Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Monday, 23 November 2015

செய்தி : ஆர்.தசரதன்

நவ         : 24.11.2015

ஜார்ஜ்டவுன்



சமூக ரீதியில் பிளவு கொள்ளாமல்  இந்தியச் சமுதாயமாக  மேன்மை கொள்வோம் .....
                   
டத்தோஸ்ரீ ரமேஷ் ராவ்  கோரிக்கை 

             
            நாட்டிலுள்ள உள்ள இந்தியர்களி ன்  பெரும்பகுதியினர்  தனித் தனி சமூகமாக தங்களை அடையாளம் காட்டிக் கொள்வதில் ஆர்வம் கொண்டிருப்தை தவிர்த்து ,  இந்தியச் சமுதாயம் என்ற உணர்வோடு நாட்டிலுள்ள இந்தியர்களாகிய நாம் ஒருமித்த கருத்துடன்  மேன்மை கொள்ள வேண்டுமென்று மலேசிய சிந்தனை மற்றும் சமூக அக்கறை இயக்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ ரமேஷ் ராவ்  கோரிக்கை  விடுத்தார்

தனி சமூக பிரிவை   கருதாமல்    இந்தியர்களாகிய நாம்  ஒருமித்த சமுதாய உணர்வு எல்லோரிடமும் மேலோங்க  வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.இன் நாட்டில் வாழ்கின்ற  மற்ற இன சமுதாய  மக்களை  கண்ணுற்றால் அவர்கள் யாவரும் சமுதாய ரீதியாக  ஒன்றிணைந்து செயல்பட்டு  வெற்றியடைந்ததை அவர்  சுட்டிக் காட்டினார், அதைப் போன்று இந்தியர்கள் யாவரும் சமூக அடிப்படையில் பிரித்தாளும்சமூக ரீதியான பிளவுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சமுதாய அக்கறையோடு ஒன்றுபட்டு நிற்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்.

            நேற்று முன்தினம் இங்கிருக்கும் பினாங்கு சாலையில் அமைந்துள்ள பிரபல நட்சத்திர விடுதியில் நடைபெற்ற பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவையின் 26ஆம்ஆண்டுப்  பொதுக் கூட்டத்திற்கு சிறப்புப் பிரமுகராக வருகையளித்து உரையாற்றுகையில், டத்தோஸ்ரீ ரமேஷ் ராவ் கிருஷ்ணா வருங்கால இந்திய சமுதாயம் இந்த சிந்தனை சமூக மறுமலர்ச்சிக்கு  அடித்தளம் காண வேண்டுமென்று வலியுறுத்தினார்.
 
             பள்ளிக்கூடங்களில் இந்திய மாணவர்கள் மத்தியில் சமய சிந்தனையை விதைக்கும் வகையில், வெள்ளிக்கிழமைகளில் பாரம்பரிய உடைகள் அணிவதற்கு பிரதமரிடம் அனுமதி கோரும் முயற்சியில் தாம் களமிறங்கியிருப்பதாகக் கூறிய அவர், இதற்காக இந்தும் இளைஞர் இயக்கங்கள் வாயிலாக கையெழுத்து பெறும் நடவடிக்கைக்கு தாம் உற்சாக மூட்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.

             முன்னதாகப் பேசிய பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவைத் தலைவர் என்.மகேந்திரன்,மாநிலத்திலுள்ள மொத்தம் 25 கிளைகளின் ஆதரவுடன் இயக்கம் துடிப்புடன் செயல்பட்டு வருவதாக பெருமிதம் கூறினார்.புதியவர்களின் வரவாலும் புதிய சிந்தனைகளின் மலர்ச்சியாலும் இயக்கத்தின் சார்பில் இந்திய சமுதாயதிற்காக பல்வேறு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டிருப்பதை அவர் பட்டியலிட்டுப் பேசினார்.எதிர்வரும் காலங்களில் சமுதாய நலங்காணும் பயனுள்ள பணிகளை மேற்கொள்வதற்கு இயக்கத்தின் சார்பில் விவேகத் திறனான செயல்பாடுகள் திட்டமிடப்படுமென்றும் மகேந்திரன் கூறினார்.

              இந்நிகழ்வுக்கு தேசிய இந்து இளைஞர் பேரவையின் செயலாளர் திரு.எஸ்.அனந்தன் ,பினாங்கு இளைஞர் மன்ற செயலாளர் ஹபிஸ் அலி ,மாநில பேரவையின் மாநிலத்தின் முன்னாள் பேரவைத் தலைவர் ஆர்.ரமணி,மாநில பேரவை ஆலோசகர் எம்.பார்த்திபன்,பினாங்கு மாநில மக்கள் முற்போக்கு கட்சியின் இளைஞர் பகுதி செயலாளர் திரு.மோகன், உள்பட மாநில இந்து இளைஞர் பேரவையின் செயலவை உறுப்பினர்கள் யாவரும் வருகையளித்திருந்தனர். இந்நிகழ்வில் சிறப்புப் பிரமுகர்களாகப் பங்கேற்றனர்.

                                                     

 



0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home