Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Friday, 15 January 2016


பினாங்கு மாநில தைப்பூச பெருவிழா

தொகுப்பு ஆர்.ராமனிபினாங்கு தைப்பூசம் என்பது மலேசியாவின் ஜோர்ஜ் டவுன் பினாங்கு மாநகரில் உள்ள தண்ணீர் மலை அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோயிலில் இடம்பெறும் தைப்பூசத் திருவிழாவைக் குறிக்கும்.
தமிழர் மட்டும் அன்றி சீனர்களும் சேர்ந்து வணங்கும் கடவுள் தண்ணீர்மலை முருகன்.சீனர்களும் ஒவ்வொரு ஆண்டும் அன்னதானத்திற்கு மூட்டை மூட்டையாய் அரிசி, காய்கறிகள், பழங்கள், அவன் பவனிவரும் பாதையெல்லாம் கோபுரம்போல் குவித்த ஆயிரக்கணக்கான தேங்காய்கள் என உடைக்கிறார்கள்.


                                                           முதலாம் நாள் விழா

பினாங்கில் தைப்பூசத் திருவிழாவின் முதல்நாளை 'செட்டி (நகரத்தார்) பூசம்' எனச் சொல்வார்கள். பூசத்திற்கு இரண்டு நாள் முன் பினாங்கு வீதியில் உள்ள கோவில் (கிட்டங்கி) வீட்டில் நகரத்தார்களின் மயில் காவடிகளுக்கும், முருகனின் பூசைகள் செய்து வணங்கி வழிபட்டு, அடுத்த நாள் (பூசத்திற்கு முதல் நாள்) கோவில் வீட்டில் இருந்து அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ நகரத்தார்களின் காவடிகள் முன் செல்ல வெள்ளிரதத்தில் முருகப் பெருமானின் ஊர்வலம் புறப்படும்.வழி நெடுகிலும் மக்கள் (ஏராளமான சீனர்களும்) அர்ச்சனைகள் செய்து பல்லாயிரக் கணக்கில் தேங்காய்கள் உடைக்க அங்கங்கே நின்று அவையெல்லாவற்றையும் அன்புடன் ஏற்று மெதுவாக வரும் ஊர்வலம் மதியம் 'காமாட்சியம்மன்' ஆலயம் வந்தடைந்து அன்னையின் ஆசி பெற்று அடுத்து, பக்கத்திலேயே எதிர்புறத்தில்'சிவன்' கோவில் வந்தடைந்து அய்யனின் ஆசியையும் பெற்று- அங்கு சிறிது நேரம் இளைப்பாற்றி மீண்டும் அங்கிருந்து தண்ணீர்மலைக்கோவிலை நோக்கி தன் ஊர்வலத்தை தொடருவார்.

மதியம் ரதத்தின் கூடவே நடக்கும் பக்தர்களுக்கு (வெயிலில்) கால் சுடாமல் 'பினாங்கு நகராட்சி' சாலை நடுவே தண்ணீர் ஊற்றிக் கொண்டே செல்லும். அந்த சூடுபறக்கும் சாலையில் காலணி அணியாமல் நடந்து கொண்டிருப்பவர்களுக்கு மிகவும் இதமாயிருக்கும். ஊர்வலம் போகும் வழியெங்கும் தனியார் மற்றும், அரசாங்க நிறுவனங்களும் தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர், மோர், பழச்சாறு, காப்பி, தேநீர் உள்பட அன்னதான(மு)ம் வழங்குவார்கள். ஒவ்வொரு தண்ணீர்ப் பந்தல் வாசலிலும் சிறு சிறு செயற்கை நீரூற்றுகளும் அதன் மேல் விநாயகர், முருகர், அம்பாள், சிவன் என்று விதவிதமான தெய்வச் சிலைகளை வைத்திருப்பார்கள்; சில தெய்வங்களுக்கு, பால் அபிஷேகம் நடைபெறும். சாலையில் வண்ண வண்ணமாக, பெரிய பெரிய ரங்கோலியிட்டிருப்பார்கள். அன்று இரவு வெள்ளிரதம் தண்டாயுதபாணி கோவில் வந்தடைவதற்கு இரவு பத்தரை ஆகிவிடும்.அதன்பின் சாமி இறக்கி ஆலயத்தின் உ


ள்நடையில் நிறுத்தி பக்தர்கள் 'இருவர் பாமரம் வீச, பெரியவர் ஒருவர் கட்டியம் கூறி முருகனின்மேல் பாடுவார்.


