திங்கள், 9 ஏப்ரல், 2018

இந்திய மாணவர்களிடையே தமிழ்  மொழியை வளர்க்க உதவிய கவிப்படும் தென்றல் 

பினாங்கு இந்திய 
அண்மையில் இங்கிருக்கும் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்திய மாணவர்களின் கூட்டு முயற்சியில் 6ஆம் ஆண்டாக வழி நடத்தப்பட்ட ‘கவிபாடும் தென்றல்' என்ற நிகழ்ச்சிக்கு சிறப்புப் பிரமுகராக புலவேந்திரன் 
வருகையளித்திருந்தபோது, இந்திய மாணவர்கள் சமுதாய நலன் கருதி, பல்வேறான துறைகளில் சிறப்பான ஆற்றலை புலப்படுத்துவது அவசியமென்று வேண்டுகோள் விடுத்தார்.

பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழ் மாணவர்கள் தமிழ்மொழி சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்டு, தமிழுக்கு தொண்டாற்றுகின்ற அதே வேளையில் இனப் பற்றுடன் செயல்பட்டு, மொழி வளர்ச்சிக்கு பங்காற்றும் விதமாக அர்ப்பண உணர்வு கொண்டிருக்க வேண்டுமென்று, அவர் கேட்டுக் கொண்டார்.


      இந்திய மாணவ்ர்களிடம் குடி கொண்டிருக்கும் அபாரத் திறனை வெளிக் கொணரும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட இந்த ‘கவிபாடும் தென்றல்’ நிகழ்ச்சியில் பேச்சுப் போட்டி, எழுத்துப் போட்டி, புதிர்ப் போட்டி, சிறுகதைப் போட்டி, கவிதைப் போட்டி, ஆகிய  ஐந்திறன் கொண்ட போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.


       பினாங்கு மாநிலத்துடன், கெடா மற்றும் பேராக் மாநிலங்களைச் 
சேர்ந்த தமிழ் மற்றும் தேசிய இடைநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்று தங்களின் ஆற்றலை சிறப்பாக வெளிப்படுத்தி பரிசுகளை வாகை சூடிய பட்சத்தில் வெற்றியாளர்களுக்கு டத்தோ [உலவேந்திரனும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் மாணவர் மேம்பாட்டுப் பிரிவின் துணைப் பதிவதிகாரியும் இணைந்து, பரிசுகளை வழங்கி உற்சாகப்படுத்தினர்.

                                               ——————


1) ‘கவி பாடும் தென்றல்’ போட்டி நிகழ்ச்சியினை டத்தோ புலவேந்திரனுடன் அதன் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் சுதர்சன் சந்திரன் திறந்து வைப்பதைக் காணலாம்.2) மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் தமிழ் 
மாணவர்களால் நடத்தப்பட்ட ‘கவிபாடும் தென்றல்' நிகழ்ச்சியில் வாகை சூடிய மணவர்களுக்கு  டத்தோ புலவேந்திரன் பரிசளிக்கும் காட்சி.

                                --------------------------------------------------------

புதன், 7 பிப்ரவரி, 2018

Ramani Rajagobal Blogspot

சனி, 3 பிப்ரவரி, 2018

ஆட்டோமோபில் தொழில் துறையில் இந்தியர்கள் ஈடுபட அறியுறுத்து 

மேலாளர் ரமேஷ் சந்திரன் அறைகூவல் 

பாயான் லெப்பாஸ் 

ஆர்.தசரதன் இந்தியர்கள் ஆட்டோமோபில் துறையில் ஈடுபாடு காட்டுவது அவசியம் என்று இயோன் ஓட்டோ மார்ட் கார்  நிறுவன  மேலாளர் ரமேஷ் சந்திரன் வேண்டுக்கோள்  விடுத்தார்.எதிர்காலத்தில் ஓட்டமோபில் தொழில் துறை அதிக மேம்பாடும்,வளர்ச்சியும்  வரவேற்பும் பெரும் என்பதால் அதனை இந்தியர்கள் நன்குப் பயன்படுத்திக்கொள்ள  வேண்டும் என்பதுடன்  அதன் சம்பந்தமான  பட்டப்படிப்பில் இந்தியழமாணவர்கள்   கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நாட்டைப் பொருத்தவரை அதிகமான கார் தொழிர்சாலைகள் வெளிநாட்டினரால் முதலீடு செய்யப்படுள்ளது என்றும் ஜப்பான் நாட்டின் கார் தயாரிப்பு நிறுவனமான மிட்சுபிஷி ரக கார் மலேசியர்கள் விரும்பும் கார் என்பதுடன்,அதில் நாடு தழுவிய நிலையில் ஹாய் கோம் நிறுவன அக காரின்  வெளியீட்டு நிருவனமாக திகழ்ந்து வருதாகவும அவர் கூறினார்.

