Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Wednesday 10 February 2016

செய்தி : ஆர்.தசரதன்                செபெராங் ஜெயா 


மனோவியல்  நிபுணர் காதர் இப்ராஹிமை குறை கூருவதா ?
பினாங்கு  சமூக அமைப்புகளின்  தலைவர்கள் கண்டனம் 



மானித நேயம் சமூக முன்னேற்றம் தொலைந்து போன வாழ்வை மீட்டு எடுத்து  வாழ்வு நெறிமுறைகளை நாடு தழுவிய நிலையில் போதித்து வரும் மனோவியல் தத்துவ நிபுணர் டாக்டர் கத்தார் இப்ராஹிம் அவரை  சிறுமை படுத்தும் நிலையில் அண்மையில் சமூக  தளங்களிலும் பொறுப்பற்ற நபர்களை கண்டித்து பினாங்கு பொது அமைப்புகளின் தலைவர்கள் தங்களின் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொண்டனர்.

நாட்டில் பல்லாயிரக்கணக்கான தன்முனைப்பு வகுப்புகள்,கருத்தரங்கம்,மனதளவில் பதிப்பு கொண்டோர்க்கு மனோவியல் ஆலோசனைகளை வழங்கி,இந்து பெருமக்களும் ஒன்றிணைத்து நல்ல மனிதர்களாக உருவாக்கி எண்ணற்ற  சாதனைகளை புரிந்தவர் அவர்.அவரை குறை சொல்லியும் சிறுமை படுத்தியும் குறை   சொல்பவர்கள் எந்த சாதித்துள்ளனர் என்று எண்ணி   பார்க்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

வாழ்கையில் எந்த மதத்தில்  நீ படைக்க பட்டடாயோ இறுதி   வரை அந்த மதத்தை சார்தந்து இருந்து சார்திருக்க வேண்டும் என்பதும், தமிழ் கடவுனான முருகனை வழிபாடும் மக்களும் தங்களின் மதம் சார்த்த நிலையிலேயே முன்னேற்றம்  அடைய  வேண்டும் என்று, உலக  தரத்தில் தத்துவங்களையும் போதித்து வரும் காதர் இப்ராஹிம் இந்நாட்டு இந்தியர்களுக்கு குறிப்பாக இது பெருமக்களின் நம்பிக்கை ஒளியை ஏற்று அவர்களின் வாழ்வில் மறு மலர்ச்சிக்கு வித்திட்டவர் என்பதை மறந்து வியாக்கியானம் செய்வது ஞாயமில்லை என்றும் சம்பந்தபட்டவர்கள் அதி மேதாவிகளா? என்று காதர் இப்ராஹிம் அவர்களின் பயிற்சியில் கலந்து கொண்ட,இன்று உயந்த நிலையில் இருக்கும் அவர்கள், காதர் இப்ராஹிம் அவர்களை அவர்களை குறை சொல்லும் நபர்களுக்கு எதிராக தங்களின் கண்டன குரலை எழுப்பினர்.

கற்றுனர்ந்தர்வர்கள் தங்களின் வாழ்வியால் அனுபவங்களை,மற்றவர்களின் வாழ்கையின் முன்னேற்றத்துக்கு தன்னை ஒரு மெழுகுவர்த்தியாக எண்ணி,இந்நாட்டில் உள்ள தமிழ் சமூதாயத்தின் முன்னேற்றத்திற்கு அரும் பாடு  பட்டு வரும் நாட்டின் தலைசிறந்த தன்முனைப்பு,மனோவியல் நிபுணர் காதற் இபுராஹிம் குறை சொல்பவர்களுக்கு முன்,உங்களின் குறை என்ன என்பதை உணர்த்து செயல் பட வேண்டும் என்று பினாங்கு பொது அமைப்புகளின் தலைவர்களான எல்.முனியாண்டி,தி. மனோநீதி,ஆர்.இராஜேஸ்வரி,லக்டோர்.டாக்டர்எஸ்.இளையராஜா,ஆர்.சுமன்,கா.கலைவாணன்,
தி.காளிதாசன்,மா.முனியாண்டி மேலும் பல  அமைப்புகளின் தலைவர்கள் காதர் இபுராஹிம் அவர்களின் சாதனைகளை பட்டியலிட்டு,அன்னாரின் சேவை மக்களுக்கு தேவை என்று முழக்கமிட்டு இங்கு  நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூரினர்.


பட விளக்கம்

காதர் இப்ராகிம் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தா பொது அமைப்புகளின் தலைவர்கள்
ஒரு பகுதி.







செய்தி : ஆர்.தசரதன் பிறை
                                                    


பிறை தொழில் பேட்டைப் பகுதியில் தீ விபத்து.




