் பக்தர்கள் பலருக்கு விலாவாரியான விளக்கம் அளித்து வழிகாட்டினார். குழப்பத்தால் நிலை தடுமாறுகின்றவர்களும்,
 நிதானமின்றி சினம் கொள்பவர்களும் தாங்கள் எதிர்நோக்கும் சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்கு, சகஜயோகா தியானத்தால் நல்ல பலன் கிட்டுமென்பதை அவர் சில உத்திகளால் செய்து காட்டிய விதம் இப்பயிற்சியை எடுத்துக் கொண்ட பக்தர்கள் பலருக்கு மனநிறைவை அளித்தது.

                                                 
பட விளக்கம்:

சகஜயோகா தியானப் பயிற்சியாளர்களுடன் டத்தோ புலவேந்திரன் மற்றும் கே.மோகன் 







செய்தி     : ஆர்.தசரதன்

பிப்             : 15..02.2017

கூலிம்


காபின் இயக்கம்  ஏற்பாட்டில் "சேவைக்கொரு மகுடம்" பாராட்டு  விழா


சமூக சேவையில் தங்களை ஈடுபடுத்தி  தன்னலம் கருதாமல் சேவையாற்றுகின்ற சேவையாளர்களை உரிய வேளையில் பாராட்ட வேண்டும் என்றும் உன்னத நோக்கத்தில்  அண்மையில் கெடா மாநிலத்தில் இயங்கும் காபின் இயக்கம் "சேவைக்கொரு மகுடம்" என்ற பாராட்டு விழா ஏற்பாடு செய்திருந்தது.இந்த நிகழ்வுக்கு கெடா மாநில காபின் இயக்க தலைவரும்,தேசிய காபின் உதவி தலைவருமான "மக்கள் முரசு"கோவி.தியாகராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு காபின் தேசிய துணை தலைவர் டாக்டர் தென்னரசு முன்னிலையில் 30க்கு மேற்பட்ட பினாங்கு மற்றும் ஜோகூர் மாநிலத்தை சேர்ந்த அரசு சார்பற்ற இயக்க தலைவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.


இந்நிகழ்வில் உரையாற்றிய காபின் தேசிய துணை தலைவர் டாக்டர் தென்னரசு அவர்களின் சிறப்புரையில்,காபின் செயலாற்றுகின்ற ஜோகூர் மற்றும் கெடா மாநிலத்தில் இருக்கு இயக்கங்கள் ஒன்றிணைக்க வேண்டும் என்றும்,அதனுடன் நிறைவான சேவைகளை மக்களுக்கு அற்ற முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கெடா மாநிலத்தில் உள்ள சிறந்த சமூக சேவை ஆற்றுகின்ற அரசு சாரா இயக்க தலைவர்கள் உரிய காலத்தில் அடையாளம் காணப்பட்டு "சேவைக்கொரு மகுடம்"என்ற பாராட்டு நிகழ்வில் கௌரவித்தது பெருமை மிகுந்த மன நிறைவை அளிப்பதாக கோவி.தியாகராஜன் குறிப்பிட்டார்.

இப்பாராட்டு விழாவில் ஜோகூர் மாநிலத்தை சேர்ந்த 45 அரசு சாரா இயக்க தலைவர்கள் கலந்துக் கொண்டதுடன்,கூலிம் பாண்டார் பாரு காவல் படை தலைவர் துவான் அப்துல்லா ஹாஜி ஹர்சாட் சிறப்பு பிரமுகரான கலந்து கொண்டு சேவையாளர்களுக்கு சிறப்பு செய்தார்.



சிறப்பிக்கப்பட்ட சேவையாளர்கள் ஒரு பகுதி

செய்தி   : ஆர்.தசரதன் 

ஜன        : 28.01.2017

புக்கிட் மெர்தாஜாம் 

புக்கிட் மெர்தாஜம் இளைஞர் தொழிற்நுட்ப கல்லூரியில் பொங்கலுக்கு தடையா?

