பிறையில் மூன்று தொழிற்ச்சாலைகள் தீக்கிரையானது
பிறை
ஜூலை 09.07.2017
ஆர்.தசரதன்
பிறை தாமான பிளாங்கி பகுதியில் உள்ள மூன்று தொழிற்சாலைகள் நேற்று காலை 11.00 மணியளவில் நடந்து தீ விபத்தில் தீக்கிரையானது.
பிளாஸ்டிக் ரக தொழிற்சாலையான அந்த தொழிற்சாலைகளில் ஒன்றில் தீ ஏற்பட்டதாக பினாங்கு மாநில தீயணைப்பு பாதுகாப்பு துறை பேச்சாளர் கூறினார்.
காலை மணி 11.00 மணியளவில் பெறப்பட்ட தொலை அழைப்பை தொடர்ந்து 35 தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நடந்த இடத்துக்கு விறைத்து தீயை அணைக்க முற்பட்டதாக மேலும் அவர் சொன்னார்.
20 சதவீத அளவிலான வகையில் தீயினால் அந்த மூன்று தொழிற்சாலைகளும் பாதிப்புக்குஉள்ளதாக கூறிய அவர்,45 மணி போராட்டத்துக்கு பிறகு தீயை முற்றாக அணைத்ததாக அவர் சொன்னார்.
இந்த தீ சம்பவத்தில் எவ்வித உயிர்களும் பாதிக்கப்படவில்லை என்று குறிய அவர் தீ ஏற்பட்டதிற்கான காரணம் மாற்று சேத மதிப்பு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
கரும் மேக புகைகள் சூழ்ந்த நிலையில்,பினாங்கு தீவு பகுதியிலிருந்து பல கிலோ மீட்டர் தூரம் இதை காண முடிந்தது என்பது குறிப்பிடதக்கது.
பட விளக்கம்
தீயினால் பாதிப்படைந்த தொழிற்சாலைகலலிருந்து ஏற்பட்டது ஏற்பட்ட புகை மூட்டம்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home