இரண்டாம் நாள் விழா

இரண்டாம் நாளான பூசத்தன்று காலையில் நான்கு மணியில் இருந்தே காவடிகள் வர ஆரம்பிக்கும். பினாங்கு சிவன் கோவிலில் இருந்து பால் குடங்கள் புறப்பட்டு கால் நடையாக தண்டாயுதபாணி கோவிலுக்கு வந்து பால் குடங்களைச் செலுத்துவார்கள்.
அன்று முருகப் பெருமானுக்கு மகேசுவர பூஜை அபிசேக ஆராதனைகள் நடந்து கொண்டிருக்கும் போது இன்னொரு புறம் குழந்தைகளுக்கு முடி இறக்கித் தொட்டிகட்டுதல் இடம்பெறும். இரண்டு கரும்புகளை ஒன்றுசேர்த்து இருபுறமும் இருவர் பிடித்துக்கொள்ள பட்டுப் புடவைகளைக் கொண்டு அதில் தொட்டில் கட்டி, புடவையின் மேல் அழகாக பூச்சரங்கள் தொங்கவிட்டு, தொட்டிலுக்குள் குழந்தைகளைப் படுக்கவைத்து அவரவர் சுற்றத்தார் சுற்றிலும் வர மேள தாளத்துடன் வரிசையாக கரும்புத் தொட்டில்கள் முருகனின் சன்னிதியைப் பிரகாரமாய் வந்து வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.பகல் பன்னிரண்டு மணிக்கு ஆராதனையின் உச்சக்கட்டமாக முருகனுக்கு தீபமாகி அதன் பின் அன்னத்திற்கும், மற்றும் சமைத்து வைத்திருக்கும் பாயசம், சாம்பார், ரசம், காய்கறிகள் வகைகளுக்கும் தீபம் காண்பிப்பார்கள்.

அன்னதீபம் காட்டியபிறகுதான் சாப்பாடு, கோவிலுக்குள் (சொக்கட்டான் வடிவத்தில் அமைந்துள்ள இடத்தில்) நாலாபுறமும் இலை போட்டு வந்திருக்கும் அவ்வளவு கூட்டத்திற்கும் மதியம் ஒரு மணிக்கு ஆரம்பிக்கும் சாப்பாட்டுப் பந்தி மாலை நான்கு வரை தொடர்ந்து நடக்கும். காவடிப் பிள்ளைகள் யாவரும் கலந்து கொண்டு உற்சாகமாக சளைக்காமல் பரிமாறுவார்கள்.நாள் முழுதும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் காவடிகள். கடைசிக் காவடி இரவு பன்னிரண்டு மணிக்கு வந்து அதனுடன் பூர்த்தியடையும் அன்றைய பொழுது.


மூன்றாம் நாள் விழா

மூன்றாம் நாள் காலை ('நகரத்தார்கள் பூசத்திற்கு முதல் நாள் இரவு தண்டாயுதபாணி ஆலயத்தில இறக்கி வைத்த) காவடிகளுக்கு 'காவடிப் பாட்டுகள்' பஜனைகள் செய்து நல்ல நேரம் பார்த்து காவடி தூக்கி ஆலயத்தின் அருகில் எதிர்ப்புற சாலையில் அமர்ந்திருக்கும் முனீசுவரரின் சன்னிதியின் முன் சாலையில் சிறிது நேரம் (காவடி) ஆடி அதன் பிறகு தண்டாயுதபாணி ஆலயத்தின் முன்புறம் ஆடுவார்கள்; அதன் பின் உள்ளே பிரகாரத்தில் நான்கு மூலையிலும் சிறிது சிறிது நேரம், அப்படியே பிரகாரமாய் வேலின் முன் வந்து வரிசையாக சன்னிதிக்குச் சென்று காவடியை தண்டாயுதபாணிக்குச் செலுத்துவார்கள்.

பூசத்திற்கு முதல் நாள் இரவு கோவிலுக்குள் வந்த காவடிப் பிள்ளைகள் மூன்றாம் நாள் காவடி செலுத்திய பின்தான் வெளியில் வருவார்கள். அதன் பிறகு தான் அவர்கள் எல்லோரும் குடும்பாத்தாருடன் மலைக்குச்சென்று எந்த இடையூறும் இல்லாமல் நல்லபடியாக காவடி தூக்கிவர துணை நின்ற பால தண்டாயுதபாணிக்கு அபிசேக ஆராதனைகள் செய்து சிதறு தேங்காய் உடைத்து நன்றி தெரிவித்து தரிசனம் பார்த்தும் திரும்புவார்கள்.

