செய்தி : ஆர்.தசரதன்
பிப் : 15..02.2017
கூலிம்
காபின் இயக்கம் ஏற்பாட்டில் "சேவைக்கொரு மகுடம்" பாராட்டு விழா
சமூக சேவையில் தங்களை ஈடுபடுத்தி தன்னலம் கருதாமல் சேவையாற்றுகின்ற சேவையாளர்களை உரிய வேளையில் பாராட்ட வேண்டும் என்றும் உன்னத நோக்கத்தில் அண்மையில் கெடா மாநிலத்தில் இயங்கும் காபின் இயக்கம் "சேவைக்கொரு மகுடம்" என்ற பாராட்டு விழா ஏற்பாடு செய்திருந்தது.இந்த நிகழ்வுக்கு கெடா மாநில காபின் இயக்க தலைவரும்,தேசிய காபின் உதவி தலைவருமான "மக்கள் முரசு"கோவி.தியாகராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு காபின் தேசிய துணை தலைவர் டாக்டர் தென்னரசு முன்னிலையில் 30க்கு மேற்பட்ட பினாங்கு மற்றும் ஜோகூர் மாநிலத்தை சேர்ந்த அரசு சார்பற்ற இயக்க தலைவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய காபின் தேசிய துணை தலைவர் டாக்டர் தென்னரசு அவர்களின் சிறப்புரையில்,காபின் செயலாற்றுகின்ற ஜோகூர் மற்றும் கெடா மாநிலத்தில் இருக்கு இயக்கங்கள் ஒன்றிணைக்க வேண்டும் என்றும்,அதனுடன் நிறைவான சேவைகளை மக்களுக்கு அற்ற முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கெடா மாநிலத்தில் உள்ள சிறந்த சமூக சேவை ஆற்றுகின்ற அரசு சாரா இயக்க தலைவர்கள் உரிய காலத்தில் அடையாளம் காணப்பட்டு "சேவைக்கொரு மகுடம்"என்ற பாராட்டு நிகழ்வில் கௌரவித்தது பெருமை மிகுந்த மன நிறைவை அளிப்பதாக கோவி.தியாகராஜன் குறிப்பிட்டார்.
இப்பாராட்டு விழாவில் ஜோகூர் மாநிலத்தை சேர்ந்த 45 அரசு சாரா இயக்க தலைவர்கள் கலந்துக் கொண்டதுடன்,கூலிம் பாண்டார் பாரு காவல் படை தலைவர் துவான் அப்துல்லா ஹாஜி ஹர்சாட் சிறப்பு பிரமுகரான கலந்து கொண்டு சேவையாளர்களுக்கு சிறப்பு செய்தார்.
சிறப்பிக்கப்பட்ட சேவையாளர்கள் ஒரு பகுதி
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home