செய்தி : ஆர்.தசரதன்
ஜன : 13.01.2016
ஜார்ஜ்டவுன்
இடைநிலை பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடம்
கல்வி அமைச்சுக்கு பினாங்கு எழுத்தாளர் சங்கம் கோரிக்கை
இடைநிலை பள்ளிகளில் இந்திய மாணவர்கள் தமிழை ஒரு பாடமாக எடுக்கும் நிலை மிகவும் பரிதாப நிலையை எட்டியுள்ளது.எதிர்காலத்தில் தமிழ் இடைநிலை பள்ளிகளில் தொலைந்து போவதை காப்பாற்ற, இடைநிலை பள்ளிகளில் தமிழ் மொழி பாடத்தை கட்டாய பாடமாக இந்திய மாணவர்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையை கல்வி அமைச்சு நிலை நிறுத்த வேண்டும் என்று பினாங்கு மாநில எழுத்தாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்தது.
இடைநிலைப்
இடைநிலைப்
பள்ளிகளில் தமிழ் மொழியை காப்பது நமது கடமை என்றும் ,மாணவர்கள் ஆசிரியர்கள்,பெற்றோர்கள் மற்றும் சமூதாயம் தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் நாட்டின் பலம் பெரும் எழுத்தாளர் கோ.புண்ணியவான் இக்கருத்தை ஆதரிப்பதாக கூறினார்.
அண்மையில் ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம் கவி பேரரசு வைரமுத்து அவர்களின் இலக்கிய சுற்றுலா ஒன்றை மேற்கொண்ட பினாங்கு எழுத்தாளர் சங்கம்,தங்களின் கோரிக்கையை தமிழ் மொழி இந்நாட்டில் இடைநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் மத்தியில் தமிழ் ஒரு பாடமாக எடுக்கும் நிலை மோசமாக இருப்பதால்,அதனை களைய கல்வி அமைச்சுக்கு போதன முறையில் தமிழை கட்டைய பாடமாக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தது
மொழி அழிந்தால் இனமே அழிந்து விடும் என்ற கருத்துக்கு ஒப்ப,இடை நிலை பள்ளிகளில் தமிழ் மொழி பாடம் அழியும் நிலையை காப்பாற்ற அனைவரும் தங்களின் பங்களிப்பை ஆற்ற வேண்டும் என்று மாநில எழுத்தாளர் சங்க செயலாளர் செ.குணாளன் இக்கருத்துக்கு சங்கம் அதரவு தருவதாக சொன்னார்.
பட விளக்கம்
1.பினாங்கு மாநில எழுத்தாளர் சங்க பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள்
2.கவிபேரரசு வைரமுத்துவுடன் பினாங்கு மாநில எழுத்தாளர் சங்க பொறுப்பாளர்கள்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home