செய்தி : ஆர்.தசரதன்
பிப் 15.02.2017
ஜார்ஜ்டவுன்
சாந்தி சமாதமான நன்மை வாழ்வுக்கு சகஜயோகா தியானம்!
பினாங்கு தைப்பூசத்தில் பக்தர்களுக்கு விளக்கம்!
மனதினை நிலையாக்கி தெளிவான சிந்தனையை கொண்டு சாந்தமுடன் வாழ்வதற்கு,உற்ற வகையில் பங்கற்றிவரும் சகஜயோகா தியானப் பயிற்சியை, எல்லா தரப்பினரும் தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக, அந்த உன்னத இறை நயம் கொண்ட கலையை உள்ள யுக்திகளை அம்மன்றத்தைச் சேர்ந்த தொண்டர்களின் அறிய முயற்சியில் ஒவ்வொரு தைப்பூசத்திலும் இலவசமாகவே நடத்தி நற்பணியாற்றி வருகின்றனர்.
பினாங்கு தைப்பூசத்தில் இரு நாட்களுக்கு இம்மன்றத்தின் பெயரில் பந்தல் நிர்மாணித்து, இங்கு வருகை புரியும் பக்தர்களுக்கு அதனை இலவசமாக போதிப்பதுடன் பயிற்சி பெற்ற தொண்டூழியர்களின் உதவியுடன் செய்து வருகின்றனர். தன்னலமற்ற சேவையின் பயனாக இங்கு வருகையளிக்கின்ற பக்தர்கள் பலர், இப்பயிற்சியை மேற்கொள்ளும் விதத்தை கற்றுணர்ந்து பயன் பெறுகின்றனர்.
இல்லர வாழ்வில் எண்ணிலடங்க மன அழுத்தம், மிகையான உளைச்சல், நிம்மதியின்மை, விரக்தி குழப்பம் போன்ற காரணங்களில் பாதிப்புக்கு உள்ளன அனைத்துப் பிரச்சனைகளிலிருந்தும் விடுபட்டு தெளிவு பெறுவதற்கும் தன்னிலையை மேம்படுத்தி கொள்வதற்கும் சகஜயோகா தியானப் பயிற்சி உற்றத் துணை புரிவதால், இந்த அற்புதமான இறைமிகுந்த கலைதனை முதியவர்கள் மட்டுமின்றி, இளையோர் மத்தியிலும் பிரபலமடைந்து வருகிறது என்தில் ஐயமில்லை.
இந்த உன்னத தியானப் பயிற்சியின் வழி பொது மக்களிடையே மெய்யுக மெய்ஞானத்தை வளர்க்கும் தலையாய நோக்கத்தில், இம் மன்றத்தின் ஆலோசகரும் தலைமை ஒருங்கிணைப்பாளருமான டத்தோ கே.ஆர்..புலவேந்திரனின் ஆதரவில், ஒவ்வெரு தைப்பூசத்தன்று இச்சேவையை வழங்க ஒருமித்த நற்பணியில், அண்மைய சில ஆண்டுகளாக இங்கு தொடர்ந்து நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மக்களின் மன நிம்மதி கெடுவதற்கு மூல காரணமாக அமைவது விரக்தி, சஞ்சலம் தீருவதற்கும் சகஜயோகா தியான வழிபாடு, சிறந்த உன்னதபலனை அளிக்க வல்லது என்றும், திசைமாறித் தீய வழியில் செல்லும் இளைஞர்களின் நல்வாழ்வை வளம் பெற செய்து தூய சிந்தனையுடன் வாழ்வில் சிறந்து விளங்க இந்த தியான வழிமுறை எண்ணிலடங்கா பலனை பெற உற்றத் துணை புரியுமென்று டத்தோ கே.ஆர்.புலவேந்திரன் கூறினார்.
இந்த தியான வழிபாட்டின் மகத்துவத்தை தைப்பூச பக்தர்களிடையே பரப்பி, அவர்களுக்கு நல்வழி காட்டும் உன்னத நோக்கத்தில், இச்சேவையை தைப்பூச தினத்தில் தாங்கள் மேற்கொண்டதாகவும் விவரித்த அவர், இந்த தியான வழிபாட்டுப் பயிற்சி வகுப்புகள் தங்கள் மன்றத்தின் ஆதரவில், மாநிலத்தின் முக்கியப் பகுதிகளில் பொது மக்கள் நன்மைக்காக இலவசமாகவே நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, அன்றைய தினம் சிறப்பு வருகையளித்திருந்த சகஜயோகா தியான மன்றத்தின் தேசிய துணைத் தலைவர் கே.மோகன், இப்பயிற்சியை புரியும் விதம் தொடர்பில் பக்தர்கள் பலருக்கு விலாவாரியான விளக்கம் அளித்து வழிகாட்டினார். குழப்பத்தால் நிலை தடுமாறுகின்றவர்களும்,
நிதானமின்றி சினம் கொள்பவர்களும் தாங்கள் எதிர்நோக்கும் சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்கு, சகஜயோகா தியானத்தால் நல்ல பலன் கிட்டுமென்பதை அவர் சில உத்திகளால் செய்து காட்டிய விதம் இப்பயிற்சியை எடுத்துக் கொண்ட பக்தர்கள் பலருக்கு மனநிறைவை அளித்தது.
நிதானமின்றி சினம் கொள்பவர்களும் தாங்கள் எதிர்நோக்கும் சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்கு, சகஜயோகா தியானத்தால் நல்ல பலன் கிட்டுமென்பதை அவர் சில உத்திகளால் செய்து காட்டிய விதம் இப்பயிற்சியை எடுத்துக் கொண்ட பக்தர்கள் பலருக்கு மனநிறைவை அளித்தது.
பட விளக்கம்:
சகஜயோகா தியானப் பயிற்சியாளர்களுடன் டத்தோ புலவேந்திரன் மற்றும் கே.மோகன்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home