அன்று இரவு ஏழு மணிக்கு ஆலயத்தில் இருந்து முருகப் பெருமான் வெள்ளி ரதத்தில் புறப்பட்டு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடவர இரவு முழுதும் கோலாகலமாக வழியெங்கும் தேங்காய்கள் உடைத்து அர்ச்சனைகள் செய்து (நான்காம் நாள்) காலை ஏழு மணிக்கு மீண்டும் பினாங்கு வீதியில் உள்ள கோவில் வீட்டை வந்து சேரும். அதன் பின் ரதத்தில் இருந்து சாமி இறக்கி வீட்டினுள் வைத்து தீப தூபங்கள் காட்டி அதனுடன் இனிதே தைப்பூச உற்சவம் முற்றுப்பெறும்.

Wednesday, 13 January 2016

செய்தி : ஆர்.தசரதன்
ஜன        : 13.01.2016
பிறை


தைப்பூச திருநாளின்
மாண்பை காத்து கொண்டாடுவோம்

பினாங்கு இந்து சங்கம் வலியுறுத்துபண்பாடு,பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் ஆகிய இந்து மத முறைப்படி நடக்கும் தைப்பூச திருவிழாவை பக்தி பரவசத்தொடும்,அப்பெருவிழாவின் மாண்பை காத்து  இந்துப்பெருமக்கள்   கொண்டாட வேண்டும் என்று மாநில இந்து சங்க தலைவர்கள் வலியுறுத்தினர்.இந்த ஆண்டு 24ஆம் தேதி தைப்பூச பெருவிழா நடைபெறுவதை முன்னிட்டு,இந்த விழாவின் போது விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்த்து,பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடன்களை முறையாக செலுத்தி தைப்பூசத்தை திருநாளை கொண்டாட வேண்டும் என்று பினாங்கு மாநில இந்து சங்க தலைவர் பெருமாள் அவர்களின் தலைமையில் நடந்த தைப்பூச   விளக்கக் கூட்டதிற்கு சிறப்பு வருகை மேற்கொண்ட மலேசியா இந்து சங்க தலைவர் டத்தோ மோகன் ஷான் கேட்டுக்கொண்டார்.

இவ்வாண்டு கோலாலம்பூர் தைப்பூசத்தில்  இந்து சங்கத்துடன் இணைந்து 500 தொண்டூழிய குழுவினர் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடுவார்கள்.கடந்த ஆண்டு தைப்பூத்தில் 100 சீன இளைஞர்கள் குப்பகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் அதில் ஒரே ஒருவர் மட்டும் இந்தியர் என்பது குறிப்பிடதக்கது என்று டத்தோ மோகன் ஷான் சொன்னார்.அடுத்தடுத்த ஆண்டுகளில் பினாங்கு மாநில தைப்பூசத்திலும் இந்து சங்க தொண்டூழியர்கள் சேவையை வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று டத்தோ மோகன் ஷான் கூறினார்.

பினாங்கு இந்து சங்க தலைவர் உட்பட பொறுப்பாளர்கள் கருத் துறைக்கையில் திருவிழாவுக்கு வரும் இந்துப் பெருமக்கள் பண்பாட்டு உடையுடன் வரும்படி கேட்டுக்கொண்டனர்.


பட விளக்கம்

தைப்பூச விளக்கவுரை நிகழ்வில் கலந்து கொண்ட டத்தோ மோகன் ஷான்
மற்றும் பினாங்கு இந்து சங்க பொறுப்பாளர்கள்செய்தி : ஆர்.தசரதன்

டிச         : 06.12.2015

புக்கிட்  மெர்தாஜம்


அல்மா தோட்ட தமிழ்ப்பள்ளி கணினி செயலி கண்டுபிடித்து சாதனை

புக்கிட் மெர்தாஜம் மத்திய மாவட்டத்தில் அமைந்துள்ள அல்மா  தோட்ட தமிழ்ப்பள்ளியை சேர்த்த ஆசிரியிர் திரு.சு.புஸ்பநாதன் தலைமையில் கொண்ட குழிவினர்  கணினி செயலி 2.0 கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளனர்.ஆங்கிலம் தமிழ் தகவல் தொழிநுட்ப பொருளகராதியான இந்த செயலி 2.0 ஆசிரியர்கள்,மாணவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பயன் படுத்தலாம் என்று ஆசிரியர் திரு.சு.புஸ்பநாதன் கூறினார்.

