Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Tuesday, 14 February 2017

செய்தி   : ஆர்.தசரதன்

பிப்         :09.02.2017

ஜார்ஜ்டவுன்



பினாங்கு தைப்பூச திருநாளில் பல்லாயிரக் கணக்கில் பக்தர்கள் திரண்டு காணிக்கை செலுத்தினர்

குற்றச்செயல் அற்ற,தமிழர் கலை  பண்பாடு பெருநாள் தைப்பூச கொண்டாட்டம் மக்கள் பெருமிதம்


பினாங்கு மாநிலத்தில் தைப்பூச திருநாள் மிகவும் விமரிசையாகவும்,கோலகலமாக நேற்று முன்தினம் சிறப்புடன் நடைபெற்றது.இந்த 2017 ஆம் ஆண்டு அதிகமான மக்கள் உள்ளூர்  மற்றும் வெளி நாடுகளிலிருந்து   பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி  ஆலயத்தின் 231ஆது  தைப்பூச விழாவில் கலந்துக்கொண்டு தங்களின் நேர்த்திக் கடனை தமிழ் கடவுளான முருக பெருமானுக்கு செலுத்தினர்.இந்த தைப்பூச விழாவில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட பால் குடங்களை செலுத்தப்பட்ட வேளையில் பல்லாயிரக்கணக்கான அழகுற செய்யபட்ட காவடிகள் இந்த ஆண்டு பினாங்கு தைப்பூசத்தினை வண்ணமய மாக்கியது.
வெளிநாடுகளின் சேர்ந்த சுற்று பயணிகள் இந்த ஆண்டு தைப்பூச விழாவில் கலந்துக்கொண்டதுடன்,சிறப்பு அம்சமாக இந்திய கலாச்சார உடைகளான வேட்டி சேலையுடன் காட்சியளித்தது இந்திய பண்பாட்டின் மாண்பை புலப்படுத்தியது.இவ்வாண்டு தைப்பூச விழாவில் 150 மேற்பட்ட தண்ணீர் பந்தல்கள் தனியார்,தொண்டூழிய ஊழியர்கள்,மன்றங்கள் மற்றும் பல அரசு சாரா நிறுவனங்கள் மூலமாக ஏற்படுத்தி மக்களின் தாகத்தையும் பசியை போக்கும் வண்ண அன்னதானங்களை வழங்கி பெரும் பங்கற்றினர்.

பினாங்கு மாநில காவல் துறையை சேர்ந்த 1000 க்கு மேற்பட்ட காவல் வீரர்கள் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்த சிறப்புடன் செயல் ஆற்றினார்.மலேசிய குற்ற தடுப்பு அரவாரியாம்,மலேசில  இந்து சங்கம்,மாநில இந்து இளைஞர் பேரவை,பினாங்கு மாநில தமிழ் இளைஞர் மணிமன்றம்,பினாங்கு இந்து தர்ம மாமன்றம் ஒன்றிணைத்து பினாங்கு மாநில  தைப்பூச தினத்தில் குற்ற செயலை தடுக்கும் முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு  சிறந்த பலனை கொண்டு வந்தது என்றால் அது மிகையில்லை.

மக்களுக்கு தேவையான வசதி கொண்ட குளியல் அரை,கழிப்பிடம்,முடி காணிக்கை செய்ய போதிய வசதி கொண்ட இடம் ஆகியவற்றை  பினாங்கு இந்து அறப்பணி வாரியதின் உதவியுடன் அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலய தலைவர் சுப்பிரமணியம் ஆறுமுகம் தலைமையில் செயல்படும் ஆலய நிர்வாக குழுவினர் நிறைவுடன் செய்திருந்தனர்.

பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங்,பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி,பாகான் டாலம் சட்டமன்ற உறுப்பினர் ஏ .தனசேகரன்,மஇகா தேசிய தலைவர் டத்தோ ஸ்ரீ எஸ்.சுப்பிரமணியம், அருள்மிகு பால தண்டாயுதபாணி ஆலய தலைவர் ஆர்.சுப்பிரமணியம்,டத்தோ ஆர்.ஏ.அருணாசலம்,மலேசிய குற்ற தடுப்பு அரவாரிய ஆட்சிமன்ற உறுப்பினர் டத்தோ/கே.ஆர்.புலவேந்திரன் ஆகியோர் தைப்பூச தினத்தன்று முக்கிய பிரமுகர்களாக ஆலய வழிப்பாட்டில் பங்கேற்றனர்.

சிறப்பு வழிபட்டதில் கலந்து கொள்ள வந்திருந்த பினாங்கு மாநில முதல்வர் லில் குவான் எங் உட்சாக பெருமகிழ்ச்சி அடைத்ததுடன்,பினாங்கு மாநிலத்தில் தைப்பூச திருநாளில் ஆண்டு தோறும் மக்கள் எண்ணிக்கை கூ டுவதன் மூலமாகவும் அதிகமான வெளி நாட்டு சுற்றுப் பயணிகளை ஈர்த்திருப்பது தனி சிறப்பாக கருதப்படுவதால்,ஒருவழி தொடர் போக்குவரத்து சேவையை அமுல்படுத்த பினாங்கு மாநில அரசு மேற்கொள்ளும் என்று தமதுரையில் அவர் கூறினார்.

இதனிடையே பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரிய தலைவர் பேராசிரியர் பி.இராமசாமி குறிப்பிடுகையில்,2017 ஆம் ஆண்டு பினாங்கு தைப்பூசம் ஒரு வரலாற்று தைப்பூசமாக மலை கோவிலில் வீற்றிருக்கும் அருள்பிகு ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்துக்கு இரதம் இல்லையே என்ற குறையை தீர்க்க தங்க இரதம் ஒரு பெறப்பட்டடுள்ளது என்றும்,தென் கிழக்கு ஆசியாவிலேயே மிகவும் பெரிய கோயிலாக விளங்கும் ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலய தனி சிறப்பு வைத்துள்ளது இம்மாநிலத்தில் உள்ள தமிழ் மக்களுக்கும் மாறாக இந்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு பெருமை கொள்ளும் வகையில் அமைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இரவு வேளைகளில் தண்ணி பந்தல்களில் ஒளியூட்டிய வண்ண விளக்குகளும், கண்கவர் காவடிகள் மற்றும் சிறு ரக இரத்தங்களும்காண்போரை கவர்ந்தது.நள்ளிரவு  வரை மலைக்கோவில் அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்திலும் நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலயத்தில் பல்லாயிரக்கணக்கான பக்கதர்கள் நள்ளிரவு தங்களின் இறுதி காணிக்கையை செலுத்தினர்.பினாங்கு மாநிலத்தை பொறுத்தவரை இந்த 2017 ஆம் ஆண்டு தைப்பூசம் சிறப்பான கோலாகலமான,குற்ற செயல் ஆற்ற சிறப்புக்குரிய தைப்பூசமாக திகழ்ந்தது என்றால் அதுமிகையில்லை.நேற்று வெள்ளிக்கிழமை மீண்டும் பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியத்தின் தங்க இரதம் மற்றும் நாட்டுக்கோட்டை செட்டியார்ஆலயத்தின் பிரதான வெள்ளி இரதம் ஆகியவை தத்தம் ஆலயங்களிருந்து புறப்பட்டு மக்களுக்கு எல்லாம் வல்ல முருக பெருமான் காட்சியளித்தார்.














0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home