செய்தி : ஆர்.தசரதன்.
பிப் : 14.02.2016
ஜார்ஜ்டவுன்
நாசிக் கண்டார் சாயிட் அம்மின் கொலை சம்பவம்
போலீசார் தேடுதால் நடவடிக்கை ஆரம்பம்
நாசிக் கண்டார் லைன் கிலியர் உரிமையாளர் சாயிட் அம்மின் கொலை சம்பவத்தில் கொலையாளியை தேடும் நடவடிக்கையை போலீசார் முடக்கியிருப்பதாக தெரிவிக்கபட்டது.கொலையுண்ட பகுதியில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமெராவில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் 20 வயது மதிக்க தக்க இரு இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடுதால் வேட்டைதனை ஆரம்பித்திருப்பதாக வடகிழக்கு மாவட்ட போலீஸ் துணை ஆணையர் மியோர் பாரிடலத்ராஷ் நேற்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.
இந்த கொலை சம்பத்தில் தகவல் சாதணங்களில் தவரான தகவலை வழங்கிவரும் தரப்பினர் தங்களின் நடவடிக்கையை நிறுத்திக் கோள்வதுடன்,எத்தகைய அனுமனமற்ற தகவல்கள் பரப்பி பொது மக்களை குழப்ப வேண்டாம் என்றும் அவர் சொன்னார்.
தகவல் சாதணங்களில் இதற்க்கு முன் வாக்கு வாதத்தில் ஈடு பட்ட சாலை போக்குவரத்து அதிகாரி கொலை சம்பவத்தில் ஈடுபட்டுளார் என்றும்,இன்னும் சிலர் சாயிட் அமின் நடத்திய உணவகத்தில் போட்ட போட்டி இருந்ததும் என்றும் என்னும் சிலர் அரசியல் நோக்கத்துக்காக அவர் கொள்ளப் பட்டர் என்றும் பல விடத்தில் வதந்திகளை பரப்பி வருவதாக மியோர் பாரிடலத்ராஷ் கூறியதுடன் இவை அனைத்தும் உண்மையில்லை என்றும் அவர் தெளிவுப்படுத்தினார்.
சம்பவம் நடந்த இடத்தில் ரகசிய கண்காணிப்பு கேமராவில் 20 வயது மதிக்க தக்க உள்ளூர் ஆடவர்கள் இருவரை போலீசார் அடையாளம் கண்டிருப்பதால் அவர்களை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதால் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மேலும் அவர் தெரிவித்தார்.
பட விளக்கம்
போலீஸ் துணை ஆணையர் மியோர் பாரிடலத்ராஷ்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home