இந்த கண்டுபிடிப்பானது உலகில் உள்ள 160 நாடுகளை சேர்த்தவர்கள் பதிவேற்றம் செய்து இதை பயன்படுத்தலாம் என்று அவர் மேலும் சொன்னார் .இணையா உளவில் தற்போது செயல்பாட்டில் இருக்கும் இந்த செயலி தற்போது 1000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து பயன்பாட்டில் இருப்பதாக விவரித்த ஆசிரியர் .சு.புஸ்பநாதன் இது அல்மா தோட்ட தமிழ்ப்பள்ளிக்கு கிடைத்த வெற்றியாகவும், சாதணையாகவும்  கருதுவதாக   அவர் கருத்துரைத்தார்.

இந்த செயலியின்  வடிவமைப்புக்கு ஆசிரியர்கள் திரு.புஸ்பநாதன் சுப்ரமணியம்,திருமதி நிர்மலா பாலகிருஷ்ணன்,திருமதி சுகந்தி சுடலை முத்து மற்றும்  மாணவர்கள் நிவேஷ் சரவணன்,சர்வேஸ்வரன் மணிமாறன்,நளினி பார்தீபன் மற்றும் நேரோஷ செல்லத்துரை பெருமளவில் உதவிகளையும் பங்களிப்பினையும் வழங்கி ஆதரவளித்தனர் என்று ஆசிரியர் .சு.புஸ்பநாதன் கூறினார்.

இந்த செயலியை உருவாக்க ஆலோசனைகளை உத்தமம் பினாங்கு மாநில நிகராளி திரு.புகழேந்திரன் சண்முகம் மற்றும் நிதியுதவி வழங்கிய ஆசிரியை திருமதி காந்திமதி இராகவன் ஆகியோருக்கு தமது நன்றியை பதிவு செய்வதாக நண்பனுக்கு வழங்கிய அறிக்கை ஒன்றில் ஆசிரியர் .சு.புஸ்பநாதன் குறிப்பிட்டிருந்தார்.

நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் கடந்த காலங்களில் பல அறிய சாதணைகளை புரிந்து வருகின்றனர்,அவர்களின் சாதனணயை கௌரவிக்கும் விதத்தில் இந்திய அரசு சார்பற்ற இயக்கங்கலும்,சமுதாயமும் பக்க பலமாக இருந்தால் நமது தமிழ்ப்பள்ளிகளில் சாதணைகல் மேலும் உயர்வடையும் என்பது திண்ணம்.இந்த செயலியை பெற KANINI AGHARATHI என்று குறிப்பிட்டு பதிவிறக்கம் செய்யலாம்

பட விளக்கம்


ஆங்கிலம் தமிழ் தகவல் செயலியை உருவாக்கிய ஆசிரியர் திரு சு.புஸ்பநாதன் மற்றும் ஆசிரியர்களும் மாணவர்களும்

பயன்பாட்டில் இருக்கும் மாதிரி செயலியின் தோற்றம்


  
 
 

 
1.நேவ􁿃 சரவண􁾹

2.ச􁾽வ􁿄வர􁾹 மதிவாண􁾹

3.நளினி பா􁾽􁾷தீப􁾹

4.நிேராஷா ெச􁾿ல􁾐ைர
 


 
 


Tuesday, 12 January 2016

செய்தி : ஆர்.தசரதன்
ஜன        : 14.01.2016
புக்கிட் மெர்தாஜம்இந்து இளைஞர் பேரவை நாக.பஞ்சுக்கு எதிராக போலீஸ் புகார்.


அண்மையில் இந்து மத திருமணங்களை மிகவும் கொச்சையாக வாட்ஆப் வாயிலாக சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்ட மலேசியா மனிதநேய திராவிட கழக தலைவர் நாக.பஞ்சு நாகமுத்துக்கு எதிராக மலேசியா இந்து  பேரவை சார்பாக நேற்று புக்கிட்  மெர்தாஜம் காவல் துறையில் போலீஸ்  புகார் ஒன்றை செய்தது.இந்த போலீஸ் புகாரை அப்பேரவையின் தேசிய தலைவர் ந.மகேந்தரன் செய்திருந்தார்.