பிறை தொழில் பேட்டை பகுதியில் உள்ள கிடங்கு ஒன்றில் நேற்றைய   முன் தினம்   இரவு மணி 9.30க்கு தீ விபத்து ஒன்று ஏற்பட்டது.அதிஷ்ட வசமாக அந்த கிடங்கின் பாதுகாவலர் ஒருவர் தீயணைப்பு மீட்பு துறைக்கு கொடுத்த தகவலில் அப்பகுதியில் உள்ள ஏனைய தொழிற்சாலைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது தீ ஏற்பட்ட இந்த கிரங்கில் இரு சங்கர வாகனங்கள் பயன் படுத்தும் சக்கரங்கள் (ரீம் ) மற்றும் சில தொழிற்சாலை கழிவு பொருட்கள் வைக்கபட்டிருந்த  ஒரு கிடங்காகும்.

இந்த கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை தகவல் அறிந்த படர்வொர்த் தீயணைப்பு மீட்பு துறை,சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து அரை மணி நேர போராட்டத்துக்கு  பிறகு தீயை மற்ற தொழிற்சாலைகளுக்கு பரவாமல் தடுத்ததாக.இந்த தீயணைப்பு விபத்தில் புட்டர்வோர்த் தீயணைப்பு மீட்பு துறை வீரர்களுடன் மற்றும் தன்னார்வு தீயணைப்பு பிரிவை சேர்த்த 34 பணியாளர்கள் தீயை அணைக்க உதவினர் என்று பட்டர்வொர்த் தீயணைப்பு மீட்பு துறை அதிகாரி இஸ்மாயில் நோர் செய்தியாளர்களிடம் கூறினார்.இந்த தீ ஏற்பட்ட காரணம் மற்றும் சேத மதிப்புகளை தீயணைப்பு மீட்பு துறை விசாரணை மேற்கொண்டு வருவதுடன்,இந்த தீ விபத்தில் எந்த நபரும் காயம் அடையவில்லை என்றும் தெரிவித்தார்.


பட விளக்கம்

தீயை அணைக்க முற்படும் தீயணைப்பு வீரர்கள்















செய்தி : ஆர்.தசரதன்    ஜார்ஜ்டவுன்



பட்டாசுகள் திறந்த வெளியில் விற்பதை தடுக்க வேண்டும்

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வலியுறுத்து


பெருநாள் காலங்களில் பட்டாசுகள் திறந்த வெளியில் விற்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.இந்த திறந்த வெளி சந்தையில் பட்டாசுகளை விற்பனை செய்பவர்களின் மீது போதிய அமலாக்க பிரிவினரின் நடவடிக்கை குறைந்து உள்ளதே இதற்க்கு  காரணம் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்க தலைவர் எஸ்.எம் முஹம்மாட் இட்ரீஸ் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட சோதனையில் பயான் பாரு,ஆயிர் ஹித்தாம்,லிப் சீன்,சுங்கை டுவா,புலாவ் தீக்குஸ் மற்றும் கொம்தார் பகுதிகளில் திறந்த வெளியில் பட்டாசுகள் விற்கபட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

இதனிடையே விற்கப்படும் பட்டாசுகள் 10 வெள்ளியிலிருந்து 20 வெள்ளி மற்றும் வெள்ளி 100லிருந்து 200 வெள்ளி வரையுளும் சந்தையில் விரற் கபடுவதாக கூரிய அவர்,இதனை வயது குறைந்த இளைஞர்கள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

இது போன்ற திறந்த வெளி பட்டாசுகளின் விற்பணையை தடுக்க மலேசியா சுங்க துறை மற்றும்,மலேசியா போலீஸ் படை தகுந்த நடவடிக்கைகளை நாடு முழுவதும் எடுக்க வேண்டும் என்றும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக் கொள்வத்துடன்,இதன் மூலம் பட்டாசுகளையும் அதனை கடத்தும் கும்பாலின் நடவடிக்கைகளை முறியடிக்க முடியும் என்று எஸ்.எம் முஹம்மாட் இட்ரீஸ் நம்பிக்கை தெரிவித்தார்.


தற்போதிய போக்குதனில் சவ ஊர்வலம்,திருமணம்,பிறந்த நாள்,ஆகியவற்றில் பட்டாசுகளை பயன் படுத்துவதால் பொது மக்களுக்கு தொந்தரவும்,பொருட்சேதம் மற்றும் உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அவர் கூறினார்.சிறார்களின் மத்தியில் ஏற்பட்ட பதிப்புகளை நாம் எளிதில் மறக்க  வண்ணம்,1957ஆம் ஆண்டு வெடி மருந்து சட்டம் பிரிவு 4(2) கீழ் வெடி மருந்துகளை விற்பனை மற்றும்,இறக்குமதி செய்பவர்களுக்கு 5ஆண்டுகளுக்கு மேல் போகாத சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் வெள்ளி அபராதம் மற்றும் இரு தண்டணைகளை பெற சட்டம் வழி வகுத்துள்ளத்தையும்,பொருப்படுத்தாமல் மிக சிலபமாக பட்டாசுகளையும் ,வெடிமருந்துகளையும் பெற்று சட்டத்தை மீறும் செயல் குறித்தும் அவர் தெளிவுப்படுத்தினார்.


