செய்தி : ஆர்.தசரதன் பிறை
பிறை தொழில் பேட்டைப் பகுதியில் தீ விபத்து.
பிறை தொழில் பேட்டைப் பகுதியில் தீ விபத்து.
பிறை தொழில் பேட்டை பகுதியில் உள்ள கிடங்கு ஒன்றில் நேற்றைய முன் தினம் இரவு மணி 9.30க்கு தீ விபத்து ஒன்று ஏற்பட்டது.அதிஷ்ட வசமாக அந்த கிடங்கின் பாதுகாவலர் ஒருவர் தீயணைப்பு மீட்பு துறைக்கு கொடுத்த தகவலில் அப்பகுதியில் உள்ள ஏனைய தொழிற்சாலைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது தீ ஏற்பட்ட இந்த கிரங்கில் இரு சங்கர வாகனங்கள் பயன் படுத்தும் சக்கரங்கள் (ரீம் ) மற்றும் சில தொழிற்சாலை கழிவு பொருட்கள் வைக்கபட்டிருந்த ஒரு கிடங்காகும்.
இந்த கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை தகவல் அறிந்த படர்வொர்த் தீயணைப்பு மீட்பு துறை,சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து அரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை மற்ற தொழிற்சாலைகளுக்கு பரவாமல் தடுத்ததாக.இந்த தீயணைப்பு விபத்தில் புட்டர்வோர்த் தீயணைப்பு மீட்பு துறை வீரர்களுடன் மற்றும் தன்னார்வு தீயணைப்பு பிரிவை சேர்த்த 34 பணியாளர்கள் தீயை அணைக்க உதவினர் என்று பட்டர்வொர்த் தீயணைப்பு மீட்பு துறை அதிகாரி இஸ்மாயில் நோர் செய்தியாளர்களிடம் கூறினார்.இந்த தீ ஏற்பட்ட காரணம் மற்றும் சேத மதிப்புகளை தீயணைப்பு மீட்பு துறை விசாரணை மேற்கொண்டு வருவதுடன்,இந்த தீ விபத்தில் எந்த நபரும் காயம் அடையவில்லை என்றும் தெரிவித்தார்.
பட விளக்கம்
தீயை அணைக்க முற்படும் தீயணைப்பு வீரர்கள்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home