செய்தி : ஆர்.தசரதன்
ஜன : 14.01.2016
புக்கிட் மெர்தாஜம்
இந்து இளைஞர் பேரவை நாக.பஞ்சுக்கு எதிராக போலீஸ் புகார்.
அண்மையில் இந்து மத திருமணங்களை மிகவும் கொச்சையாக வாட்ஆப் வாயிலாக சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்ட மலேசியா மனிதநேய திராவிட கழக தலைவர் நாக.பஞ்சு நாகமுத்துக்கு எதிராக மலேசியா இந்து பேரவை சார்பாக நேற்று புக்கிட் மெர்தாஜம் காவல் துறையில் போலீஸ் புகார் ஒன்றை செய்தது.இந்த போலீஸ் புகாரை அப்பேரவையின் தேசிய தலைவர் ந.மகேந்தரன் செய்திருந்தார்.
இந்து மத கொள்கைகளுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்ட நாக.பஞ்சு,இந்து திருமணங்கள் விபச்சார திருமணங்களுக்கு ஒப்பானது என்ற குற்றச்சாட்டை கூரியுள்ள நாக பஞ்சுவின் கருத்தை பேரவை மிக கடுமையாக கருதுவதாக நண்பனுக்கு வழங்கிய அறிக்கை ஒன்றில் ந.மகேந்திரன் தெரிவித்தார்
இந்து மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் இந்த நாக பஞ்சுவின் விஷமத்தனமான கருத்தானது,சமூக மத்தியில் பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால்,அரச மலேசியா போலீஸ் துறை இந்த சம்பவம் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்க பட்டு தண்டிக்க வேண்டும் என்று. இந்து இளைஞர் பேரவை சார்பில் அவர் கேட்டுக்கொண்டார்.
பட விளக்கம்
ந.மகேந்திரன்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home