Bm
புக்கிட் மெர்தாஜாம் தமிழ்பள்ளிக்கு 30 லச்சம் வெள்ளியில் நான்கு மாடி இணை கட்டடம் கட்டபடும்
துணை கல்வி அமைச்சர் தியோ நி சிங் அறிவிப்பு
புக்கிட் மெர்தாஜாம்
நவ 3
ஆர்.ரமணி
புக்கிட் மெர்தாஜாம் தமிழ்பள்ளிக்கு 30 லட்சம் வெள்ளி செலவில் 4 மாடிக் கொண்ட இணை கட்டம் ஒன்றை கட்டுவதற்கு,பொது பணி அமைச்சின் அங்கீகாரத்தை பெற்ற பின்னர் கட்டுமானப் பணிகள்ஆண்டு தொடங்கபடும் என்று கல்வி துணை அமைச்சர் தியோ நி சிங் கூறினார்.
நேற்று பள்ளிக்கு வருகையளித்த துணை கல்வி துணை அமைச்சரை எதிர் கொண்டு புக்கிட் மெர்தாஜாம் தமிழ்ப்பள்ளியில் தலைமையாசிரியர் அ.இராஜராஜன் மற்றும் பள்ளியின் மெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் எஸ்.தமிழ்செல்வன்,பள்ளி வாரியக்குழு தலைவர் கோபால் கிருஷ்ணன்,கல்வி அமைச்சிர் அதிகாரிகள் அகியோர் உடன் கலந்து கொண்டனர்.
இந்த இணை கட்டடத்தில் 9 வகுப்பரை,தலைமையாசிரியர் அரை,ஆசிரியர் அரை,அலுவலகம் மற்றும் 6 பல்வகை வசதிகளை கொண்ட அரைகளை அமைக்கபடும் என்று கல்வி துணை அமைச்சர் தியோ நி சிங் மேலும் குறிப்பிட்டார்.
இதனுடன் 2019 ஆம் ஆண்டில் பினாங்கி மாநிலத்தில் உள்ள 28 தமிழ்பள்ளிகளுக்கு 2.95 மில்லியன் வெள்ளி கல்வி அமைச்சின் சிறப்பு நிதியிலிருந்து வழங்கபட்டதாக மேலும் அவர் விவரித்தார்.
இதனிடையே இந்த இணை கட்டடம் அமய ஒத்துழைப்பு வழங்கிய புக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்திவன் சிம்,பாடாங் லாலாங் சட்டமன்ற உருப்பினர் சொங் எங்,பிராப்பிட் சட்டமன்ற உறுப்பினர் எங் லீ லீ,புக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற இந்திய சிறப்பு அதிகாரி எம்.ஜி.குமார் மற்றும் பினாங்கு மாநில கல்ஙி அமைச்சு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்ஙதாக பள்ளியின் தலமையாசிரியர் அ.இராஜராஜன் தெரிவித்துக்கொண்டார்.பினாங்கு கல்வி இலாக்காவில் பள்ளிக்கான இணை கட்டிட நிர்மாணிப்புக்கான போதிய நிதி ஒமுக்கபட்டுள்ள நலையில் பொது பணி அமைச்சின் உரிய அங்கிகாரம் கிடைத்தவுடன்அடுத்த ஆண்டு பதிய 4 மாடிக் கொண்ட கனடுமானப் பணிகள்தொடங்கபடும் என நம்பிக்கை கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
இதனுடன் புக்கிட் மெர்தாஜாம் தமிழ்பள்ளிக்கு இணை கட்டிடம் அவசியமான ஒன்று என்பதால் இப்பகுதியில் உள்ள இந்திய மாணவர்பளுக்கு போதிய வசதிக்கொண்ட கட்டடம் தேவையான ஒன்று என்று மெர்தாஜாம் நாடாளுமன்ற இந்திய சிறப்பு அதிகாரி எம்.ஜி.குமார் தமிழ் மலரிடம் கூறினார்.
1923 ஆம் ஆண்டு புக்கிட் மெர்தாஜாம் தமிழ்பள்ளி செயல் பட தொடங்கியது என்பது வரலாறு.