இந்தியர்கள் மற்ற இனங்களை காட்டிலும் மிகுந்து குறைந்த நிலையில் கார் சம்பந்தமான  தொழில்துறைகளில் ஈடுபாடு காட்டுவது குறைந்து  வருவதை வருத்தத்துடன் கூறிய அவர்,கொஞ்சம் அக்கறையும் அத்தொழில் நுட்பத்தை கற்றுக்கொண்டால் வளமான வழக்கை என்பது நிச்சயம் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆட்டோமோபைல் துறை என்பது ஒரு சிறந்த தொழில் துறை அதில் பலமடங்கு பிரிவுகள் இருப்பதால்.இந்திய மாணவர்கள் அத்துறையில் மிளிர முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.திறன் பயிற்சிகளை கொண்டுள்ள ஒருவருக்கு கார் தயாரிப்பு நிறுவனங்களின் கீழ் செயல்படும் கார் பட்டறைகள் நல்ல சம்பளம் வழங்குவதுடன்,பல சலுகைகளையும் வழங்குகின்றன அதை நமது இந்திய சமுதாய மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு உதவு முன்வர வேண்டும் என்றும் 20 ஆண்டுகாலமாக ஆட்டோமோபைல் தொழில் துறையில் பரந்த அனுபம் பெற்ற ரமேஷ் சந்திரன் மலேசிய நண்பனிடம் கூறினார்.

அக்கால கார் பழுது பார்ப்பு துறைக்கும் இப்பொழுது மேம்பாடு கண்டுள்ள தொழில் நுட்ப வளர்ச்சியானது நிபுணத்துவ நிலையில் கார்கள்  பழுதுகளை மின்னியல் முறையிலான முறைக்கு மாற்றம் கண்டுள்ளது என்பதால் அந்த புதிய துறையில் நிபுணத்தும் பெற்றால் மட்டுமே கார்களை பழுது கண்டுபிடித்து பழத்துப்பார்க்க முடியும் என்ற நிலை உருகியிருப்பதாக அவர் விவரித்தார்.

 

நேற்று இங்குள்ள பாயான் லெப்பாஸ் கார் தொழில் பேட்டை பகுதியில் மிட்சுபிஷி ரக கார்களை ஓட்டி பார்க்கும் நிகழ்வில் கலந்துக் கொண்ட அவர் தங்களின் நிறுவனம் வழங்கும் வேலை வாய்ப்பு,தங்கள் நிறுவனம் கொண்டுள்ள கார்களுக்கான பழுது பார்ப்பு சேவைகள்,வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சலுகைகள் ஆகியவற்றை எடுத்துரைக்கையில் அவர்  தமது கருத்துக்களை இந்திய சமூக இளைஞர்கள் தேர்வு செய்ய கார் தொழில் நுட்பத்துறை கை  கொடுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நாட்டின் மோட்டோர் ஸ்போர்ட் கார் பந்தய துறையில் ஜொலிக்கும் பெண் வீரரும் மிட்சுபிஷி கார் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தூதர் லியோனா சின்,மிட்சுபிஷி கார் நிறுவன  வாடிக்கையாளர் சேவை தலைமை மேலாளர் ஜிவேந்திரன் சிவா ஆகியோர் உடன் கலந்துக் கொண்டனர்  என்பது குறிப்பிடதக்கது.கார் பற்றிய துறைதனில்ல ஈடுபாடு காண நினைக்கும் இந்திய இளைஞர்கள் ஆலோசணைகள் பெற ரமேஷ் சந்திரன் அலுவலக தொலைபேசி என் 04-6421988 என்ற என்னில் தொடர்புக் கொள்ளலாம்.
திங்கள், 16 அக்டோபர், 2017


தீபாவளி நல் வாழ்த்துக்கள் 


அன்பு தந்தையார் ராஜகோபால் மீனாட்சி,ஊடக துறை நண்பர்கள்,டத்தோ டாத்தின், அன்பு உடன் பிறப்புகள்,சகோதர சகோதரிகள் நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் மங்கள பொங்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.மலேசிய நண்பன் சார்பிலும் எனது தீபாவளி வாழ்த்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன்.இந்த நன்னாளில் அனைவரும் மகிழ்ச்சியாகவும் அணைத்து நலன்களை பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தி வணங்குகிறேன் 

