செய்தி : ஆர்.தசரதன்
பிப் : 05.02.2017
ஜார்ஜ்டவுன்
பினாங்கு காப்பித்தான் பள்ளிவாசலில் சலவாத்து மஜ்லிஸ்
பினாங்கு மாநிலத்தில் உள்ள பிரபல வரலாற்று சிறப்புடைய காப்பிதான் பள்ளி வாசலில்,அண்மையில் இரு தினங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட திக்ரு மற்றும் சலாவத்து மஜ்லிஸ் நிகழ்வுகள் சிறப்புடன் நடந்தேறியது.இந்த நிகழ்வில் தமிழகத்தை சேர்ந்த மார்க்க அறிஞர் மௌலஷ அபுபக்கர் ரஷாதி அவர்கள் சிறப்புமிக்க சொற்பொழிவை ஆற்றினார்கள்.
கண்ணியத்துக்குறிய நாடறிந்த மார்க்க அறிஞரும், காப்பிதான் பள்ளியின் தலைமை இமாம் மனிதனல் சிறந்த முன் மாதிரி, மாமனிதர் மௌலானா டத்தோ அல்ஹாபிஸ் அப்துல்லா புஹாரி அவர்களின் துவாவுடன் நிகழ்வு தொடங்கியது.காப்பித்தான் பள்ளியின் தலைமை இமாம் மௌலவி அல்ஹாபிஸ் ஜியாவுல் ஹாக் பாக்கவி அவர்கள் ராத்தியத்துல் ஜலாலியா என்னும் திக்ரு என்னும் மஜ்லிஸை சிறப்புடன் வழி நடத்தினார்கள்.இந்நிகழ்வில் பொது மக்களுடன் சுமார் 20 உஸ்தாதுகள் உடன் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் கண்ணியத்துக்குறிய சிங்கப்பூரை சேர்ந்த மௌலான அஹமது ஜபருல்லா ஆலிம் அவர்கள் சலவாத்து மஜ்லிஸை சிறப்புடன் வழி நடத்தினார்கள்.இச்சிறப்புப்பிகு நிகழ்வில் பினாங்கு,கெடா,பேராக்,பெர்லிஸ் ஆகிய மாநிலங்களை சேர்ந்த மதரஸா உஸ்தாதுகள்,மாணவர்கள் உடன் பொது மக்கள் 1400 பேருக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இந்த சலவாத்து மஜ்லிஸ் சிறப்புடன் நடைபெற உதவிகள் புரிந்த அனைவருக்கும் காப்பித்தான் பள்ளியின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்ளப்பட்டது.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home