Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Wednesday, 10 February 2016

செய்தி : ஆர்.தசரதன்                செபெராங் ஜெயா 


மனோவியல்  நிபுணர் காதர் இப்ராஹிமை குறை கூருவதா ?
பினாங்கு  சமூக அமைப்புகளின்  தலைவர்கள் கண்டனம் 



மானித நேயம் சமூக முன்னேற்றம் தொலைந்து போன வாழ்வை மீட்டு எடுத்து  வாழ்வு நெறிமுறைகளை நாடு தழுவிய நிலையில் போதித்து வரும் மனோவியல் தத்துவ நிபுணர் டாக்டர் கத்தார் இப்ராஹிம் அவரை  சிறுமை படுத்தும் நிலையில் அண்மையில் சமூக  தளங்களிலும் பொறுப்பற்ற நபர்களை கண்டித்து பினாங்கு பொது அமைப்புகளின் தலைவர்கள் தங்களின் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொண்டனர்.

நாட்டில் பல்லாயிரக்கணக்கான தன்முனைப்பு வகுப்புகள்,கருத்தரங்கம்,மனதளவில் பதிப்பு கொண்டோர்க்கு மனோவியல் ஆலோசனைகளை வழங்கி,இந்து பெருமக்களும் ஒன்றிணைத்து நல்ல மனிதர்களாக உருவாக்கி எண்ணற்ற  சாதனைகளை புரிந்தவர் அவர்.அவரை குறை சொல்லியும் சிறுமை படுத்தியும் குறை   சொல்பவர்கள் எந்த சாதித்துள்ளனர் என்று எண்ணி   பார்க்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

வாழ்கையில் எந்த மதத்தில்  நீ படைக்க பட்டடாயோ இறுதி   வரை அந்த மதத்தை சார்தந்து இருந்து சார்திருக்க வேண்டும் என்பதும், தமிழ் கடவுனான முருகனை வழிபாடும் மக்களும் தங்களின் மதம் சார்த்த நிலையிலேயே முன்னேற்றம்  அடைய  வேண்டும் என்று, உலக  தரத்தில் தத்துவங்களையும் போதித்து வரும் காதர் இப்ராஹிம் இந்நாட்டு இந்தியர்களுக்கு குறிப்பாக இது பெருமக்களின் நம்பிக்கை ஒளியை ஏற்று அவர்களின் வாழ்வில் மறு மலர்ச்சிக்கு வித்திட்டவர் என்பதை மறந்து வியாக்கியானம் செய்வது ஞாயமில்லை என்றும் சம்பந்தபட்டவர்கள் அதி மேதாவிகளா? என்று காதர் இப்ராஹிம் அவர்களின் பயிற்சியில் கலந்து கொண்ட,இன்று உயந்த நிலையில் இருக்கும் அவர்கள், காதர் இப்ராஹிம் அவர்களை அவர்களை குறை சொல்லும் நபர்களுக்கு எதிராக தங்களின் கண்டன குரலை எழுப்பினர்.

கற்றுனர்ந்தர்வர்கள் தங்களின் வாழ்வியால் அனுபவங்களை,மற்றவர்களின் வாழ்கையின் முன்னேற்றத்துக்கு தன்னை ஒரு மெழுகுவர்த்தியாக எண்ணி,இந்நாட்டில் உள்ள தமிழ் சமூதாயத்தின் முன்னேற்றத்திற்கு அரும் பாடு  பட்டு வரும் நாட்டின் தலைசிறந்த தன்முனைப்பு,மனோவியல் நிபுணர் காதற் இபுராஹிம் குறை சொல்பவர்களுக்கு முன்,உங்களின் குறை என்ன என்பதை உணர்த்து செயல் பட வேண்டும் என்று பினாங்கு பொது அமைப்புகளின் தலைவர்களான எல்.முனியாண்டி,தி. மனோநீதி,ஆர்.இராஜேஸ்வரி,லக்டோர்.டாக்டர்எஸ்.இளையராஜா,ஆர்.சுமன்,கா.கலைவாணன்,
தி.காளிதாசன்,மா.முனியாண்டி மேலும் பல  அமைப்புகளின் தலைவர்கள் காதர் இபுராஹிம் அவர்களின் சாதனைகளை பட்டியலிட்டு,அன்னாரின் சேவை மக்களுக்கு தேவை என்று முழக்கமிட்டு இங்கு  நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூரினர்.


பட விளக்கம்

காதர் இப்ராகிம் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தா பொது அமைப்புகளின் தலைவர்கள்
ஒரு பகுதி.







0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home