செய்தி : ஆர்.தசரதன்
பிப் : 03.02.2017
ஜார்ஜ்டவுன்
பினாங்கு தைப்பூச தினத்தை முன்னிட்டு தங்க இரதம் வெள்ளோட்டம்
ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
பினாங்கு மாநில தைப்பூச தங்க இரதம் நேற்று வெள்ளோட்டம் கண்டது.காலை மணி 11.20 மணிக்கு ஸ்ரீ தண்டாயுதபாணி மலை கோயிலிலிருந்து கீழ் அடிவாரத்தில் உள்ள கணேசர் ஆலயதிலிருந்து விதி உலா புறப்பட தயாரானது.இந்த வெள்ளோட்ட தின சிறப்பு விழாவில் பினாங்கு இந்து அறப்பணி வாரிய தலைவர் பி.இராமசாமி,ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலய தலைவர் ஆர்.சுப்பிரமணியம்,ஸ்ரீ டெலிமா சட்ட மன்ற தலைவர் ராயர்,பாகான் டாலாம் சட்ட மன்ற உறுப்பினர்அ.தனசேகரன்,பினாங்கு இந்து அறப்பணி வாரிய இயக்குனர் எம்.இராமசசத்திரன்,மலேசிய குற்ற செயல் தடுப்பு அரவாரிய உச்ச மன்ற உறுப்பினர் டத்தோ கே.ஆர்.புலவேந்திரன்,சமூக சேவையாளர் ஏ.சௌந்தரராஜன்,நம் தமிழர் இயக்க தலைவர் ப.த.மகாலிங்கம் மாற்று பொது மக்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தங்க இரத்தத்தினை வடம் பிடித்து இழுத்தனர்.
பினாங்கு மாநில 2017 ஆண்டுக்கான தைப்பூச திருநாளை முன்னிட்டு வருகின்ற பிப்பரவரி 8ஆம் நாள் அதிகாலை மணி 5.00 மணியளவில் குயின் ஸ்தீரிட்டில் அமைந்துள்ள மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து தங்க இரத்தில் வேலுடன் ஊர்வலம் வரும் என்றும்,பிப்ரவரி 10 ஆம் நாள் ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்திலிருந்து மீண்டும் குயின் ஸ்தீரிட்டில் அமைந்துள்ள மகா மாரியம்மன் ஆலயத்துக்கு தங்கரத்துடன் வேல் வைக்கப்பட்டது திரும்பும் என்று பேராசிரியர் பி.இராமசாமி கூறினார்.இந்த தங்க இரத்தமானது மக்கள் ரத்தமாக கருதப்படும் என்றும்,திட்டமிட்டபடி இந்த தங்க இரதம் வெள்ளோட்டத்துக்கு ஏற்பாடுகள் மிக கவனமாக செய்யப்பட்டது என்றும் பி.இராமசாமி மேலும் சொன்னார்.
இதனிடையே இந்த தங்க இரத வெள்ளோட்டத்தில் கலந்துக்க கொண்ட ஸ்ரீ பாலா தண்டாயுதபாணி ஆலய தலைவர் ஆர்.சுப்பிரமணியம் குறிப்பிடுகையில்.2017 ஆம் ஆண்டு தைப்பூசம் ஸ்ரீ பாலதண்டாயுத ஆலயத்தின் 231 தைப்பூசம் என்றும்,இந்த அந்நாட்டின் மகத்தான சிறப்பு தங்க ரத்தம் விதி உலா என்றும் மகிழ்ச்சியுடான் கூறினார்.பல சாதனைகளை கண்டுள்ள பினாங்கு ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயம் மேலும் ஒரு மயில் கல் வளர்ச்சியாக தங்க இரத்தத்தினை பெற்றுள்ளது தனி ஒரு சிறப்பாக அமைந்துள்ளது என்றும் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
பட விளக்கம்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home