Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Friday, 6 November 2009

101 குழந்தைகளுக்கு காதணி விழா

 

பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவை ஏற்பாட்டில் எதிர்வரும் 29.11.2009ஆம் நாள்,காலை மணி 8.00க்கு, இங்குள்ள பினாங்கு நகரத்தார் திருமுருகன் ஆலயத்தில் 101 குழந்தைகளுக்கு காதணி விழா சிறப்பாக ஏற்பாடு செய்யபட்டுள்ளது.இந்த விழாவில் 5 முதல் 7 வயதுடைய குழந்தைகள் கலந்து சிறப்பு செய்வர்.


இந்நிகழ்வில் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஆசிரம  குழந்தைகளும்,வசதி குறைந்த இந்திய குடும்பங்களின்  சேர்ந்த குழந்தைகளும் கலந்து கொள்வார்கள் மலேசியா திருநாட் டின் முதன் முறையாக அதிகமான குழந்தைகள் பங்கு பெறும் விழாவாக இந்த  காதணி  விழா நடைப்பெறுகின்றது.

கெரக்கான் கட்சியின் மாநில தலைவர் டத்தோ,டாக்டர் தெங் ஹாக் நான் அவர்கள் திரப்புரையாற்றி அதிகாரபூர்வமாக நிகழ்ச்சியை தொடக்கி வைப்பார்.இந்நிகழ்வில் சிறப்பு பிரமுகர்களாக மலேசிய இந்து இளைஞர் பேரவையின் தேசிய தலைவர் கே.ராச்செல்வன்,பினாங்கு மாநில மஇகா  தொடர்புகுழுவின் தலைவர் பி.கே.சுப்பையா,பினாங்கு மாநில இந்து சங்க தலைவர் டாக்டர் ரவிசந்திரன்,பத்து கவான் நாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் அ.மோகன் மற்றும் சிலர் கலந்து கொள்வார்கள்.

Tuesday, 3 November 2009

மலேசிய இந்திய வளர்ச்சி கூட்டுரவு கழகம்


மலேசிய இந்திய வளர்ச்சி கூட்டுரவு கழகம், அண்மையில் மலேசிய கூட்டுரவு கழகத்தால் அங்கிகாரம் பெற்றுள்ளது.இக்கழகம் மலேசிய இந்து இளைஞர் பேரவையின் கிழ் செயல்படும்.இக்கூட்டுரவு கழகத்தின் வழி இந்திய இளைஞர்களின் வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம்.

இக்கூட்டுரவு கழகத்தில் வெ100 கொடுத்து உறுப்பினர் ஆகலாம்.1 பங்கின் விலை 100 ரிங்கிட் என்று விலை நிர்ணயம் செய்யபட்டுள்ளதால் ஒருவர் எத்தணை பங்கை வேண்டும் என்றாலும் வாங்கலாம்.நாடு தளுவிய இந்து இளைஞர் இயக்கங்களில் உறுப்பியம் பெற்றவர்களுக்கு  முதல் சலுகை வழங்கப்படும்.

இக்கூட்டுரவு கழகத்தின் வழி நமக்கு சேவை அடிப்படையிளான தொழில் துறை நமது கழகத்திற்க்கு வழங்கபட்டுள்ளது, உதாரத்திற்க்கு மினி மார்கேட்,தங்கும் விடுதி, சலவை நிலயம்,முடி திருத்தும் நிலையம்,  உணவகம் மற்றும் பல.

நமது கூட்டுரவு கழகத்தின் பதிவு என் W-6-0571.மேல் விபரம் பெற மலேசிய இந்து  இளைஞர் பேரவையிடம் தொடர்பு கொள்ளலாம்.

தலைவர் கே .ராசசெல்வம் 016-6264713