செய்தி : ஆர்.தசரதன்
பிப் : 27.02.2017
பட்டர்வொர்த்
வாழ்வோ தாழ்வோ இந்தியர்கனின் அரணாக மஇகா என்றும் துணை இருக்கும்
டத்தோ ஸ்ரீ எஸ்.சுப்ரமணியம்
இந்நாட்டில் பல அரசியல் காட்சிகள் இருக்கின்றன,அனால் இந்தியர்களின் பாதுகாப்புக்கும் அவர்களின் மேம்பட்ட வளர்ச்சிக்கும் என்றும் பாதுகாப்பாக இருப்பது மஇகா என்று,இங்குள்ள பட்டர்வொர்த் காம்போங் பங்காலி பொது மைதானத்தில் நடந்த பினாங்கு மாநில மஇகா ஏற்பாட் டில் நடந்த ஒற்றுமை பண்பாட்டு விழாவை தொடக்கி வைத்து சிறப்புரை ஆற்றிய மஇகா தேசிய தலைவரும்,மலேசிய சுகாதார அமைச்சருமான டத்தோ ஸ்ரீ எஸ்.சுப்ரமணியம் குறிப்பிட்டார். இந்த நிகழ்வு கடந்த சனிக்கிழமை பினாங்கு மாநில மஇகா தொடர்புக்கு குழு தலைவர் டத்தோ கே.தங்கவேலு அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் சிறப்பு வருகையாளர்களாக பினாங்கு மஇகா தொடர்புக்குழு துணை தலைவர் டத்தோ ஞானசேகரன்,செயலாளர் எஸ்.எஸ்.டி.முனியாண்டி,பொருளாளர் இளங்கோ,இளைஞர் பகுதி தலைவர் பிரகாஷ்,மகளிர் பகுதி தலைவி திருமதி பிரேமா,டத்தின் வள்ளி முத்துசாமி,மஇகா மத்திய செயலவை உறுப்பினர் ஜெ.தினகரன்,மாநில மஇகா தொகுதி தலைவர்கள்,வட்டார ஆலய தலைவர்கள்,மாநில அரசு சாரா இயக்க தலைவர்கள் உட்பட 1200 பேர் கலந்து கொண்டனர்.
மேலும் பேசிய டத்தோ ஸ்ரீ எஸ்.சுப்ரமணியம் இந்தியர்கள் இந்நாட்டில் கல்வி,பொருளாதாரம் ஆகிய துறைகளில் மேம்பாடு காண வேண்டும் என்று,நாட்டின் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களிடம் இந்தியர்களுக்கு தேவையானவை என்ன என்று தெளிவாக அவரிடம் கூறி,பல நன்மை பயக்கும் திட்டங்களாக தெக்குன் சிறு தொழில் கடனுதவி திட்டம் ஆகியவற்றை மஇகா பெற்று தந்துள்ளது.மேலும் தமிழ் பள்ளியின் கல்வி மேம்பாட்டிற்கும் புதிய பள்ளிகள் கட்டுவதற்கும் 80 கோடி வெள்ளியை 2010 ஆண்டு தொடங்கி 2017 ஆண்டு வரை மஇகா சமூக முன்னேற்றத்துக்கு வழங்கியிருப்பதை அவர் நினைவு கூர்ந்தார்.
இந்தியர்கள் பொருளாததில் மேம்பாடு காண கடந்த 6 வருடங்களாக 22 கோடி வெள்ளி தெக்குன் கடனுதவி திட்டத்தின் மூலம் 22,000 ஆயிரம் சிறு வணிகர்கள் பயன் அடைந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.சமூகத்தின் வளர்ச்சியில் என்றும் மஇகா துணை இருக்கும் என்று கூறிய சுகாதார அமைச்சர்,மக்கள் நன்மைபெறும் பொது அதனை மக்கள் மஇகாவிற்கு ஆதரவு கொடுப்பதன் மூலமாக
தொடர்ந்து மக்களுக்கான சேவையை கடமையுணர்வுடன் செயலாற்ற மஇகா தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
வருகின்ற பொது தேர்தலின் மஇகாவின் முக்கிய சட்டமன்றமாக இருக்கும் பிறை மற்றும் பாகான் டாலாம் சட்டமன்ற பகுதியில் உள்ள மக்கள்,மஇகா மேற்கொண்டிருந்த பல்வேறு திட்டங்களினால் அப்பகுதியில் உள்ள மக்களின் ஆதரவு பெருகி வருவதால் அந்த சட்டமற்ற பகுதியினை வரும் பொது தேர்தலில் வெற்றி கொள்ளு வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய மஇகா பினாங்கு மாநில தொடர்புக்குழு தலைவர் டத்தோ கே.தங்கவேலு தமதுரையில் இந்தியர்களிடம் ஒற்றுமை உணர்வை மேலோங்க செய்வதற்கு ஒற்றுமை பண்பாட்டு நிகழ்வினை மாநில மஇகா ஏற்பாடு செய்திருப்பதாகவும் இதன் மூலமாக இந்தியர்களிள் மத்தியில் ஒற்றுமை உணர்வு மேலோங்குவதுடன் மாநில மஇகா செயலாற்றும் திட்டங்களுக்கு மக்கள் ஒன்றிணைத்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.பினாங்கு மாநில மஇகாவின் அழைப்பேன் பேரில் கலந்துக்கொண்ட 30க்கு மேற்பட்ட ஆலய தலைவர்கள் மற்றும் அரசு சாரா இயக்க தலைவர்கள் அனைவருக்கும் அவர் நன்றி கூறினார்.இதனிடையே இந்நிகழ்வில் சுகாதார பரிசோதனை மற்றும் சிறப்பு அதிர்ஷ்ட குலுக்கு இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.