Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Wednesday 10 February 2016

செய்தி : ஆர்.தசரதன்  பட்டர்வொர்த்



இந்து சமயம் வாழ்வியலுக்கு உகர்ந்த சமயம்

முருகன் புகழ்  கால்ஸ் வடிவேலன் புகழாரம்


இந்து சமயம் மனித வாழ்வியலுக்கு உகர்ந்த சமயம் என்று அண்மையில்,பட்டர்வொர்த்  இந்து இளைஞர் இயக்கம் ஏற்பாட்டில் ,இங்குள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் நடந்த சமய சொற்பொழிவு ஒன்றில் கலந்துக்  கொண்ட போது ஆஸ்திரோலிய நாட்டை சேர்த்த பேராசிரியர் கால்ஸ் வடிவேலன் பேல்லி புகழாரம் சூட்டினார்.ஒரு கிறிஸ்துவராக இருந்து இந்து சமயத்தின் மீது குறிப்பாக தமிழ் கடவுள் முருகன் மீது அதீத பக்தி கொண்டு இந்து சமயத்தை தழுவிய அறிஞர் பெருமகனார்அவர்.

1981 ஆம் ஆண்டு பத்துமலை தைபூசதில் முருகனுக்கு முதல் காவடி எடுத்து தொட்டங்கியத்தில்,தமது வாழ்வில் பல மாற்றங்களை தாம் அனுபவ பூரணமாக உணர்ந்ததாக அவர் சொன்னார். பல உலக நாடுகளுக்கு சென்று இந்து சமய ஆன்மிக விளக்க உரைகளை ஆற்றி வருவதுடன்  ,தாம் வசிக்கும் ஆஸ்திரோலிய நாட்டிலும் இந்து சமயத்தில் மாறுபட்ட கருத்துகளை கொண்டுள்ளவர்களின் மத்தியில் இந்து சமய விளக்க உரைகளை வழங்கி வருவதாகவும் அவர் சொன்னார்.


தாம் இந்து மதத்தை தழுவிய பொது இந்து மதக் கொள்கையில் முக்கியம் வாய்ந்தது சைவம் சமயமாகும்,அதனை  நிறுத்தி தாம் மற்றும் தமது குடும்பத்தினர் அனைவரும் சைவம் உணவு உட்கொண்டு  வருவதாக அவர் கூறினார்.இந்து மதத்தில் உயிரினங்களை மத  வழிபாட்டிற்கு பயன் படுத்துவது  உண்டு,அனால் தாம் சைவ நெறி முறைகளை கடைப்பிடிப்பதால் அவற்றை எல்லாம் ஒரு பொருட்டாக நினைக்காமல் சைவ நெறி முறைகளுக்கு ஏற்ப நடந்து வருவதாக அவர் சொன்னார்.

ஆஸ்திரோலியா நாட்டில் பல சமய மக்கள் வலது வருவதுடன்,அதில் எப்படி மற்ற சமூகத்தினர் இந்து மதக் கொள்கையை எப்படி வரவேற்கின்றனர் என்பதை தாம்   காவடி எடுக்கும் முறைதனையும், பழமை மிகுந்த இந்து  சமயத்தினை எடுத்து உரைக்கிற போது அவர்களின் வரவேற்பு நல்ல முறையில் வரவேற்பு  கண்டு  இன்றைய நிலையில் ஐரோப்பிய நாடுகளில் இந்து சமயம் வெகு வேகமாக வளர்ந்து வருகின்றது என்றும் கால்ஸ் கூறினார்.


மலேசியா  தைபூசம் அதன் சிறப்புகளை கொண்ட புத்தகம் ஒன்றை ஆஸ்திரோலிய,சிங்கப்பூர் மற்றும்  கோலலாம்பூர்   ஆகிய இடங்களில் எதிர்வரும் மே மாதம் தொடக்கத்தில் வெளியீடப்படும் என்றும் கால்ஸ் சொன்னார்.

பட விளக்கம்

1. பட்டர்வொர்த் இந்து இளைஞர்  தலைவர் லோகநாதன் கால்ஸ் அவர்களுக்கு நினைவு சின்ன  வழங்கிய போது



4 சொர்பொழிவை  ஏற்று நடத்திய ஏற்பட்டுக் குழுவினர்



















0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home