செய்தி : ஆர்.தசரதன்
ஜன : 28.01.2017
புக்கிட் மெர்தாஜாம்
புக்கிட் மெர்தாஜம் இளைஞர் தொழிற்நுட்ப கல்லூரியில் பொங்கலுக்கு தடையா?
ஒரே மலேசிய கொள்கைக்கு முரண்பாடு
மலேசிய நாட்டின் கொள்கையாக கருதப்படும் ஒரே மலேசிய கொள்கையின் அடிப்படையில்,இந்நாட்டில் வாழும் அணைத்து இனங்களின் காலை கலாச்சாரம் பாதுகாப்புக்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுத்து வரும் வேலையில்,புக்கிட் மெர்தாஜாமில் அமைந்துள்ள இளைஞர் தொழிற்நுட்ப கல்லூரியில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு அக்கல்லூரி நிர்வாகம் பொங்கல் கொண்டாட அனுமதி வழங்க முன்வராதது கேள்விக்குறியாகியுள்ளது.பொங்கல் கொண்டாடினால் கல்லூரி சுற்று சூழல் மாசுபடும் என்று கூறி அடிப்படையற்ற காரணத்தினால்,அக்கல்லூரியின் நிர்வாகம் பொங்கல் கொண்டாட தடை விதித்திருப்பது ஏற்புடையது காரணம் அல்ல என்று பினாங்கு மாநில இந்திய கலை காலாச்சார நற்பணி மன்ற தலைவர் பாலன் நம்பியார் கண்டனம் தெரிவித்தார்.ஒரு அரசாங்க கல்லூரி இது போல நடந்துக்கொள்வது அரசாங்க கொள்கைக்கு முரணானது என்றும் பல இனங்களின் கலை கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றை பாதுகாக்கும் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களின் ஒரே மலேசிய கொள்கை சீராக செயல்பட பொறுப்பற்ற சில அரசாங்க அதிகாரிகளின் நடத்தையே அதற்க்கு காரணம் என்றும் பாலன் நம்பியார் குறை கூறினார்.
இக்கல்லூரியில் பயிலும் இந்திய மாணவர்கள் பல வேளைகளில் மோசமான நிலையில் குறிப்பாக ஆசிரியர் ஒருவர் காலணியால் அடித்தது,இனதுவேசம் கட்டி அழைப்பது மற்றும் மற்ற இன மாணவர்களின் காலணிகளை பாதுகாக்க சொல்வது இப்படி எண்ணிடாங்கா பிரச்சனைகளுக்கு மாணவர்கள் ஆளாக நேரிடுவதாக பாலன் நம்பியார் குறிப்பிட்டார். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண அக்கல்லூரி நிவாகத்திடம் பேச்சு வார்த்தைகள் நடத்தபட்டது என்றும் மலேசிய இளைஞர் விளையாட்டு அமைச்சர் டத்தோ எம்.சரவணன் அவர்களுக்கு மகஜர் அனுப்பியும் உள்ளதாக தெரிவித்த அவர் இருப்பினும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.
இதனிடையே பொங்கல் பண்டிகையை கல்லூரியில் நிர்வாகம் அனுமதி வழங்காததை முன்னிட்டு,இங்குள்ள புக்கிட் மெர்தாஜாமில் உள்ள மங்கள நாயகி அம்மன் ஆலயத்தில் பொங்கல் விழாவை கோலாகலமாக அக்கல்லூரி மாணவர்கள் கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.இதனிடையே அரசாங்க கல்லூரியாக விளங்கும் புக்கிட் மெர்தாஜம் தொழிழ்நுட்ப கல்லூரியின் நிர்வாக நடவடிக்கைகள் சரி செய்யப்படாமல் இருக்குமேயானால் அரசாங்க கொள்கையாக கருதப்படும் ஒரே மலேசிய கொள்கை பூரண செயலாக்கம் பாதிக்கப்படுவது திண்ணம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பட விளக்கம்
பட விளக்கம்
புக்கிட் மெர்தாஜம் இளைஞர் தொழிற்நுட்ப கல்லூரி மாணவர்கள் கொண்டாடிய
பொங்கல் பண்டிகை உடன் பாலன் நம்பியார்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home