ஒரே மலேசிய கொள்கைக்கு  முரண்பாடு 


மலேசிய நாட்டின் கொள்கையாக கருதப்படும் ஒரே மலேசிய கொள்கையின் அடிப்படையில்,இந்நாட்டில் வாழும் அணைத்து இனங்களின் காலை கலாச்சாரம் பாதுகாப்புக்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுத்து வரும் வேலையில்,புக்கிட் மெர்தாஜாமில் அமைந்துள்ள   இளைஞர் தொழிற்நுட்ப கல்லூரியில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு அக்கல்லூரி நிர்வாகம் பொங்கல் கொண்டாட அனுமதி வழங்க முன்வராதது கேள்விக்குறியாகியுள்ளது.பொங்கல் கொண்டாடினால் கல்லூரி  சுற்று சூழல் மாசுபடும் என்று கூறி அடிப்படையற்ற காரணத்தினால்,அக்கல்லூரியின் நிர்வாகம் பொங்கல் கொண்டாட தடை விதித்திருப்பது ஏற்புடையது காரணம் அல்ல என்று பினாங்கு மாநில இந்திய கலை காலாச்சார நற்பணி மன்ற தலைவர் பாலன் நம்பியார் கண்டனம் தெரிவித்தார்.ஒரு அரசாங்க கல்லூரி இது போல நடந்துக்கொள்வது அரசாங்க கொள்கைக்கு முரணானது என்றும் பல இனங்களின் கலை கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றை பாதுகாக்கும் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களின் ஒரே மலேசிய கொள்கை சீராக செயல்பட பொறுப்பற்ற சில அரசாங்க அதிகாரிகளின் நடத்தையே அதற்க்கு காரணம் என்றும் பாலன் நம்பியார் குறை கூறினார்.

இக்கல்லூரியில் பயிலும் இந்திய மாணவர்கள் பல வேளைகளில் மோசமான நிலையில் குறிப்பாக ஆசிரியர் ஒருவர் காலணியால் அடித்தது,இனதுவேசம் கட்டி அழைப்பது மற்றும் மற்ற இன  மாணவர்களின் காலணிகளை பாதுகாக்க சொல்வது  இப்படி எண்ணிடாங்கா  பிரச்சனைகளுக்கு   மாணவர்கள் ஆளாக நேரிடுவதாக பாலன் நம்பியார் குறிப்பிட்டார். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண அக்கல்லூரி நிவாகத்திடம் பேச்சு வார்த்தைகள் நடத்தபட்டது என்றும் மலேசிய இளைஞர் விளையாட்டு  அமைச்சர் டத்தோ எம்.சரவணன் அவர்களுக்கு மகஜர் அனுப்பியும் உள்ளதாக தெரிவித்த அவர்  இருப்பினும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.

இதனிடையே பொங்கல் பண்டிகையை கல்லூரியில் நிர்வாகம் அனுமதி வழங்காததை  முன்னிட்டு,இங்குள்ள புக்கிட் மெர்தாஜாமில் உள்ள மங்கள நாயகி அம்மன் ஆலயத்தில் பொங்கல் விழாவை கோலாகலமாக அக்கல்லூரி மாணவர்கள் கொண்டாடினர் என்பது  குறிப்பிடத்தக்கது.இதனிடையே அரசாங்க கல்லூரியாக விளங்கும் புக்கிட் மெர்தாஜம் தொழிழ்நுட்ப கல்லூரியின் நிர்வாக நடவடிக்கைகள் சரி செய்யப்படாமல் இருக்குமேயானால் அரசாங்க கொள்கையாக கருதப்படும்  ஒரே மலேசிய  கொள்கை பூரண  செயலாக்கம்  பாதிக்கப்படுவது திண்ணம் என்றும்  தெரிவிக்கப்பட்டது.


 பட விளக்கம் 


புக்கிட் மெர்தாஜம் இளைஞர் தொழிற்நுட்ப கல்லூரி மாணவர்கள் கொண்டாடிய 
பொங்கல் பண்டிகை உடன்  பாலன் நம்பியார்