அன்புடன் 

ஆர்.ரமணி மாலா @தசரதன் குடும்பத்தினர் 
பினாங்கு 

திங்கள், 25 செப்டம்பர், 2017

மருத்துவர் ஜெய  ஸ்ரீ சீனிவாசன் இல்ல நவராத்திரி விழா  கொண்டாட்டம்

ஜார்ஜ்டவுன்

செப் 27.09.2017

ஆர்.தசரதன்


பினாங்கு பந்தாய்  தனியார் மருத்துவமனையின் புற்று நோய் பிரிவு  மருத்துவர் நிபுணர்   ஜெய ஸ்ரீ   சீனியவாசன்  அவர்களின் இல்லத்தில் நடந்த நவராத்திரியை விழாவில் திறளானோர் கலந்து கொண்டனர்.அண்டை அயலார் சுற்றத்தார் வழங்கிய கலை நயம் கொண்ட சிற்பங்கள்  கொலுவில் வைக்கப்பட்ட நிலையில் நவராத்திரி விழாவில் கலந்துக் கொண்ட வருகையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஜாலான் ஜெலுத்தோங்கில்  அமைந்துள்ள மருத்துவர் ஜெய ஸ்ரீ அவர்களின்  இல்லத்தில் இந்த நவராத்திரி கொண்டாட்ட நிகழ்வில் சிறப்பு அங்கமாக முருகனின் ஆறு படை வீடுகளின் தனித்துவத்தை விளக்கும்  சிற்ப அலங்கரங்கள்   அணிவகுத்து  நின்ற காட்சி காண்போரை கவர்ந்தது.

வருடம் தோறும் ஒரு குறிப்பிட்ட   கடவுளின் வரலாற்றை விளக்கும் வகையில் கலை  நய சிற்பங்களை அழகுற அலங்கரம் செய்து வரும் மருத்துவர் ஜெய ஸ்ரீ சீனிவாசன் குடும்பத்தினர்,அழைக்கப்பட்ட வருகையாளர்களுக்கு  நவராத்திரி விழா வழிபாட்டில் கலந்துக் கொண்டு பிராத்தனையில் ஈடுபடுத்துவதுடன், பல்வேறான அரு  சுவை உணவுகளை வழங்கி வருகையாளர்களின் நன்மதிப்பை பெற்று திகழ்கிறார்.

நவராத்திரி விழாவில் கலந்து கொள்பவர்களுக்கு தேங்காய் ,பழம்,பாக்கு வெற்றிலை  போன்ற  மங்களகரமான பொருட்களை  இன்முகத்துடன் கொடுத்து வருகை மேற்கொண்டவர்களை மனதை நிறைவு செய்து ஒவ்வொருவரையும் வழி  அனுப்பி வைக்கும் முறையானது   அவரின் உயரிய குண நலன்களை பறை சாற்றுகிறது என்பது குறிப்பிடதக்கது.

பினாங்கை  பொது பஜனை குழுவை சேர்த்த  ராமா என்பவற்றின் இன்னிசை திருமுறை பாடல்கள்   பாடி  நவராத்திரி விழா நிறைவடைந்தது.இந்த நவராத்திரி சிறப்பு நிகழ்வில் ஸ்ரீ  டெலிமா சட்டமன்ற உறுப்பினர்  நேதாஜி இராயர் உள்ளிட்ட அழைக்கப்பட்ட சிறப்பு பிரமுகர்கள்   கலந்துக் கொண்டு  சிறப்பித்தனர்.


பட விளக்கம்

நவராத்திரி விழாவில் கலை நயம் கொண்ட சிற்பங்கங்கள் கொலுவில் வைக்கப்பட்டுள்ள  காட்சி

நவராத்திரி விழாவில் கலந்துக் கொண்டவர்களின் ஒரு பகுதியினர்.

மருத்துவர் ஜெய ஸ்ரீ சீனிவாசன் மற்றும் சிறப்பு பிரமுகர் நேதாஜி இராயர் அவர்கள் 
செவ்வாய், 19 செப்டம்பர், 2017

பினாங்கு மாநில முத்தமிழ் சங்கம் சேவையாளர்களுக்கு கௌரவிப்பு 

செபராங் ஜெயா 

செப்   21.09.2017

ஆர்.தசரதன் 

பினாங்கு மாநில முத்தமிழ் சங்க ஏற்பாட்டில் அண்மையில் இங்குள்ள செபராங் ஜெயாவின் உள்ள ஜெயா கேட்டரிங் உணவகத்தில் நடந்த விருந்தோம்பல் நிகழ்வில்,பினாங்கு ஆளுநர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பட்டம் பெற்ற சங்கத்தின் சேவையாளர்களுக்கு சிறப்பு  செய்யும் நிகழ்வு சிறப்புடன் நடைப்பெற்றது.

