101 குழந்தைகளுக்கு காதணி விழா
பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவை ஏற்பாட்டில் எதிர்வரும் 29.11.2009ஆம் நாள்,காலை மணி 8.00க்கு, இங்குள்ள பினாங்கு நகரத்தார் திருமுருகன் ஆலயத்தில் 101 குழந்தைகளுக்கு காதணி விழா சிறப்பாக ஏற்பாடு செய்யபட்டுள்ளது.இந்த விழாவில் 5 முதல் 7 வயதுடைய குழந்தைகள் கலந்து சிறப்பு செய்வர்.
இந்நிகழ்வில் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஆசிரம குழந்தைகளும்,வசதி குறைந்த இந்திய குடும்பங்களின் சேர்ந்த குழந்தைகளும் கலந்து கொள்வார்கள் மலேசியா திருநாட் டின் முதன் முறையாக அதிகமான குழந்தைகள் பங்கு பெறும் விழாவாக இந்த காதணி விழா நடைப்பெறுகின்றது.
கெரக்கான் கட்சியின் மாநில தலைவர் டத்தோ,டாக்டர் தெங் ஹாக் நான் அவர்கள் திரப்புரையாற்றி அதிகாரபூர்வமாக நிகழ்ச்சியை தொடக்கி வைப்பார்.இந்நிகழ்வில் சிறப்பு பிரமுகர்களாக மலேசிய இந்து இளைஞர் பேரவையின் தேசிய தலைவர் கே.ராச்செல்வன்,பினாங்கு மாநில மஇகா தொடர்புகுழுவின் தலைவர் பி.கே.சுப்பையா,பினாங்கு மாநில இந்து சங்க தலைவர் டாக்டர் ரவிசந்திரன்,பத்து கவான் நாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் அ.மோகன் மற்றும் சிலர் கலந்து கொள்வார்கள்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home