இதனிடையே பட்டாசுகள் வெடிமருந்துகள் வைய்திருபோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குடியிருப்பதுடன் இதனை மீறுபவர்களின் மீது அமைக்க வழிமுறைகள் சிறந்த பலனை அழைக்க வில்லை என்றும் அவர் சொன்னார்.  சட்டத்தை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனையை பெரும் விடத்தில் நடப்பு சட்டத்தில் மாற்றங்களை செய்து வெடி மருந்துகளை கடத்தும் நபர்களுக்கு கடும் காவல் தண்டனையும் அவர்களின் சொந்துக்களை பறிமுதல் செய்யும் வழிமுறைகளையும்  விதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சிறார்கள் பட்டாசுகளை பயன்படுத்துவதை பெற்றோர்கள் கவனத்தில் கொள்வதுடன்,அவர்கள் பட்டாசுகளை வாங்குவதையும் பெற்றோர்கள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட  வேண்டும் என்றும் எஸ்.எம் முஹம்மாட் இட்ரீஸ் ஆலோசனை கூறினார்.




பட விளக்கம்




செய்தி : ஆர்.தசரதன்  பட்டர்வொர்த்



இந்து சமயம் வாழ்வியலுக்கு உகர்ந்த சமயம்

முருகன் புகழ்  கால்ஸ் வடிவேலன் புகழாரம்


இந்து சமயம் மனித வாழ்வியலுக்கு உகர்ந்த சமயம் என்று அண்மையில்,பட்டர்வொர்த்  இந்து இளைஞர் இயக்கம் ஏற்பாட்டில் ,இங்குள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் நடந்த சமய சொற்பொழிவு ஒன்றில் கலந்துக்  கொண்ட போது ஆஸ்திரோலிய நாட்டை சேர்த்த பேராசிரியர் கால்ஸ் வடிவேலன் பேல்லி புகழாரம் சூட்டினார்.ஒரு கிறிஸ்துவராக இருந்து இந்து சமயத்தின் மீது குறிப்பாக தமிழ் கடவுள் முருகன் மீது அதீத பக்தி கொண்டு இந்து சமயத்தை தழுவிய அறிஞர் பெருமகனார்அவர்.

1981 ஆம் ஆண்டு பத்துமலை தைபூசதில் முருகனுக்கு முதல் காவடி எடுத்து தொட்டங்கியத்தில்,தமது வாழ்வில் பல மாற்றங்களை தாம் அனுபவ பூரணமாக உணர்ந்ததாக அவர் சொன்னார். பல உலக நாடுகளுக்கு சென்று இந்து சமய ஆன்மிக விளக்க உரைகளை ஆற்றி வருவதுடன்  ,தாம் வசிக்கும் ஆஸ்திரோலிய நாட்டிலும் இந்து சமயத்தில் மாறுபட்ட கருத்துகளை கொண்டுள்ளவர்களின் மத்தியில் இந்து சமய விளக்க உரைகளை வழங்கி வருவதாகவும் அவர் சொன்னார்.


தாம் இந்து மதத்தை தழுவிய பொது இந்து மதக் கொள்கையில் முக்கியம் வாய்ந்தது சைவம் சமயமாகும்,அதனை  நிறுத்தி தாம் மற்றும் தமது குடும்பத்தினர் அனைவரும் சைவம் உணவு உட்கொண்டு  வருவதாக அவர் கூறினார்.இந்து மதத்தில் உயிரினங்களை மத  வழிபாட்டிற்கு பயன் படுத்துவது  உண்டு,அனால் தாம் சைவ நெறி முறைகளை கடைப்பிடிப்பதால் அவற்றை எல்லாம் ஒரு பொருட்டாக நினைக்காமல் சைவ நெறி முறைகளுக்கு ஏற்ப நடந்து வருவதாக அவர் சொன்னார்.

ஆஸ்திரோலியா நாட்டில் பல சமய மக்கள் வலது வருவதுடன்,அதில் எப்படி மற்ற சமூகத்தினர் இந்து மதக் கொள்கையை எப்படி வரவேற்கின்றனர் என்பதை தாம்   காவடி எடுக்கும் முறைதனையும், பழமை மிகுந்த இந்து  சமயத்தினை எடுத்து உரைக்கிற போது அவர்களின் வரவேற்பு நல்ல முறையில் வரவேற்பு  கண்டு  இன்றைய நிலையில் ஐரோப்பிய நாடுகளில் இந்து சமயம் வெகு வேகமாக வளர்ந்து வருகின்றது என்றும் கால்ஸ் கூறினார்.


மலேசியா  தைபூசம் அதன் சிறப்புகளை கொண்ட புத்தகம் ஒன்றை ஆஸ்திரோலிய,சிங்கப்பூர் மற்றும்  கோலலாம்பூர்   ஆகிய இடங்களில் எதிர்வரும் மே மாதம் தொடக்கத்தில் வெளியீடப்படும் என்றும் கால்ஸ் சொன்னார்.

பட விளக்கம்

1. பட்டர்வொர்த் இந்து இளைஞர்  தலைவர் லோகநாதன் கால்ஸ் அவர்களுக்கு நினைவு சின்ன  வழங்கிய போது



4 சொர்பொழிவை  ஏற்று நடத்திய ஏற்பட்டுக் குழுவினர்