இந்நிகழ்வுக்கு மாநில முத்தமிழ் சங்கதின் தலைவர் முத்தமிழ் மணி க.உ.இளங்கோவன்  அவர்களின் தலைமையில் நடந்தது.இந்நிகழ்வில் உரையாற்றிய க.உ.இளங்கோவன் அவர்கள் சேவையாளர்களின் சேவையை  என்றும் அங்கிகரித்த அவர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதன் வழி அவர்களின் சேவைகளை சமுதாயதுக்கு மேலும்  வழங்க ஊக்கம் அளிக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்நிகவுக்கு சமூக சேவையாளர் டத்தோ மேஜர் நவநீதம் அவர்கள் ஆதரவு வழங்கி உரை யாற்றினார்.அவரின் உரையில் சேவையாளர்களை பாராட்டுவது அவர்கள் சமூக சேவையில் பல காலமாக செய்த சேவைகளுக்கு பாராட்டு ஒரு அங்கிகாரமாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சிறப்பு பிரமுகர்களாக தஞ்சோங் தமிழ் முஸ்லீம் சங்க தலைவர் நசீர் முகைதீன்,பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டுக் கழக தலைவர் எம்.பாலன்,புக்கிட் மெர்தாஜாம் தமிழ் இளைஞர் மணிமன்ற காப்பாளர் சேகர் ராமையா,சுங்கை புயூ மகா மாரியம்மன் ஆலய தலைவர் பெரியவர் முத்தையா மற்றும் அழைக்கப்பட்ட பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பைத்தனர்.

இதனிடையே சபினாங்கு மாநில முத்தமிழ் சங்கத்தின் சார்பில் எஸ்.இராமச்சந்திரன்,எம்.பழனியாண்டி,நா.வேணுகோபால் எம்.பூங்கொடியாள் இளங்கோவன்,இந்திய மேம்பாட்டு கழகத்தின் திருமதி தேவி,மற்றும் மலேசிய நண்பன் பத்திரிக்கை நிருபர்  ஆர்.தசரதன் மற்றும் தமிழ் மலர்  செய்தியாளர்  டி.ஆர்.ராஜா ஆகியோர் சிறப்பு செய்யப்பட்ட சேவையாளர்கள்  என்பது குறிப்பிடதக்கது.

 பட விளக்கம் 


சிறப்பு செய்யப்பட்ட சேவையாளர்களுடன் ஏற்பாட்டுக் குழுவினர் உடன் க.உ.இளங்கோவன் மற்றும் டத்தோ நவநீதம் 


திங்கள், 14 ஆகஸ்ட், 2017

ஆ.மோகனிஸ்வரன் எலெக்ட்ரிக்கள் துறையில் டிப்ளமோ பெற்றார் 


புக்கிட் மெர்தாஜம் 

ஆக.  : 16.08.2017

ஆர்.தசரதன் 

புக்கிட் மெர்தாஜம் மத்திய மாவட்டம் புக்கிட் தெங்காவை  சேர்ந்த மோகனிஸ்வரன் த/பெ ஆறுமுகம் எலெக்ட்ரிக்கள் ஏர்கோர்ன் துறையில் டிப்லோமா  பெற்றார்.புக்கிட் மெர்தாஜமில் அமைந்துள்ள இளைஞர் விளையாட்டு அமைச்சின் தொழில் நுட்ப கல்லூரியில் அவர் அப்பட்ட படிப்பை முடித்தார்.அண்மையில் புத்ராஜெயாவில் உள்ள பிஐசிசி மாநாட்டு மண்டபத்தில்  நடந்த பட்டமளிப்பு விழாவில் அவருக்கு எலெக்ட்ரிக்கள் மற்றும் ஏர்கோர்ன் துறைக்காண  டிப்ளோமா பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.தமது வெற்றிக்கு அர்ப்பணிப்பை தந்த தமது தாயார் பத்மா ரத்னம் அவர்களுக்கும்,தமது கல்லூரி ஆசிரியர்களுக்கும் அவர் தமது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் மலேசிய நண்பனிடம் கூறினார்.

பட விளக்கம் 

மோகனிஸ்வரன் த/பெ ஆறுமுகம்