இந்து மத கொள்கைகளுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்ட நாக.பஞ்சு,இந்து திருமணங்கள் விபச்சார திருமணங்களுக்கு ஒப்பானது என்ற குற்றச்சாட்டை கூரியுள்ள நாக பஞ்சுவின் கருத்தை  பேரவை மிக கடுமையாக கருதுவதாக நண்பனுக்கு வழங்கிய அறிக்கை ஒன்றில் ந.மகேந்திரன்  தெரிவித்தார்

இந்து மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் இந்த நாக பஞ்சுவின் விஷமத்தனமான கருத்தானது,சமூக மத்தியில் பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால்,அரச மலேசியா போலீஸ் துறை இந்த சம்பவம் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்க பட்டு தண்டிக்க  வேண்டும் என்று. இந்து இளைஞர் பேரவை சார்பில் அவர் கேட்டுக்கொண்டார்.


இதனிடையே இந்த சம்பவம் தொடர்பில் நாடு தழுவிய நிலையில் உள்ள மாநில இந்து இளைஞர்கள் பேரவை மாநில தலைவர்கள்,நாக பஞ்சுவுக்கு எதிராக போலீஸ் புகார்களை செய்ய மலேசியா இந்து இளைஞர் பேரவை பணித்திருப்பதாக ந.மகேந்திரன் தெரிவித்தார்


பட விளக்கம்

போலீஸ் புகார் நகலுடன் இந்து இளைஞர் பேரவை தேசிய தலைவர்
ந.மகேந்திரன்
செய்தி : ஆர்.தசரதன்
ஜன        : 13.01.2016
ஜார்ஜ்டவுன்


இடைநிலை பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடம்

கல்வி அமைச்சுக்கு பினாங்கு எழுத்தாளர் சங்கம் கோரிக்கை


இடைநிலை பள்ளிகளில் இந்திய மாணவர்கள் தமிழை ஒரு பாடமாக எடுக்கும் நிலை மிகவும் பரிதாப நிலையை எட்டியுள்ளது.எதிர்காலத்தில் தமிழ் இடைநிலை பள்ளிகளில் தொலைந்து போவதை காப்பாற்ற, இடைநிலை பள்ளிகளில்  தமிழ் மொழி பாடத்தை கட்டாய பாடமாக இந்திய மாணவர்கள் எடுக்க வேண்டும் என்ற   நிலையை    கல்வி அமைச்சு நிலை நிறுத்த வேண்டும் என்று  பினாங்கு மாநில எழுத்தாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்தது.

இடைநிலைப்
பள்ளிகளில் தமிழ் மொழியை காப்பது  நமது கடமை என்றும் ,மாணவர்கள் ஆசிரியர்கள்,பெற்றோர்கள் மற்றும் சமூதாயம் தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும்   நாட்டின் பலம் பெரும் எழுத்தாளர் கோ.புண்ணியவான் இக்கருத்தை ஆதரிப்பதாக கூறினார்.

அண்மையில் ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம் கவி பேரரசு வைரமுத்து  அவர்களின் இலக்கிய சுற்றுலா ஒன்றை மேற்கொண்ட பினாங்கு எழுத்தாளர் சங்கம்,தங்களின் கோரிக்கையை தமிழ் மொழி இந்நாட்டில் இடைநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் மத்தியில் தமிழ்  ஒரு பாடமாக எடுக்கும் நிலை மோசமாக இருப்பதால்,அதனை களைய கல்வி அமைச்சுக்கு போதன முறையில் தமிழை கட்டைய பாடமாக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தது

மொழி அழிந்தால் இனமே அழிந்து விடும் என்ற கருத்துக்கு ஒப்ப,இடை நிலை பள்ளிகளில் தமிழ் மொழி பாடம் அழியும் நிலையை காப்பாற்ற அனைவரும் தங்களின் பங்களிப்பை ஆற்ற வேண்டும் என்று மாநில எழுத்தாளர் சங்க செயலாளர் செ.குணாளன் இக்கருத்துக்கு சங்கம் அதரவு தருவதாக சொன்னார்.


பட விளக்கம்


1.பினாங்கு மாநில எழுத்தாளர் சங்க பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள்

2.கவிபேரரசு வைரமுத்துவுடன் பினாங்கு மாநில எழுத்தாளர் சங்க பொறுப்பாளர்கள்