Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Saturday, 1 August 2020

இந்தியப் பெண்களின் பொருளாதார மேன்மைக்கு முக ஒப்பனைக்  கலை

 அழைப்பு விடுக்கின்றார்  டாக்டர் கி.ஹேமலதா



தொகுப்பு : ஆர்.ரமணி 


பினாங்கு மாநிலத்தில் வடக்கு,செபராங் பிறை  மாவட்டம் செபராங் ஜெயாவில்  விமாஸ் பியூட்டி முக ஒப்பனை  அழகு  நிலையத்தை கடந்து 15 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார் டாக்டர் ஹேமலதா  கிருஷ்ணன் .இவரின்  அழகு நிலையம் பல்வகை சேவைகளை வழங்குவதில் பிரசித்தி பெற்ற முக ஒப்பனை அழகு  நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.அழகு கலையில் சிறந்து விளங்கும் டாக்டர் கி.ஹேமலதா முக ஒப்பனை   அழகுக் கலையில்   வல்லுநராக இருப்பதுடன் அக்கலையில் முக ஒப்பனை அழகியல் துறையில் பி.எச்.டி எனும் டாக்டர்  பட்டமும் இவர் பெற்றுள்ளார்.

தமது விமாஸ் பியூட்டி அழகு  நிலையத்தில்  முக ஒப்பனை  அழகு சிகிச்சை,அழகுக்கலை பற்றிய தொழில்  படிப்பு,மணப்பெண் அலங்காரம் முக சிகிச்சை,தோல் பாதுகாப்பு மற்றும் அரசாங்க நிறுவங்களுடன் இணைந்து முக  ஒப்பனை கலை தொழில் துறைக்கான பட்ட  படிப்புகளை தங்களின் நிறுவனம் ஏற்பாடு செய்து வருவதாக  தமிழ் மலரிடம் நடத்திய  நேர்காணலில் கி.ஹேமலதா  குறிப்பிட்டார்.அழகு கலையில் ஆர்வம் கொண்டு டாம் பணியாற்றிய வங்கி அதிகாரி பணியை விட்டு ஒப்பனை மற்றும் அதன் சார்ந்த துறையில் கல்வி கற்று இந்த முக ஒப்பனை அழகு நிறுவனத்தை திறந்ததாக டாக்ட்ர் ஹேமலதா சொன்னார்.

இது வரையில் 500 க்கு மேற்பட்ட பெண்களை  அழகுக்கலையில் பயிற்சி கொடுத்து சாதனையாளர்களாக உருவாக்கி யுள்ளார்.அவரிடம் முக ஒப்பனை மற்றும் இதர அழகுக் கலை பயிற்சிகளை முடித்த  மாணவர்கள்  பலரும் நாட்டின் பல பாகங்களில் சொந்த முக ஒப்பனை அழகுக் கலை நிறுவனங்களை  திறந்து  இளம் தொழில் முனைவர்களாக உருவாக்கியுள்ளார்  எனவும்  அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

தனது விமாஸ் பியூட்டி முக ஒப்பனை  அழகு நிறுவனத்தில் தொழில் பங்குதாரர்களாக காயத்திரி அவர்கள் இருப்பதுடன் உதவி பணியாளர்களாக    6 பணியாளர்கள் தங்களின் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக அவர் மேலும் விவரித்தார்.

இந்த முக ஒப்பனை கலை பயிற்சியில்  மேலும் பல பெண்களுக்கு  வழிகாட்டவும் தயாராக உள்ளதாகக் கூறிய அவர்,இந்தியப் பெண்கள் தயக்கத்தை விட்டு  சொந்தமாகத் தொழிலை துறையில்  ஈடுபட வேண்டும் என்றும் அதற்க்கு தேவையான அடிப்படை பயிற்சிகளையும் அழகு  முக ஒப்பனை பயிற்சிகளை வழங்கும் தனது நிறுவனம் வெளியிடும் ஒப்பனை பொருட்களை விற்பனை செய்து  முகவராக  வருமானம் பெற அணைத்து உதவிகளைச் செய்ய  முடியும் என்றும் டாக்டர் ஹேமலதா நம்பிக்கை தெரிவித்தார்.

இதனிடையே விமாஸ் பியூட்டி முக ஒப்பனை  அழகு நிறுவனத்தின் மையில் கல்லாக,செபராங் ஜெயா நகரில் அமைந்துள்ள தெ லெயிட் 5 நட்சத்திர தங்கும் விடுதியில் தனது சொந்த முக ஒப்பனை பொருள் ஒன்றையும் அறிமுக விழாவில் ஏற்று நடத்தினார் டாக்டர் கி.ஹேமலதா என்பதுடன் இந்த நிகழ்ச்சிக்கு டத்தின் மிஹ்ராஜ் பேகம் தலைமை ஏற்றத்துடன் உடன் சிறப்பு பிரமுகர்களாக மோனிசா  டான் ஸ்ரீ ரமேஷ்,டத்தோ துரைசாமி ,டத்தோ இளையராஜா அர்விந்த்,பினாங்கு இந்து சங்க தலைவர் மா.முனியாண்டி  உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.  நாட்டில் உள்ள அழகு கலை  ஒப்பனையாளர்கள் மத்தியில் டாக்டர் கி.ஹேமலதா முக ஒப்பணை அழகியல் துறையில் பி.எச்.டி எனும் டாக்டர் பட்டம் பெற்ற முதல் இந்திய பெண்மணியாக திகழ்கின்றார் என்பது குறிப்பிடதக்கது.