Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Tuesday, 14 February 2017

செய்தி    : ஆர்.தசரதன்

பிப்           : 04.02.2017

செபராங் ஜெயா

பினாங்கு தைப்பூச திருநாளில் குற்ற செயலை தடுக்க

மலேசிய குற்ற தடுப்பு அரவாரியம் தீவிர முயற்சி.டத்தோ புலேந்திரன்



பினாங்கு மாநிலத்தில் எதிர்வரும் தைப்பூச திருநாள் சுபிச்சமாகவும் அமைதியாகவும்,குற்ற செயல் அற்ற மாநிலமாக இருப்பதை உறுதி படுத்த ஆக்கப்பணிகளை செய்திருப்பதக்க மலேசிய குற்ற தடுப்பு அரவாரிய ஆட்சி மன்ற உறுப்பினர் டத்தோ கே.ஆர்.புலேந்திரன் தெரிவித்தார்.கடந்த வியாழக்கிழமை இங்குள்ள செபராங் ஜெயாவில் உள்ள தமிழ் பண்பாட்டு அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் டத்தோ கே.ஆர்.புலவேந்திரன் உரையாற்றினார். 

பினாங்கு மாநில காவல் துறையினர் அதிகமான ஒத்துழைப்பை மலேசிய குற்ற தடுப்பு அரவாரியத்துக்கு  வழங்கி வருவதன் மூலம்,இந்த ஆண்டு தைப்பூச தினத்தில் குற்ற சம்பவங்கள் அற்ற மாநிலமாக பினாங்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்திருப்பதை போல இந்த ஆண்டும் அது உறுதிப்படுத்த மலேசிய குற்ற தடுப்பு அரவாரியம் செயல் திட்ட்ங்கள் கொண்டிருப்பதாக அவர் கூறினார் 

இந்த 2017 ஆம் ஆண்டும் தைப்பூச தினத்தில் பூஜ்யம் குற்ற சம்பவங்கள் பதிவு கொண்டிருக்கும் இலக்கை அடைய,மாநிலத்தில் உள்ள அரசு சார்பற்ற இயக்கங்கள் ஒருங்கிணைத்த முயற்சியிகள் மேற்கொள்ளப்பட்டடுள்ளது என்றும் மேலும் அவர் சொன்னார்.

இதற்கிடையே தைப்பூச விழாவில் கலந்துக்க கொள்ளும் பொது மக்கள் அதிகமான நகைகளை அணிய வேண்டாம் என்றும்,மது அருந்திவிட்டு தைப்பூச திருநாளின்  மாண்பை கெடுக்கும் அளவுக்கு நாமே காரணமாக இருப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

இதனிடையே இந்த ஆண்டு தைப்பூச திருநாளில் பொது மக்களின் பாது காப்பை உறுதிப்படுத்தும் வகையில்,மாநில காவல் படை தலைவர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியதில் பலனாக மாநில  காவல் படையை சேர்ந்த 1000 காவல் படையினர் இவ்வாண்டு தைப்பூச நாளில் பணியில் அமர்த்தப்படுவதற்கும் மாநில காவல் துறை அங்கீகாரம் வழங்கியிருப்பதாக பினாங்கு மாநில குற்ற தடுப்பு அரவாரிய துணை தலைவர் (2) பொறுப்பு வகிக்கும் டத்தோ கே.ஆர்.புலவேந்திரன் செய்தியாளர்களிடம் விவரித்து கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட மேஜர் காளீஸ்வரன் குறிப்பிடுகையில்,உலக நாடுகளிலிருந்து பல பாகங்களிலிருந்த சுற்று பயணிகளும் அதிக அளவில் கலந்து கொள்வது ஒரு புறம்மிருக்க,இந்துக்களின் மிக பிரபலமான தைப்பூசத்தை மாண்பை காப்பது ஒவ்வொரு இந்துக்களின் கடமையாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.இவ்வாண்டு 2 இரதங்கள் ஒன்று தங்க இரதம் மற்றொன்று வெள்ளி இரதம் ஊர்வலமாக செல்வதினால் இது பினாங்கு மாநில இந்து பெருமக்களுக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாக கருதப்படும் அதே வேலையில்,இதனால் பல பிரச்சனைகள் ஏற்பட்டு பொது அமைதி கெடும் என்ற கூற்றை அவர் நிராகரித்தார்.

இதனுடன் நடந்த  செய்தியாளர் கூட்டத்தில் மலேசிய குற்ற தடுப்பு அரவாரிய பொறுப்பாளராக  கலந்துக்கொண்ட ராஜா முனுசாமி அவர்கள்,தண்ணீர் பந்தல்களில் பக்தி பாடல்களை ஒளி பரப்ப பினாங்கு ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம் முயல வேண்டும் என்றும்  இதன் மூலம்  பக்தி மார்க்கம் கொண்ட உன்னத திருநாளாக தைப்பூசம் விளங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


பட விளக்கம் 

மலேசிய குற்ற செயல் தடுப்பு அரவாரிய ஆட்சி மற்ற பௌப்பாளர்கள்,உடன் ராஜா முனுசாமி,டத்தோ கே.ஆர்.புலவேந்திரன் மற்றும் மேஜர் காளீஸ்வரன் 





  




0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home