செய்தி : ஆர்.தசரதன் ஜார்ஜ்டவுன்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வலியுறுத்து
பெருநாள் காலங்களில் பட்டாசுகள் திறந்த வெளியில் விற்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.இந்த திறந்த வெளி சந்தையில் பட்டாசுகளை விற்பனை செய்பவர்களின் மீது போதிய அமலாக்க பிரிவினரின் நடவடிக்கை குறைந்து உள்ளதே இதற்க்கு காரணம் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்க தலைவர் எஸ்.எம் முஹம்மாட் இட்ரீஸ் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட சோதனையில் பயான் பாரு,ஆயிர் ஹித்தாம்,லிப் சீன்,சுங்கை டுவா,புலாவ் தீக்குஸ் மற்றும் கொம்தார் பகுதிகளில் திறந்த வெளியில் பட்டாசுகள் விற்கபட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.
இதனிடையே விற்கப்படும் பட்டாசுகள் 10 வெள்ளியிலிருந்து 20 வெள்ளி மற்றும் வெள்ளி 100லிருந்து 200 வெள்ளி வரையுளும் சந்தையில் விரற் கபடுவதாக கூரிய அவர்,இதனை வயது குறைந்த இளைஞர்கள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.
இது போன்ற திறந்த வெளி பட்டாசுகளின் விற்பணையை தடுக்க மலேசியா சுங்க துறை மற்றும்,மலேசியா போலீஸ் படை தகுந்த நடவடிக்கைகளை நாடு முழுவதும் எடுக்க வேண்டும் என்றும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக் கொள்வத்துடன்,இதன் மூலம் பட்டாசுகளையும் அதனை கடத்தும் கும்பாலின் நடவடிக்கைகளை முறியடிக்க முடியும் என்று எஸ்.எம் முஹம்மாட் இட்ரீஸ் நம்பிக்கை தெரிவித்தார்.
தற்போதிய போக்குதனில் சவ ஊர்வலம்,திருமணம்,பிறந்த நாள்,ஆகியவற்றில் பட்டாசுகளை பயன் படுத்துவதால் பொது மக்களுக்கு தொந்தரவும்,பொருட்சேதம் மற்றும் உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அவர் கூறினார்.சிறார்களின் மத்தியில் ஏற்பட்ட பதிப்புகளை நாம் எளிதில் மறக்க வண்ணம்,1957ஆம் ஆண்டு வெடி மருந்து சட்டம் பிரிவு 4(2) கீழ் வெடி மருந்துகளை விற்பனை மற்றும்,இறக்குமதி செய்பவர்களுக்கு 5ஆண்டுகளுக்கு மேல் போகாத சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் வெள்ளி அபராதம் மற்றும் இரு தண்டணைகளை பெற சட்டம் வழி வகுத்துள்ளத்தையும்,பொருப்படுத்தாமல் மிக சிலபமாக பட்டாசுகளையும் ,வெடிமருந்துகளையும் பெற்று சட்டத்தை மீறும் செயல் குறித்தும் அவர் தெளிவுப்படுத்தினார்.
இதனிடையே பட்டாசுகள் வெடிமருந்துகள் வைய்திருபோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குடியிருப்பதுடன் இதனை மீறுபவர்களின் மீது அமைக்க வழிமுறைகள் சிறந்த பலனை அழைக்க வில்லை என்றும் அவர் சொன்னார். சட்டத்தை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனையை பெரும் விடத்தில் நடப்பு சட்டத்தில் மாற்றங்களை செய்து வெடி மருந்துகளை கடத்தும் நபர்களுக்கு கடும் காவல் தண்டனையும் அவர்களின் சொந்துக்களை பறிமுதல் செய்யும் வழிமுறைகளையும் விதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சிறார்கள் பட்டாசுகளை பயன்படுத்துவதை பெற்றோர்கள் கவனத்தில் கொள்வதுடன்,அவர்கள் பட்டாசுகளை வாங்குவதையும் பெற்றோர்கள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றும் எஸ்.எம் முஹம்மாட் இட்ரீஸ் ஆலோசனை கூறினார்.
பட விளக்கம்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home